Sunday, May 9, 2021

கவிதை இலக்கியம் வினாடி வினா

 

தமிழ்ப் புதுக்கவிஞர்கள் - வினாவங்கி

 

  1.  முதல் கட்டுப்பாடற்ற கவிதை எது? புல்லின் இதழ்கள்
  2. புல்லின் இதழ்கள் யாரால் இயற்றப்பட்டது? வால்ட்விட்மன்
  3. முதன்முதலில் கட்டற்ற கவிதை எங்கு எழுதப்பட்டது? அமெரிக்கா
  4. கட்டற்ற கவிதை எவ்வாறு எழுதப்பட்டது? யாப்பிலிருந்து விடுபட்டது  என்னும் பொருளில்  [Free verse]
  5. இங்கிலாந்தில் இயற்றப்பட்ட முதல் கட்டற்ற கவிதை நூல் யாது? பாழ் நிலம் [Waste Lan]
  6. பாழ் நிலத்தின் ஆசிரியர் யார்? டி. எஸ். எலியட்
  7. பாழ் நிலம் பெற்ற பரிசு யாது? நோபல் பரிசு
  8. தமிழில் முதன் முதலில் இயற்றப்பட்ட கட்டற்ற கவிதையை எழுதியது யார்? மகாகவி பாரதியார்
  9. பாரதியார் யாரால் தாக்கம் பெற்று கட்டற்ற கவிதை எழுதினார்? வால்ட் விட்மன்
  10. முதன் முதலில் சோதனை முயற்சியாக புதுக்கவிதை எழுதியவர் யார்? ந. பிச்சமூர்த்தி
  11. ந. பிச்சமூர்த்தி புதுக்கவிதை எழுதிய ஆண்டு யாது? 1934
  12. மணிக்கொடி காலம் என்பது யாது? 1930 - 1945
  13. மணிக்கொடி கவிஞர்கள் யாவர்? ந. பிச்சமூர்த்தி, தூரன், ரகுநாதன், கா. சுப்பிரமணியன்
  14. மணிக்கொடி காலத்தில் கவிதை வெளியிட்ட இதழ்கள் யாவை? கலாமோகினி, கிராம ஊழியன், சிவாஜிமலர்
  15. எழுத்து காலம் யாது? 1945 - 1970
  16. எழுத்துக் கவிஞர்கள் யாவர்? தருமு சிவராம், பசுவையா, ஞானக்கூத்தன், சி.சு. செல்லப்பா, வைத்தீஸ்வரன், சி. மணி
  17. எழுத்து இதழைத் தொடங்கியவர் யார்? சி.சு. செல்லப்பா
  18. எழுத்துக்காலத்தில் கவிதை வெளியிட்ட இதழ்கள் யாவை? சரஸ்வதி, இலக்கிய வட்டம், நடை, தாமரை, கசடதபற
  19. வானம்பாடிக் காலம் யாது? 1970 - 1980
  20. வானம்பாடி இதழில் இயற்றிய கவிஞர்கள் யாவர்? அப்துல் ரகுமான், மீரா, மேத்தா, அபி, தமிழன்பன், புவியரசு, கங்கைகொண்டான், சக்திக் கனல்
  21. வர்க்கப்போராட்ட இயக்கக் கவிஞர்கள் யாவர்? இன்குலாப், வெண்மணி, செம்மலர்ச் செல்வன், நவபாரதி, தமிழ் நாடன், கந்தர்வன், அக்னிபுத்திரன்
  22. புதுக்கவிதையின் தந்தை யார்? ந. பிச்சமூர்த்தி
  23. தமிழின் முதல்  கவிதை யாது? காதல்
  24. தமிழின் முதல் கவிதைத் தொகுப்பு யாது? புதுக்குரல்
  25. ந. பிச்சமூர்த்தி யாவருடைய தாக்கத்தால் கவிதை இயற்றினார்? வால்ட் விட்மன், தாகூர், பாரதி 
  26. ந. பிச்சமூர்த்தியின் புதுக்கவிதை நூல்கள் யாவை? புதுக்குரல்கள் [1962], பிச்சமூர்த்திக் கவிதைகள், கிளிக்குஞ்சு, காட்டுவாத்து, கிளிக்கூண்டு, பூக்காரி, வழித்துணை
  27. கவிக்கோ அப்துல் ரகுமான் எங்கு பிறந்தார்? மதுரை
  28. அப்துல் ரகுமான் எப்போது பிறந்தார்? 1937
  29. அப்துல் ரகுமான் 1999 ஆம் ஆண்டு எந்த கவிதை நூலுக்காக சாகித்ய அகாடமி விருது வாங்கினார்? ஆலாபனை
  30. அப்துல் ரகுமான் நடத்திய இதழ் யாது? கவிக்கோ
  31. கவிக்கோ பெற்ற விருதுகள் யாவை? தம்ழன்னை விருது, அட்சரா, பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது, முரசொலி அறக்கட்டளை விருது
  32. அப்துல் ரகுமான் பெற்ற சிறப்புப் பெயர்கள் யாவை? வின்மீன்களிடையே ஒரு முழுமதி, வானத்தை வென்ற கவிஞன், சூரியக் கவிஞன், தமிழ்நாட்டு இக்பால்  
  33. கவிஞர் மீரா எங்கு பிறந்தார்? சிவகங்கை
  34. கவிஞர் மீரா எப்போது பிறந்தார்? 1938
  35. கவிஞர் மீராவின் பெற்றோர் யாவர்? மீனாட்சி சுந்தரம், லட்சுமி அம்மாள்
  36. கவிஞர் மீராவின் இயற்பெயர் யாது? மீ. ராசேந்திரன்
  37. கவிஞர் மீராவின் புதுக்கவிதைத் தொகுப்புகள் யாவை? கனவுகள்+ கற்பனைகள்=காகிதங்கள், ஊசிகள்
  38. கவிஞர் மீராவின் மரபுக்கவிதைத் தொகுப்புகள் யாவை? இராசேந்திரன் கவிதைகள், மூன்றும் ஆறும் 
  39. மு. மேத்தா எந்த நூலுக்காக சாகித்திய அகாடமி எழுதினார்? 'ஆகாசத்துக்கு அடுத்த வீடு'
  40. ஈரோடு தமிழன்பனின் இயற்பெயர் யாது? ஜெகதீசன்
  41. ஈரோடு தமிழன்பன் எந்த ஆண்டு பிறந்தார்? 1940
  42. ஈரோடு தமிழன்பன் எங்கு பிறந்தார்? ஈரோட்டிற்கு அருகில் உள்ள சென்னிமலை
  43. ஈரோடு தமிழன்பனின் பெற்றோர் யாவர்? நடராஜா, வள்ளியம்மாள்
  44. ஈரோடு தமிழன்பன் சாகித்திய அகாடமியின் தமிழ் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக விளங்கியுள்ளார்.
  45. ஈரோடு தமிழன்பனின் 'தமிழன்பனின் மரபுக்கவிதைகள்' என்ற மரபுக்கவிதை நூல்  பெற்ற விருது யாது? தமிழக அரசின் பரிசு 
  46. ஈரோடு தமிழன்பனின் நூல்கள் யாவை? தோணி வருகிறது, தீவுகள் கரையேறுகின்றன, சூரியப் பறவைகள், விடியல் விழுதுகள், நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம், காலத்திற்கு ஒரு நாள்  முந்து, சிலிர்ப்புகள் பொதுவுடைமைப் பூபாளம் என பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்.
  47. நா. காமராசனின் கவிதைத் தொகுப்புகள் யாவை? கறுப்பு மலர்கள், மலையும் ஜீவநதிகளுயும், சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள், தாஜ்மகாலும் ரொட்டித் துண்டும், பொம்மைப் பாடகி
  48. மு. மேத்தா எங்கு பிறந்தார்? பெரியகுளம்
  49.  மு. மேத்தா பிறந்த ஆண்டு யாது? 1945
  50. மு. மேத்தாவின் தமிழக அரசின் விருது பெற்ற மரபுக் கவிதை நூல் யாது? ஊர்வலம்
  51. மு. மேத்தாவின் சாகித்ய அகாடமி விருது வென்ற நூல் யாது? ஆகாயத்திற்கு அடுத்த வீடு
  52. மு. மேத்தா சாகித்ய அகாடமி விருது வென்ற ஆண்டு எது? 2006
  53. மு. மேத்தாவின் படைப்புக்கள் யாவை? கண்ணீர் பூக்கள், ஊர்வலம், மனச்சிறகு, முகத்துக்கு முகம், மனிதனைத் தேடி, திருவிழாவைல் ஒரு தெருப்பாடகன், காத்திருந்த காற்று
  54. மு. மேத்தாவின் கவிதைகள் எந்தெந்த மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன? ஆங்கிலம், இந்தி, மலையாளம்
  55. இன்குலாப்பின் இயற்பெயர் யாது? ஷாகுல் அமீது
  56. இன்குலாப் பிறந்த இடம் எது? ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை
  57. இன்குலாப்பின் கவிதைத் தொகுப்புகள் யாவை? இன்குலாப் கவிதைகள், வெள்ளை இருட்டு, கூக்குரல், சூரியனைச் சுமப்பவர்கள்
  58. சிற்பி பாலசுப்பிரமணியம் எங்கு பிறந்தார்? பொள்ளாச்சி
  59. சிற்பி பாலசுப்பிரமணியம் பிறந்த ஆண்டு எது? 1946
  60. சிற்பி பாலசுப்பிரமணியத்தின் இயற்பெயர் யாது?  நடராச பாலசுப்பிரமணியம் சேது ராமசாமி
  61. பாலசுப்பிரமணியத்தின் புனைப்பெயர் யாது? சிற்பி
  62. பாலசுப்பிரமணியம் மொழிபெயர்ப்பு நூல்கள் யாவை? 4 மலையாள நூல்கள்
  63. சாகித்ய அகாடமி விருது வென்ற சிற்பி பாலசுப்பிரமணியத்தின் மொழிபெயர்ப்புப் படைப்பு யாது? அக்னிசாட்சி [2000]
  64. சாகித்ய அகாடமி விருது வென்ற சிற்பிபாலசுப்பிரமணியத்தின் கவிதை நூல் யாது? ஒரு கிராமத்து நதி [2002]
  65. இருமுறை சாகித்ய அகாடமி விருது வென்ற தமிழ்க் கவிஞர் யார்? சிற்பிப் பாலசுப்பிரமணியம்
  66. பாலசுப்பிரமணியம் எந்த நூலுக்காக தமிழக அரசின் பரிசு வென்றார்? மௌன மயக்கங்கள் என்ற புதுக்கவிதை காப்பியம்
  67. சிற்பி பாலசுப்பிரமணியத்தின் படைப்புக்கள் யாவை? சிரித்த முத்துக்கள், ஒளிப்பறவை, சர்ப்பயாகம், புன்னகை பூக்கும் பூனைகள், நிலாப்பூ, சூரிய நிழல்
  68. சிற்பி பாலசுப்பிரமணியம் குழந்தைகளுக்காக இயற்றிய நூல் எது? வண்ணப் பூக்கள்
  69. கவிஞர் வைரமுத்து பிறந்த ஆண்டு? 1953
  70. வைரமுத்து பிறந்த ஊர் யாது? தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள மேட்டூர்
  71. வைரமுத்துவின் பெற்றோர் யாவர்? இராமசாமி, அங்கம்மா
  72. புதுக்கவிதையின் புதையல் எனப் புகழப்பட்ட வைரமுத்து படைப்பு யாது? திருத்தி எழுதிய தீர்ப்புகள்
  73. தமிழில் ஒரு விஞ்ஞானக் காவியம் எனப் பாராட்டப் பெற்ற வைரமுத்துவின் நூல் யாது? தண்ணீர் தேசம் [1996]
  74. வைரமுத்துவின் படைப்புக்கள் யாவை? இன்னொரு தேசிய கீதம், இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல, கொஞ்சம் தேனீர் நிறைய வானம், மூன்றாம் உலகப் போர் [கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம்] 

புகழ்பெற்றத் தமிழ்ப் புலவர்கள்

 

  1. ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்த சோழ மன்னர்கள் யாவர்? வ்க்கிரம சோழன், இரண்டாம் குலோத்தங்கன், இரண்டாம் இராசராச சோழன்
  2. ஒட்டக்கூத்தரின் ஊர் யாது? மலரி
  3. ஒட்டக்கூத்தர் இயற்றிய பரணி? தக்கயாகப் பரணி
  4. ஒட்டக்கூத்தர் இயற்றிய பிள்ளைத் தமிழ்? இரண்டாம் குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ்
  5. ஒட்டக்கூத்தர் இயற்றிய பிள்ளைத் தமிழ் யாது? மூவருலா
  6. ஒட்டக்கூத்தர் இயற்றிய கோவை நூல் யாது? காங்கேயன் நாலாயிரக்கோவை
  7. ஒட்டக்கூத்தரின் சமகாலப் புலவர்கள் யாவர்? கம்பர், புகழேந்திப் புலவர்
  8. ஒட்டக்கூத்தர் இயற்றிய பிற நூல்கள் யாவை? ஈட்டியெழுபது, அரும்பைத் தொள்ளாயிரம், இராமாயண உத்தர காண்டம்
  9. உத்தர காண்டம் - கம்பராமாயணத்தில் கம்பர் இயற்றாத காண்டமான உத்தர காண்டத்தை ஒட்டக்கூத்தர் இயற்றினார். இது இராமன் பட்டாபிஷேகத்திற்குப்  பின் உள்ள நிகழ்வுகளைக் கூறும்.
  10. அதிவீரராம பாண்டியர் பாண்டிய அரச மரபில் தோன்றியவர்
  11. அதிவீரராம பாண்டியரின் இயற்பெயர் யாது? அழகர் பெருமாள்
  12. அதிவீரராம பாண்டியரின் சிறப்புப் பெயர்கள் யாவை? ஸ்ரீ வல்லபன், வீரமாறன், இராமன், பிள்ளைப் பாண்டியன்
  13. அதிவீரராம பாண்டியரின் படைப்புக்கள் யாவை? நைடதம், காசிக்காண்டம், கூர்ம புராணம், இலிங்க புராணம், நறுந்தொகை, மகா புராணம், திருக்குருவை பதிற்றுப்பத்தந்தாதி
  14. நைடதம் எத்தனை பாக்களைக் கொண்டது? 1772
  15. நைடதம் எதைப் பற்றியது? நள தமயந்திக் கதையைக் கூறுவது.
  16. அதிவீரராம பாண்டியனின் மொழிபெயர்ப்பு நூல் யாது? இலிங்க புராணம்
  17. நறுந்தொகையின் வேறு பெயர் யாது? வெற்றிவேற்கை
  18. கரிவலம் வந்த நல்லூரில் எழுந்தருளிய சிவபெருமான் மீது பாடப்பட்ட நூல் எது? திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி [குட்டித் திருவாசகம்]
  19. அதிவீரராம பாண்டியரின் சகோதரரான புலவர் யார்? வரதுங்கராம பாண்டியர்
  20. வரதுங்கப்பாண்டியர் வடமொழியில் இருந்து மொழிபெயர்த்த நூல் எது? கொக்கோகம்
  21. வரதுங்கப்பாண்டியரின் பிற நூல் யாது? பிரம்மோத்தர காண்டம்
  22. நைடதம் 'நாய் விரைந்தோடி இளைத்தாற் போன்ற தன்மையுடைத்து' என்றவர் யார்? வரதுங்கராம பாண்டியரின் மனைவி
  23. பட்டினத்தார் பிறந்த ஊர் யாது? காவிரிபூம்பட்டினம்
  24. பட்டினத்தாரின் பெற்றோர் யாவர்? சிவநேச குப்தர், ஞானக்கலை
  25. பட்டினத்தாரின் இயற்பெயர் யாது? திருவெண்காடர்
  26. இரு பட்டிணத்தார் உண்டு என்று கூறுவது உண்டு. இரண்டாம் பட்டினத்தாரின் காலம் யாது? கி.பி. 14 ஆம் நூற்றாண்டு
  27. பட்டினத்தாரின் படைப்புக்கள் யாவை? கோயில் நான்மணிமாலை, திருக்கழுமல மும்மணிக் கோவை, திருவிடை மருதூர் மும்மணிக் கோவை, திருவேகம்பமுடையார் திருவந்தாதி, திருவெர்றியூர் ஒருபா ஒருபஃது [இவ்வைந்தும் பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ளவை
  28. குமரகுருபரர் எங்கு பிறந்தார்? திருநெல்வேலியில் உள்ள ஸ்ரீ வைகுண்டம்
  29.  குமரகுருபரர் பெற்றோர் பெயர்? சண்முக சிகாமணிக்  கவிராயர், சிவகாம சுந்தரி
  30. பிறந்தது முதல் ஐந்தாண்டு காலம் பேசாமல் இருந்து திருச்செந்தூர் முருகன் அருளால் பேசும் திறம்  யார்? குமரகுருபரர்
  31. பேசும் திறன் பெற்றதும் திருச்செந்தூர் முருகன் மீது பாடப்பட்ட யாது? கந்தர் கலிவெண்பா
  32. குமரகுருபரரின் படைப்புக்கள் யாவை? கயிலைக் கலம்பகம், மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ், மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், திருவாரூர் நான்மணி மாலை, முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ், சிதம்பர மும்மணிக் கோவை, பண்டார் மும்மணிக் கோவை, காசிக் கலம்பகம், சகலகலவல்லி மாலை, இரட்டை மணிமாலை, செய்யுட்கோவை
  33. குமரகுருபரர் திருமலை நாயக்கர் வேண்டுகோளுக்கு இனங்க இயற்றிய நூல் யாது? நீதிநெறி விளக்கம்
  34. குமரகுருபரரின் காலம் யாது? கி.பி. 17 ஆம் நூற்றாண்டு
  35. சிவப்பிரகாசரின் காலம் யாது? கி.பி. 17 ஆம் நூற்றாண்டு
  36. கற்பனைக் களஞ்சியம் யார்?  சிவப்பிரகாசர்
  37.  சிவப்பிரகாசர் ஊர் யாது? தொண்டை நாட்டு, துறை மங்கலம்
  38.  சிவப்பிரகாசரின் குரு யார்? தருமபுர ஆதீன வித்துவான் வெள்ளியம்பலத் தம்பிரான்
  39. நீரோட்ட யமக அந்தாதியை இயற்றியவர் யார்?  சிவப்பிரகாச சுவாமிகள்
  40.  சிவப்பிரகாசர் இயற்றிய நூல்கள் யாவை? திருவெங்கைக் கோவை, திருவங்கைக் கலம்பகம், நன்னெறி, நாலவர் நான்மணிமாலை, பிரபுலிங்க லீலை, நால்வர் நான்மணி மாலை
  41. வீரசைவத்தை சிறப்பித்து எழுதப்பட்ட  சிவப்பிரகாசரின் காப்பியம் யாது? பிரபுலிங்க லீலை
  42. நால்வர் நான்மணி மாலை யார் குறித்தது? சைவ சமயக் குரவர் நால்வர்
  43.  சிவப்பிரகாசரால் இயற்றத் தொடங்கி அவரது தம்பிகள் கருணைப் பிரகாசர், வேலைய சுவாமிகள் நிறைவு செய்த புராண நூல் யாது? திருக்காளத்திப் புராணம்
  44. சிவப்பிரகாசர் இயற்றிய நூல்கள் யாவை? 23 நூல்கள்
  45. அருணகிரிநாதர் பிறந்த ஊர் யாது? திருவண்ணாமலை
  46. அருணகிரிநாதரைத் தாயுமானவர் எவ்வாறு அழைத்தார்?   கருணைக்கு அருணகிரி, வாக்கிற்கு அருணகிரி
  47. அருணகிரி நாதருக்கு முருகனால் அடியெடுத்துக் கொடுக்கப்பட்ட வார்த்தை யாது? முத்தைத்தரு பத்தித்திருநகை [திருப்புகழ்]
  48. திருப்புகழில் இடம்பெற்ற பாடல்கள் எத்தனை? 1307 [16000 பாடல்கள் இயற்றியதாகக் கூறுவர்]
  49. திருப்புகழில் கலந்துள்ள முகமதிய சொற்கள் யாவை? சலாம், சபாஸ், ராவுத்தன்
  50. திருப்புகழில் இடம்பெற்றுள்ள சந்த வேறுபாடுகள் எத்தனை? 1088
  51. அருணகிரிநாதரின் காலம் யாது? கி.பி. 15 ஆம் நூற்றாண்டு [முற்பகுதி]
  52. அருணகிரி நாதரின் படைப்புகள் யாவை? கந்தர் அந்தாதி,  கந்தர் அலங்காரம், திருவகுப்பு, வேல்விருத்தம், மயில் விருத்தம், கந்தர் அநுபூதி
  53. சைவ சமய மந்திர நூலாகக் கருதப்படும் நூல் யாது? திருவகுப்பு
  54. திருவகுப்பில் இடம் பெற்ற வகுப்புகளும், சந்த விருத்தங்களும் எத்தனை? 18
  55. திருக்குருகைப் பெருமாள் கவிராயர் எங்கு பிறந்தார்? ஆழ்வார் திருநகரி
  56. திருக்குருகைப் பெருமாள் கவிராயர் இயற்றிய இலக்கண நூல்கள்? மாறன் அகப்பொருள், மாறன் அலங்காரம், மாறன் பாப்பாவினம்
  57. திருக்குருகைப் பெருமாள் கவிராயரின் படைப்புக்கள் யாவை? குருமகாத்கியம், திருப்பதிக்கோவை, கிளவி மணிமாலை, நம்பெருமாள் மும்மணிக்கோவை
  58. திருக்குருகைப் பெருமாள் கவிராயரின் காலம் யாது? கி.பி. 16ஆம் நூற்.
  59. அந்தகக்கவி வீரராகவ முதலியார் எங்கு பிறந்தார்?  தொண்டை நாட்டுக் களத்தூர்
  60. அந்தகக்கவி வீரராகவ முதலியாரின் காலம் யாது? கி.பி. 17 ஆம் நூற்.
  61. அந்தகக்கவி வீரராகவ முதலியார் வசைபாடுவதில் வல்லவர்
  62. அந்தகக்கவி வீரராகவ முதலியார் தனிப்பாடல் திரட்டில் எத்தனைப் பாடல்கள் பாடியுள்ளார்? 20
  63. அந்தகக்கவி வீரராகவ முதலியாரின் படைப்புக்கள் யாவை? சேயூர்க் கலம்பகம், சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ், திருக்கழுக்குன்ற மாலை, திருக்கழுக்குன்றப் புராணம், சந்திரவாணன் கோவை, திருவாரூர் உலா
  64. வீரகவிராயர் எங்கு பிறந்தார்? பாண்டிய நாட்டு நல்லூர்
  65. வீரகவிராயர் இயற்றிய புராணம் யாது? அரிச்சந்திர புராணம்
  66. அரிச்சந்திர புராணத்திற்கு முதல் நூலாக இருந்தவை யாவை? அரிச்சந்திர வெண்பா, அரிச்சந்திர சரிதம்
  67. அரிச்சந்திர புராணம் இயற்றப்பட்ட காலம் யாது? கி.பி. 1524ஆம் ஆண்டு
  68. அரிச்சந்திர புராண காண்டங்கள் எத்தனை? 10 காண்டம்
  69. அரிச்சந்திர புராண பாடல்கள் எத்தனை? 1225 செய்யுட்கள்
  70. முனைப்பாடியார் எச்சமயத்தைச் சார்ந்தவர்? சமணம்
  71. முனைப்பாடியார் இயற்றிய அறநூல் யாது? அருங்கலச் செப்பு
  72. அருங்கலச்செப்பு  எப்பொருளைப் பேசுகிறது? காட்சி, ஒழுக்கம், ஞானம்
  73. அருங்கலச்செப்பு எத்தனைப் பாக்களைக் கொண்டது? 222
  74. அருகனை சிவன் என்று கூறும் புலவர் யார்? முனைப்பாடியார்
  75. முனைப்பாடியாரின் காலம் யாது? கி.பி. 13 ஆம் நூற்றாண்டு
  76. கவிராட்சதர் எனப்படும் புலவர் யார்? கச்சியப்ப முனிவர்
  77. கச்சியப்ப முனிவர் இயற்றிய நூல்கள் யாவை? விநாயக புராணம், தணிகைப் புராணம்
  78. கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் எங்கு பிறந்தார்? கும்பகோணம் மாவட்ட கொட்டையூர்
  79. சிவக்கொழுந்து தேசிகரின் காலம் யாது? கி.பி. 19ஆம் நூற்றாண்டு
  80. சிவக்கொழுந்து தேசிகரின் தந்தை யார்? தண்டபாணி தேசிகர்
  81. சிவக்கொழுந்து தேசிகரை ஆதரித்தவர் யார்? தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் [அவரது அவைக்களப் புலவராக இருந்தார்]
  82. சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய நூல்கள் யாவை? சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, சரபேந்திர பூபாலக் குறவஞ்சி கவிதை நாடகம், திருவிடைமருதூர் புராணாம், திருமறை நல்லூர் புராணம், கொட்டையூர் உலா, கோடீச்சுரக் கோவை
  83. தஞ்சைக் கோயில் அஷ்டக்கொடி விழாவில் நடைபெறும் நாடகம் யாது? சரபேந்திர பூபாலக் குறவஞ்சி கவிதை நாடகம் [இது அஷ்டக்கொடிக் குறவஞ்சி எனப்படும்]
  84. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் எங்கு பிறந்தார்? திருவரங்கம்
  85. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய நூல்கள் எவ்வாறு அழைக்கப்படும்? அஷ்டப் பிரபந்தம்
  86. அஷ்டப்பிரபந்தத்தில் உள்ள இலக்கியங்கள் யாவை?  திருவரங்கக் கலம்பகம், திருவரங்கத்து அந்தாதி, அழகர் அந்தாதி, திருவேங்கட அந்தாதி, திருப்பதி அந்தாதி, திருவரங்கத்து மாலை, திருவேங்கட மாலை, திருவரங்கத்து ஊசல்
  87. அஷ்டப்பிரபந்தத்தில் உள்ள செய்யுள்கள் எத்தனை? 790
  88. அஷ்டப்பிரபந்தத்தில் பாடப்படுபவை யாவை? திருமாலின் சிறப்பு, 108 திருப்பதிகள்
  89. படிக்காசுப் புலவர் எங்கு பிறந்தார்? தொண்டை மண்டலக் களத்தூர்
  90. படிக்காசுப் புலவரின் வேறு பெயர் யாது? படிக்காசுத் தம்பிரான்
  91. படிக்காசுப் புலவர் எங்கு அரசவைக் கவிஞராக இருந்தார்?  இராமநாதபுரம் இரகுநாத சேதுபதியின் அரசவைக் கவிஞர்
  92. படிக்காசுப் புலவரை ஆதரித்தவர் யார்? வள்ளல் சீதக்காதி
  93. படிக்காசுப் புலவரின் படைப்புக்கள் யாவை? தொண்டைமண்டலச் சதகம், சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத் தமிழ், புள்ளிருக்கு வேளுர்க் கலம்பகம், பாம்பலங்காரர் வருக்கக் கோவை, உமைப்பாகர் பதிகம்
  94. படிக்காசுப் புலவரை தனிப்பாடல் எவ்வாறு பாராட்டுகிறது?       "பண்பாகப் பகர் சந்தம் படிக்காசு"
  95. படிக்காசுப் புலவரின் காலம் யாது? கி.பி. 17 ஆம் நூற்றாண்டு
  96. இராமச்சந்திர கவிராயரின் காலம் யாது? கி.பி. 18 ஆம் நூற்றாண்டு
  97. இராமச்சந்திர கவிராயரின் படைப்புக்கள் யாவை? பாரத விலாசம், சகுந்தலை நாடகம், தாருக விலாசகம்
  98. நல்லாப்பிள்ளையின் படைப்புக்கள் யாவை? நல்லாபிள்ளை பாரதம், தேவயானைப் புராணம்
  99. நிரம்பவழகிய தேசிகரின் படைப்புக்கள் யாவை? சேதுபுராணம், திருவருட்பயன் உரை, திருப்பரங்க்கிரிப் புராணம், குருஞானசம்பந்தர் மாலை, சிவஞான சித்தியார் சுபக்க உரை
  100. நிரம்பவழகிய தேசிகரின் ஒருசாலை மாணாக்கர் யார்? பரஞ்சோதி முனிவர்
  101. நிரம்பவழகிய தேசிகரின் ஆசிரியர் யார்? கமலை ஞானப்பிரகாசம்
  102. நிரம்பவழகிய தேசிகரின் மாணவர்கள் யாவர்? அதிவீரராம பாண்டியர், வரதுங்கராம பாண்டியர்
  103. கடிகைமுத்துப் புலவரின் படைப்புக்கள் யாவை? சமுத்திர விலாசம், காமரசமஞ்சரி, மதனவித்தார மாலை
  104. கடிகைமுத்துப் புலவரின் சீடர் யார்? உமறுபுலவர்
  105. அபிராமிப்பட்டரின் படைப்பு யாது? அபிராமி அந்தாதி
  106. சீர்காழி அருணாசலக் கவிராயர் படைப்புக்கள் யாவை? சீர்காழித் தலபுராணம், சீர்காழிக்கோவை, சீர்காழிப் பள்ளு, அனுமார் பிள்ளைத்தமிழ், அசோமுகி நாடகம், இராமநாடக்க் கீர்த்தனை 

Wednesday, May 5, 2021

சங்க இலக்கியப் பாடல் வரிகள்

  நற்றிணை:

    "நீரின்று அமையா உலகம் போல்த்

    தம்மின்று அமையா நம்நயந்து அருளி"     -     கபிலர் [1 : குறிஞ்சி: தலைவி ]

    "நின்ற சொல்லர் நீடுதோறு இனியர்

    என்றும் என் தோள் பிரிபு அறியலரே"    - கபிலர் [1: குறிஞ்சி: தலைவி ]

    "நாடி நட்பின் அல்லது 

    நட்டு நாடார் தம் ஒட்டினோர் திறத்தே"     -    கபிலர் [32: குறிஞ்சி: தோழி]

    "முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்

    நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்" - பெயர் தெரியவில்லை - [355:குறிஞ்சி: தோழி]

    "ஒருமுலை அறுத்த திருமா உண்ணி"

                                     - மதுரை மருதன் இளநாகனார் [216:மருதம்: தலைவி]

    "நும்மினும் சிறந்தன்று, நுவ்வை ஆகுமென்று

    அன்னை கூறினள் புன்னையது சிறப்பே

    அம்ம நாணுதும் நும்மொடு நகையே" - [172: நெய்தல்: தோழி]

    "இளமையிற் சிறந்த வளமையும் இல்லை"    - [126: பாலை: தலைவன்]

    "இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்

    அசைவுடன் இருந்தோர்க்கு அரும்புணர்வு"   

                                                     - கருவூர் கோசனார் [214:பாலை: தலைவி]

    "சாதல் அஞ்சேன், அஞ்சுவல் சாவில் 

    பிறப்புப் பிறிது ஆகுவதாயின் 

    மறக்குவேன் கொல் என் காதலன் எனவே" 

                                                            - அம்மூவனார் [397: பாலை: தலைவி]

    "கொண்ட கொழுநன் குடிவரன் உற்றெனக்

    கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்"

                                                             - போதனார்  [110:பாலை: நற்றாய் ] 

    "நயனும் நண்பும் நாணுநன்கு உடைமையும்

    பயனும் பண்பும் பாடறிந்து ஒழுகுதலும்" 

                                                -  [160 : குறிஞ்சி: பாங்கன்: கழற்றெதிர் மறை]

குறுந்தொகை:

    "கொங்குதேர் வாழ்க்கை அங்கிறைத் தும்பி

    காமம் செப்பாது கண்டது மொழிமோ" - இறையனார் [2: குறிஞ்சி: தலைவன்]

    "வினையே ஆடவர்க்கு உயிரே வாள்நுதள்

    மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிரே" 

                                                  - பாலை பாடிய பெருங்கடுங்கோ [135: பாலை :தோழி]

    "செம்புலப் பெயல்நீர் போல

    அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே" 

                                     - செம்புலப் பெயல்நீரார் [40: குறிஞ்சி: தலைவன்]

    "இம்மை மாறி மறுமை ஆயினும்

    நீயா கியர்  என் கணவனை

    யானா கியர் நின் நெஞ்சு நேர்பவளே"  

                                         - அம்மூவனார்  [49: நெய்தல் -தலைவி]

    "சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கு இவன்

    உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே "    -    கபிலர் [குறுந்: 18  - தோழி]

    "உள்ளது சிதைப்போர் உளர் எனப் படாஅர்"

                                                பாலை பாடிய பெருங்கடுங்கோ [283: பாலை - தலைவி]

    "பெருந்தோள் குறுமகள் சிறுமெல் ஆகம்

    ஒருநாள் புணரப் புணரின் 

    அரைநாள் வாழ்க்கையும் வேண்டலம் யானே" 

                                                             -  நக்கீரர் [குறுந்: 280 -குறிஞ்சி: தலைவன்]

    "ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்"  

                                                             உகாய்க்குடி கிழார் [குறு63:பாலை: தலைவன்]

    " ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கின் 

    கையில் ஊமன் கண்ணில் காக்கும் 

    வெண்ணெய் உணங்கல் போல"    -    வெள்ளிவீதியார் [58:குறிஞ்சி:தலைவி]

     "நிலத்தினும் பெரிதே வனினும் உயர்ந்தன்று 

     நீரினும் ஆரளவின்றே--- நாடனொடு நட்பே"   

                                     -    தேவகுலத்தார் [குறுந்: 3 : குறிஞ்சி: தலைவி ]

    "கையும் காலும் தூக்கத் தூக்கும்    

    ஆடிப்பாவை போல" - ஆலங்குடி வங்கனார் [குறுந்: 8: மருதம்: காதற் பரத்தை]

    "காமம் ஒழிவதாயினும் ---எம்

    தொடர்பு தேயுமோ நின்வயினான"  -  கபிலர் [குறுந்: 42: குறிஞ்சி: தோழி]

     "கன்றும் உண்ணாது கலத்தினும் படாது

    நல்லான் தீம்பால் நிலத்துஉக்காங்கு"

                                                 - வெள்ளிவீதியார்[குறுந்:27:பாலை: தலைவி]

    "யாயும் ஞாயும் யார் ஆகியரோ

       ----------------------------------

    செம்புலப் பெயல் நீர் போல

    அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே "

                                             - செம்புலப்பெயனீரார் [குறுந்: 40: குறிஞ்சி: தலைவி]

    "இம்மை மாறி மறுமையாகினும்  நீயாகியர் எம் கணவனை"

                                                                -     அம்மூவனார் [குறுந்:49: நெய்தல்: தலைவி]

    "கல்பொரு  சிறுநுரை போல் 

    மெல்ல மெல்ல  இல்லாகுதுமே" 

                                               - கல்பொரு சிறுநுரையார் [குறுந்: 290: நெய்தல்: தலைவி] 

    "மீனெறி தூண்டிலின் நிவக்கும்

    கானக நாடனொடு ஆண்டு ஒழிந்தன்றே"   

                                             -    மீனெறி தூண்டிலார் [குறுந் 54: குறிஞ்சி: தலைவி]

    "வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப்

    பாவையின் மடவந் தனளே"    - கபிலன் [குறுந்:100 : குறிஞ்சி: தலைவன்]

    "பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்

    பெண்கொலை புரிந்த நன்னன் போல"    பரணர் [குறுந்: 292]   

ஐங்குறுநூறு:

    "அன்னாய் வாழி வேண்டன்னை நம்படப்பைத்

    தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு

    உவலைக் கூவல் கீழ

    மானுண்டு எஞ்சிய கலுழி நீரே"    -    கபிலர் [203: குறிஞ்சி: தலைவி]

    " விளைக வயலே வருக இரவலர்

    என வேட்டோய் யாயே"    ஓரம்போகியார் [2:மருதம்: தோழி]

    நெல்பல பொலிக பொன்பெரிது சிறக்க        [மருதம் 1:2]

    விளைக வயலே வருக இரவலர்        [மருதம் 2:2]

    பால்பல ஊறுக பகடுபல சிறக்க    [மருதம் 3:2]

    பகைவர் புல்ஆர்க பார்ப்பார் ஓதுக [மருதம் 4:2]

    பசி இல்லாகுக பிணிசேன் நீங்குக [மருதம் 5:2]

    வேந்துபகை தணிக ஆண்டுபல நந்துக    [மருதம் 6:2]

    அறம் நனிசிறக்க    அல்லது கெடுக    [மருதம் -7:2]

    அரசுமுறை செய்க களவு இல்லாகுக    [மருதம் - 8- 2]

    நன்று பெரிது சிறக்க தீதில்லாக    [மருதம் 9 : 2]

    மாரி வாய்க்க வளம் நனி சிறக்க     [மருதம் 10:2]

கலித்தொகை:

    " ஒன்றன் கூறுடை உடுப்பவரே ஆயினும்

    ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை"  

                                        -  பாலை  பாடிய பெருங்கடுங்கோ [18: பாலை: தோழி]

    "துன்பமும் துணையாக நாடின் அதுவல்லது

    இன்பமும் உண்டோ எமக்கு"

                                         - பாலை பாடிய பெருங்கடுங்கோ [6: பாலை: தலைவி]

    "சுடர் தொடீஇ கேளாய்...அக்கள்வன் மகன்"

                                         -பாலைபாடிய பெருங்கடுங்கோ [ 51: குறிஞ்சி: தலைவி]

    "கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்

    புல்லாளே ஆய மகள்"     -    சோழன் நல்லுருத்திரன் [103:  முல்லை: தோழி]

    "பலவுறு நறுஞ் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை

    மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதாம் அன் செய்யும்"

    - [9: பாலை: செவிலிக்கூற்று பாடல்: இக்கூற்று கண்டோர்/ முக்கோல் பகவர்] 

    "சீர்கெழு வெண்முத்தும் அணிபவர்க்கு அல்லதை

    நீரிலே பிறப்பினும் நீருக்கு அவைதாம் என்செய்யும்" 

   - [9: பாலை: செவிலிக்கூற்று பாடல்: இக்கூற்று கண்டோர்/ முக்கோல் பகவர்] 

    "ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை

    யாழுளே பிறப்பினும் யாழுக்கு அவைதாம் என்செய்யும்

    நினையுங்கால் நும்மகள் நுமக்கு ஆங்கனையளே"    

   - [9: பாலை: செவிலிக்கூற்று பாடல்: இக்கூற்று கண்டோர்/ முக்கோல் பகவர்] 

    "ஆற்றுதல் என்பது அலந்தவர்க்கு உதவுதல்

    போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

    பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்

    அன்பு எனப்படுவது தன்கிளை செறாமை

     அறிவு எனப்படுவது பேதையர் சொல் நோற்றல்

    செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை

     நிறை எனப்படுவது மறைபிறர் அறியாமை

    முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வவ்வல்

    பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்"    -    நல்லந்துவனார்

    "ஆள்பவர் கலக்குற அலைபெற்ற நாடே போல்"

    "என்மகள் ஒருத்தியும் பிறன்மகன் ஒருவனும்

    தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர்

    அன்னார் இருவரைக் காணிரோ பெரும்" - பாலை பாடிய பெருங்கடுங்கோ

    "தம்புகழ் கேட்டார் போல் தலைசாய்த்து மரம் துஞ்சு" - நல்லந்துவனார்

    "பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை

    மலையுள் பிறப்பினும் மலைக்கு அவைதாம் என்செய்யும்"

                                                - பாலைக்கலி

அகநானூறு:

    "பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்

    சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை

    நீர்முதல் கரந்த நிதியம் கொல்லோ"    -    மாமூலனார் [265: பாலை: தலைவி]

    "நந்தன் வெறுக்கை எய்தினும் மற்றவன்

    தங்கலர் வாழி தோழி"    -    மாமூலனார் [251: பாலை: தோழி]

    "யவனர் தந்த வினைமாண் நன்கலம்

    பொன்னொடு வந்து கறியொடு பெயரும்" 

                                    - எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் [ 149: பாலை: தலைமகன்]

    "தாதுண் பறவை பேதுறல் அஞ்சி

    மணிநா ஆர்த்த மாண்வினை தேரன்" 

                                   -    குறுங்குடி மருதனார் [4: முல்லை: தோழி]

    "யாமே, பிரிவின்றி இயைந்த துவரா நட்பின் 

    இருதலைப்புள்ளின் ஓருயிர் அம்மே"    -    கபிலர் 

    "தமிழ்கெழு மூவர் காக்கும் நிலம்"    -    மாமூலர்

பதிற்றுப்பத்து:

    "முரசு முழங்கு நெடுநகர் அரசுதுயில் ஈயாது

    மாதிரம் பனிக்கும் மறம் வீங்கு பல்புகழ்

    கோட்டற்கு இனிது நின் செல்வம்"  -     [12] 

    "அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது

    மழை வேண்டு புலத்து மாரிநிற்ப"    - 13

    "மீன்தேர் கொட்பின் பனிக்கயம் மூழ்கிச்

    சிரல் பெயர்ந்தன நெடுவேள் ஊசி

    நெடுவசி பரந்த வடுவாள் மார்பின் 

    அன்பு சேர் உடம்பினர்"    - 42

    "ஈரிதழ் மழைக்கண் பேரியல் அரிவை

    ஒள்இதழ் அவிழ் அகம் கடுக்கும் சீறடிப்

    பல்சில கிண்கிணி சிறுபரடு அலைப்பக்

    கொல்புனல் தளிரின் நடுங்குவன் நின்று நின்

    எளியர் ஓங்கிய சிறுசெங்  குவளை" -52

    "பன்மீன் நாப்பண் திங்கள்போலப்

    பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை" - 90

பரிபாடல்:

    பொன்னும் பொருளும் போகமும் அல்ல, நின்பால்

    அருளும் அன்பும் அறனும் மூன்றும்

    உருளிணர்க் கடம்பின் ஒலிதாரோயே"    -    கடுவன் இளவெயினனார்

    "மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்

    பூவொடு புரையும் சீரூர்; பூவின்

    இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து

    அரும் பொகுட்டு அனைத்தே அண்ணல்கோயில்

    தாதின் அனையர் தந்தமிழ்க் குடிகள்"    மதுரை பற்றிய பரிபாடல்

புறநானூறு:

    "யாதும் ஊரே யாவரும் கேளிர்

    தீதும் நன்றும் பிறர்தர வாரா

    நீர்வழிப் படூவும் புனைபோல்

    ஆருயிர் முறை வழிப் படூவும்

    பெரியாரை வியத்தலும் இலமே

    சிறியாரை இகழ்தல் அதனினும் இலமே"  

             - கணியன் பூங்குன்றனார் [192: பொதுவியல்: பொருண்மொழிக் காஞ்சி]

    "இறைஞ்சுக பெருமநின் சென்னி, சிறந்த

    நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே"  

                                         -     காரிகிழார் [6: பாடாண்: செவியறிவுறூஉ]

    "வழிபடுவோரை வல்லறி தீயே 

    பிறர்பழி கூறுவோர் மொழி தேறலையே"

                                       -    ஊண்பொதி பசுங்குடையார் [10: பாடாண்: இயன்மொழி]

    "அறவை ஆயின் நினதுஎனத் திறத்தல்

    மறவை ஆயின் போரொடு திறத்தல்"    -    கோவூர்கிழார்

    "அறநெறி முதற்றே அரசின் கொற்றம்"    

                                -    மதுரை இளநாகனார் 

    "ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் 

    புதுவது அன்று இவ் உலகத்து இயற்கை"

                                             - இடைக்குன்றூர்க் கிழார் [76: வாகை: அரசவாகை]

    "வரிசை அறிதலோ அரிதே, பெரிதும் 

    ஈதல் எளிது"                

                      -    கபிலர்  [ 121: பொதுவியல்: பொருண்மொழிக்காஞ்சி]

    "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

    பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே"

                         - ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் [பொதுவியல்: பொ. காஞ்சி]

    "உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே"

                         - [புறம் 18 : பொதுவியல்: பொருண்மொழிக்காஞ்சி]

                         குடபுலவியனார் [இதனை மணிமேகலையும் கூறுகிறது]

    "கொடைமடம் படுதல் அல்லது படைமடம் படாண்"

                                     -பரணர் [141 பாடாண்: இயன்மொழி வாழ்த்து]

    "இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும்

    அறிவிலை வணிகன் ஆஅய் அல்லன்"

           -    உறையூர் ஏணிச்சேரி மடமோசியார் [134 பாடாண்: இயன்மொழி]

    "நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே

    மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்"   

                                         - ஔவையார் [186: பொதுவியல்: பொருண்மொழிக் காஞ்சி]

    "எவ்வழி நல்லவர் ஆடவர்

    அவ்வழி நல்லை வாழிய நிலனே"    

                                         -  ஔவையார் [புறம் : 187 பொதுவியல்: பொருண்மொழி]

    "உண்பது நாழி உடுப்பவை இரண்டே"   

                                     -    நக்கீரர் [189 பொதுவியல்: பொருண்மொழி]

    "செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்போம் எனினே தப்புன் பலவே"

                                                         - நக்கீரர் [189 பொதுவியல்: பொருண்மொழி]

    "எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே"

                             - ஔவையார் [206: பாடாண்: பரிசில்]

    "ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்

    ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று" 

                                        கழைதின் யானையார் [204: பாடாண்: பரிசில் ]

    "மயக்குறு மக்களை இல்லோர்க்குப்

    பயக்குறை இல்லைத் தான்வாழும் நாளே"   

             -  பாண்டியன் அறிவுடை நம்பி  [188: பொதுவியல்: பொருண் மொழி]

    "உண்டாயின் பதம் கொடுத்து 

    இல்லாயின் உடன் உண்ணும்

    இல்லோர் ஓக்கல் தலைவன்"   

                                         -    ஔவையார் [95: பாடாண்: வாள்மங்கலம்]

    "குழவி இறப்பினும் ஊந்தடி பிறப்பினும்

    ஆஅள் அன்று என்று வாளின் தப்பார்"   

                                          - சேரமான் கணைக்காலிரும் பொறை [74: பொதுவியல்: 

                                                                                                                    முதுமொழிக்காஞ்சி]

    "ஞாயிறு  அனையை நின் பகைவர்க்குத்

    திங்கள் அனையை எம்மனோர்க்கே"

        - மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் [59: பாடாண்: பூவைநிலை]

    "எம்முளும் உளன்ஒரு பொருநன் ; வைகல்

    எண்தேர் செய்யும் தச்சன்

    திங்கள் வலித்தக் கால் அன்னோனே"

                                -    ஔவையர்[87: தும்பை: தானைமறம்] 

    "ஒருவீர் தோற்பினும் தோற்பது நும்குடி

    இருவீர் வேறல் இயற்கையும் அன்றே"   

                                   -    கோவூர் கிழார் [45: வஞ்சி: துணைவஞ்சி]

    "நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்

    அல்லது செய்தல் ஓம்புமின்"  

               -    நரிவெரூஉத்தலையார் [195: பொதுவியல்: பொருண்மொழிக்காஞ்சி]

    "சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே"  

                                                           -    ஔவையார் [235: பொதுவியல்: கையறுநிலை]

    "வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை

    முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே"   

                                                  -  குடவாயிற் கீரனார் [242: பொதுவியல்: கையறுநிலை]

    "களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை

    ஈன்ற ஞான்றினும் பெரிது"    

                                              -    பூங்கணுத்திரையார் [277: தும்பை: உவகைக்கலுழ்ச்சி]

    "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே

    சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே"   

                                             -    பொன்முடியார் [312: வாகை: மூதின்முல்லை]

    "மாண்டமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன்

    முலையறுத் திடுவென் யான்"

                                         -    காக்கைப்பாடினியார்  [278: தும்பை: உவகைக் கலுழ்ச்சி]

   " ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம் 

    பன்னாள் பயின்று பலரொடு செல்லினும்

    தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ" 

                                       -    ஔவையார்  [101: பாடாண்: பரிசில்கடாநிலை]

    "புலிசேர்ந்து போகிய கல்லாளை போல

      ஈன்ற வயிறோ இதுவே

     தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே"   

                                         -காவற் பெண்டு [86: வாகை: ஏறாண்முல்லை]

    "இனிப் பாடுநரும் இல்லை பாடுநர்க்கு 

    ஒன்று ஈகுநரும் இல்லை"

                                           -    ஒவையார் [235: பொதுவியல்: கையறுநிலை]

    "பல்சான்றீரே பல்சான்றீரே

    செல்கெனச் செல்லாது ஒழிகென விலக்கும்

    பொல்லாச் சூழ்ச்சி பல்சான்றீரே"    

                                    -    பெருங்கோப்பெண்டு [246: பொதுவியல்: ஆனந்தப்பையுள்]

 திருமுருகாற்றுப்படை:

    "இழுமென் இழிதரும் அருவிப்

    பழமுதிர் சோலை மலைக்கிழ வோனே"

    "பார் முதிர் பனிக் கடல் கலங்க உள் புக்கு,

    சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல்"
    "சேவடி படரும் செம்மல் உள்ளமொடு,
    நலம் புரி கொள்கைப் புலம் பிரிந்து உறையும்,
    செலவு நீ நயந்தனை ஆயின், பல உடன்,
    நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப,

    இன்னே பெறுதி, நீ முன்னிய வினையே"
    "நாற் பெருந் தெய்வத்து நல் நகர் நிலைஇய

    உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கைப்
    பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக"


பெருநராற்றுப்படை:

    "கொல்லை உழுகொழு ஏய்ப்ப, பல்லே

    எல்லையும் இரவும் ஊந்தின்று மழுங்கி"

    "ஆறலைக் கள்வர் படைவிட அருளின்

    மாறுதலை பெயர்க்கும் மருவுஇன் பாலை"

    "வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும்,
    சீருடை நன் மொழி நீரொடு சிதறி"
    
    

சிறுபாணாற்றுப்படை:

    "வட புல இமயத்து, வாங்கு வில் பொறித்த
    எழு உறழ் திணி தோள், இயல் தேர்க் குட்டுவன்
    வரு புனல் வாயில் வஞ்சியும்"
    
    "தமிழ் நிலைபெற்ற, தாங்கு அரு மரபின்
    மகிழ் நனை, மறுகின் மதுரையும்"
 
    "தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை,
    நாடா நல் இசை, நல் தேர்ச் செம்பியன்
    ஓடாப் பூட்கை உறந்தையும்"

    "குப்பை வேளை உப்பு இலி வெந்ததை,
    மடவோர் காட்சி நாணி, கடை அடைத்து,
    இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும்"
    
    "இளங் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
    விளங்கு பொற்கலத்தில் விரும்புவன பேணி,
    ஆனா விருப்பின், தான் நின்று ஊட்டி"
    
    "பழுமரம் தேரும் பறவை போல,

    கல்லென் சுற்றமொடு கால் கிளர்ந்து திரிதரும்
    புல்லென் யாக்கைப் புலவு வாய்ப் பாண!"
    
    "மீன் பூத்தன்ன வான் கலம் பரப்பி,
    மகமுறை, மகமுறை நோக்கி, முகன் அமர்ந்து,
    ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி,
    மங்குல் வானத்துத் திங்கள் ஏய்க்கும்"

   

பெரும்பாணாற்றுப்படை:

    "வானம் ஊன்றிய மதலை போல

    ஏணி சாத்திய ஏற்றரும் சென்னி

    விண்பொர நிவந்த வேயா மாடத்து

    இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி"

கூத்தராற்றுப்படை:

    "படுத்து வைத்தன்ன பாறை மருங்கில்

    எடுத்து நிறுத்தன்ன இட்டரும் சிறுநெறி"

முல்லைப்பாட்டு:

    "நெஞ்சாற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு

    நீடுநினைந்து ஆற்றியும் ஓடுவளை திருத்தியும்"

    "இன்பல் இமிழிசை ஓர்ப்பனள் கிடந்தோள்

    அஞ்செவி நிறைய ஆலின"

    "ஒரு கை பள்ளி ஒற்றி, ஒரு கை

        முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து"

 நெடுநல் வாடை
    
    "    மா மேயல் மறப்ப, மந்தி கூர,
    பறவை படிவன வீழ, கறவை

    கன்று கோள் ஒழியக் கடிய வீசி,
    குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள்"
    
    "ஆறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்,

    படலைக் கண்ணி, பரு ஏர் எறுழ்த் திணி தோள்,
    முடலை யாக்கை, முழு வலி மாக்கள்"


"நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு,

தேஎம் கொண்டு, தெய்வம் நோக்கி,

பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப, மனை வகுத்து"


    "வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு
    முன்னோன் முறைமுறை காட்ட,"

குறிஞ்சிப்பாட்டு:

    "விருந்துண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை

    நின்னொடு உண்டலும் புரைவது"

    "அறம்புணை ஆகத்தேற்றி பிறங்கு மலை

    மீமிசைக் கடவுள் வாழ்த்திக் கைதொழுது"

    "நேர்இறை முன்கை பற்றி நுமர்தர

      நாடுஅறி நன்மணம் அயர்கம்; சிலநாள்

    கலங்கல் ஓம்புமின் இஅல்ங்கு இழையீர்"

மதுரைக்காஞ்சி:

    "திரையிடு மணலினும் பலரே உரைசெல

    மலர்தலை உலகம் ஆண்டு கழிந்தோரே"

   "வானம் நீங்கிய நீல்நிற விசும்பின்

    மின்னு நிமிர்ந்தனையர் ஆகி"

பட்டினப்பாலை:    

    "தமவும் பிறவும் ஒப்ப நாடி,
    கொள்வதூஉம் மிகை கொளாது, கொடுப்பதூஉம் குறை கொடாது,

    பல் பண்டம் பகர்ந்து வீசும்"
   
    "முட்டாச் சிறப்பின், பட்டினம் பெறினும்
    வார் இருங் கூந்தல் வயங்குஇழை ஒழிய,
    வாரேன்; வாழிய, நெஞ்சே!"




பத்துப்பாட்டு நூல்களின் தொடக்க வரிகள்:

திருமுருகாற்றுப்படை:

    உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு

    பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு,

பொருநராற்றுப்படை:
    அறாஅ யாணர் அகன் தலைப் பேர் ஊர்,
    சாறு கழி வழி நாள், சோறு நசை உறாது,
    வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந!

சிறுபாணாற்றுப்படை:   
    மணி மலை ப் பணைத் தோள் மா நில மடந்தை
    அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் போல,
    செல்புனல் உழந்த சேய் வரல் கான்யாற்று,

பெரும்பாணாற்றுப்படை:
    அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி,
    பகல் கான்று, எழுதரு பல் கதிர்ப் பருதி
    காய் சினம் திருகிய கடுந் திறல் வேனில்,

முல்லைப்பாட்டு:
    நனந் தலை உலகம் வளைஇ, நேமியொடு
    வலம்புரி பொறித்த மா தாங்கு தடக் கை
    நீர் செல, நிமிர்ந்த மாஅல் போல,
    பாடு இமிழ் பனிக் கடல் பருகி, வலன் ஏர்பு,

மதுரைக்காஞ்சி:
    ஓங்குதிரை வியன் பரப்பின்
    ஒலி முந்நீர் வரம்பு ஆக,
    தேன் தூங்கும் உயர் சிமைய
    மலை நாறிய வியல் ஞாலத்து,

நெடுநல்வாடை:
    வையகம் பனிப்ப, வலன் ஏர்பு வளைஇ,
    பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென,
    ஆர்கலி முனைஇய கொடுங் கோல் கோவலர்
    ஏறுடை இன நிரை வேறு புலம் பரப்பி,

குறிஞ்சிப்பாட்டு
    அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! ஒள் நுதல்,
    ஒலி மென் கூந்தல், என் தோழி மேனி
    விறல் இழை நெகிழ்த்த வீவு அருங் கடு நோய்
    அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்,

பட்டினப்பாலை
    வசை இல் புகழ், வயங்கு வெண்மீன்
    திசை திரிந்து தெற்கு ஏகினும்,
    தற் பாடிய தளி உணவின்
    புள் தேம்பப் புயல் மாறி,
    வான் பொய்ப்பினும், தான் பொய்யா,


    மலைத் தலைய கடல் காவிரி
    புனல் பரந்து பொன் கொழிக்கும்

மலைபடுகடாம்: 
    திரு மழை தலைஇய இருள் நிற விசும்பின்
    விண் அதிர் இமிழ் இசை கடுப்ப, பண் அமைத்து,

பக்தி இலக்கியம் - வைணவம்

   பொய்கையாழ்வார் பிறந்த ஊர் எது? காஞ்சியில் உள்ள திருவெஃகாவில் பிறந்தார். பொய்கையாழ்வார் பெயர் காரணம் யாது? தாமரைப் பொய்கையில் பிறந்ததால் ப...