- எட்டுத்தொகை நூல்களின் மற்றொரு பெயர் என்ன? எண்பெருந்தொகை
- எட்டுத்தொகை நூல்களில் உள்ள செய்யுள்களின் எண்ணிக்கை? 2352
- எட்டுத்தொகை நூல்களில் கடவுள் வாழ்த்து உட்பட பாடல்களின் எண்ணிக்கை? 2358
- எட்டுத்தொகை நூல்களில் அகப்பொருள் பற்றியன எத்தனை? 5 [நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு]
- எட்டுத்தொகையில் புறம் பற்றிய நூல்கள் எத்தனை? 2[புறனானூறு, பதிற்றுப்பத்து]
- அகமும், புறமும் கலந்த எட்டுத்தொகை நூல் எது? பரிபாடல்
- நானூறு பாடல்கள் கொண்ட எட்டுத்தொகை நூல்கள் எத்தனை? 4 [நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு]
- பதிக முன்னோடியாக அமைந்த எட்டுத்தொகை நூல்கள் யாவை? ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து
- பாவால் பெயர் பெற்ற நூல்கள் எத்தனை? கலித்தொகை, பரிபாடல்
- எண்ணிகையால் பெயர் பெற்ற எட்டுத்தொகை நூல்கள் எத்தனை? 2
- ஆசிரியப்பாவால் அமைந்த எட்டுத்தொகை நூல்கள்? 6
- முழுமையாகக் கிடைக்கும் எட்டுத்தொகை நூல்கள் எத்தனை? 4 [நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை, அகநானூறு]
- நானூறு பாடல்கள் அடங்கிய எட்டுத்தொகை நூல்கள் யாவை? 4 [நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு]
- முதற்பகுதியும், இறுதியும் கிடைக்காத எட்டுத்தொகை நூல்கள் யாவை? 2 [பதிற்றுப்பத்து, பரிபாடல்]
- நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்? பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
- நற்றிணையைத் தொகுத்தவர் யார்? தெரியவில்லை
- குறைவான அடிகளோ அதிக அடிகளோ இல்லாமல் இடைநிகரவான அடிகளைக் கொண்டு இருப்பதால் நற்றிணை எனப்பட்டிருக்கலாம் என்றவர் யார்? டாக்டர் ந. சஞ்சீவி
- நற்றிணை பாடல் எண்ணிக்கை எத்தனை? 400+1 [401]
- நற்றிணை பாடிய புலவர்களின் எண்ணிக்கை யாது? 187
- நற்றிணை அடிவரையறை - 9 - 12
- நற்றிணையில் எத்தனை மன்னர்கள் குறிக்கப்படுகின்றனர்? 10
- நற்றிணையில் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் எத்தனைபேர்? 5 [கொட்டம்பலவனார், தும்பிசேர்கீரனார், விழிக்கண்பேதைப் பெருங்க் கண்ணனார், தேய்புரிப் பழங்கயிற்றனார், தனிமகனார்]
- நற்றிணையில் பாடிய பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை? 9
- குறுந்தொகை எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறது? நல்ல குறுந்தொகை, குறுந்தொகை நானூறு
- குறுந்தொகை பாடல்களின் எண்ணிக்கை? 400+1 [401]
- குறுந்தொகை அடியெல்லை - 4 - 8
- குறுந்தொகையில் 9 அடி உள்ள பாடல் எது? 307
- குறுந்தொகையில் பாடல் இயற்றிய புலவர்கள் எத்தனை பேர்? 203
- குறுந்தொகையைத் தொகுத்தவர் யார்? பூரிக்கோ
- குறுந்தொகையைத் தொகுப்பித்தவர் யார்? தெரியவில்லை
- முதலில் தொகுக்கப்பட்ட நூல் எது? குறுந்தொகை
- குறுந்தொகையில் வரலாற்றுப் பதிவுகள் உள்ள பாடல்கள் பாடிய புலவர் யார்? பரணர்
- குறுந்தொகையில் உரையாசிரியர்களால் மேற்கோளாக எடுத்தாளப்பட்ட பாடல்களின் எண்ணிக்கை? 236
- திருவிளையாடற் புராணத்தில் தருமி வரலாற்றை அறிய உதவும் பாடல்? குறுந்தொகை - கொங்குதேர் வாழ்க்கை
- குறுந்தொகையில் அதிகப் பாடல் பாடிய பெண்பாற் புலவர்கள்? நன்னாகையார், வெள்ளிவீதியார்
- குறுதொகையில் பாடல் இயற்றிய புலவர்களில் ஊர் பெயரோடு பெயர் பெற்றப் புலவர்கள் ? 4 [அள்ளூர் நன்முல்லையார், அரிசில் கிழார், கூடலூர் கிழார், மதுரை நல்வெள்ளியார்]
- குறுந்தொகையில் தொழிலால் பெயர் பெற்றப் புலவர்கள் எத்தனை பேர்? 3 [ ஆசிரியன் பெருங்கண்ணனார், கொல்லன் அழிசி, வள்ளுவன் பெருஞ்சாத்தனார்]
- குறுந்தொகையில் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் எத்தனை பேர்? 18 [அணிலாடு முன்றிலார், குப்பைக் கோழியார், வில்லக விரலினார், விட்ட குதிரையார், மீனெறி தூண்டிலார், நெடுவெண்ணிலவினார்]
- குறுந்தொகையில் வடமொழி பெயர்கொண்ட புலவர்கள்? 6 [உருத்திரன், சண்டிலியன், உலோச்சன், மாதிரத்தன், பவுத்திரன், பிரமந்தன்]
- தொடரால் பெயர் பெற்றவர்கள் மிகுதியும் உள்ள நூல் எது? குறுந்தொகை
- ஐங்குறுநூறைத் தொகுப்பித்தவர் யார்? யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் பெருவழுதி
- ஐங்குறுநூறைத் தொகுத்தவர் யார்? கூடலூர் கிழார்
- ஐங்குறுநூறு பாடல்களின் எண்ணிக்கை? 500+1 [501]
- ஐங்குறுநூறு அடிவரையறை? 3 - 5
- ஐங்குறுநூற்றைப் பாடிய புலவர்கள்? 5 புலவர்கள்
- ஐங்குறுனூறு பதிகம், சதகத்திற்கு முன்னோடி
- திணைக்கு ஒரு புலவர் பாடியுள்ளனர்
- ஐங்குறுநூற்றில் மருதம் பாடிய புலவர் யார்? ஓரம்போகியார்
- ஐங்குறுநூற்றில் நெய்தல் பாடிய புலவர் யார்? அம்மூவனார்
- ஐங்குறுநூற்றில் குறிஞ்சி பாடிய புலவர் யார்? கபிலன்
- ஐங்குறுநூற்றில் பாலை பாடிய புலவர் யார்? ஓதலாந்தையார்
- ஐங்குறுநூற்றில் முல்லை பாடிய புலவர் யார்? பேயனார்
- ஐங்குறுநூற்றில் அந்தாதித் தொடையில் அமைந்த பத்து எது? தொண்டிப் பத்து
- ஐங்குறுநூற்றில் முதல் பத்து எது? வேட்கைப் பத்து
- பத்துப்பாடல்களிலும் முதல் அடியும் மூறாவது அடியும் ஒன்றாக இருக்கும் பத்து எது? வேட்கைப்பத்து
- தோற்றவர் புல் மேயச் செய்த வரலாற்றைக் காட்டும் நூல்? ஐங்குறுநூறு ["வாழி ஆதன் வாழி அவினி/ பகைவர் புல்ஆர்க: பார்ப்பார் ஓதுக"]
- ஐங்குறுநூற்றில் தொடரால் பெயர் பெற்றவர் யாரும் இல்லை
- ஐங்குறுநூற்றில் அதிகம் குறிக்கப்படு ஆதன் என அழைக்கப்பட்டோர் யார்? ஆவியர் குடியினைச் சேர்ந்தவர்கள்
- கலித்தொகையைத் தொகுத்தவர் யார்? நல்லந்துவனார்
- கலித்தொகையைச் சிறப்பிக்கும் வரிகள் : 'கற்றறிந்தார் ஏத்தும் கலி, கல்விம்வலார் கண்ட கலி, நனிஆர்வம் பொங்கும் கலி
- கலித்தொகைப் பாடல் எண்ணிக்கை? 149+ 1 [150]
- கலித்தொகையைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை? 5
- கலித்தொகை அடிவரையறை? 11 - 80
- கலித்தொகையில் பாலையைப் பாடியவர்? பெருங்ககுங்கோ
- கலித்தொகையில் குறிஞ்சித் திணை பாடலைப் பாடியவர் யார்? கபிலன்
- கலித்தொகையில் மருதம் பாடியவர் யார்? மருதன் இளநாகனார்
- கலித்தொகையில் முல்லைத் திணை பாடியவர் யார்? நல்லுருத்திரன்
- கலித்தொகையில் நெய்தல் பாடியவர் யார்? நல்லந்துவனார்
- ஓரங்க நாடகம் போன்ற அமைப்பினைக் கொண்ட சங்க இலக்கியம்? கலித்தொகை
- அகநானூறைத் தொகுத்தவர் யார்? உருத்திர சன்மனார்
- அகநானூற்றைத் தொகுப்பித்தவர் யார்? பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
- அகநானூற்றின் பாகுபாடுகள் யாவை? 3 [களிற்றியானைநிரை, மணிமிடை பவளம், நித்திலக்கோவை
- அகநானூறு சிறப்புப் பெயர்கள் யாவை? நெடுந்தொகை, அருந்தொகை நானூறு, அகப்பாட்டு
- அகநானூற்றுப் பாடல் எண்ணிக்கை? 400+1
- அகநானூற்றுப் பாடல் பாடிய புலவர்களின் எண்ணிக்கை? 158
- அகநானூற்று அடியெல்லை யாது? 13 - 31
- சங்கப் பாடல்களை இயற்றிய புலவர்களின் எண்ணிக்கை? 473 [30 பெண்பாற் புலவர்கள்]
களிற்றியானைநிரைப் பாடல்களின் எண்ணிக்கை? 1 - 120- மணிமிடைப் பவளம் பாடல்களின் எண்ணிக்கை? 121 - 300
- நித்திலக்கோவை பாடல்களின் எண்ணிக்கை? 301 - 400
- அகநானூற்றுப் பாலைத்திணை வைப்பு - 1,3,5 [ஒற்றைப்படை]- 200
- அக. நா- குறிஞ்சித் திணை வைப்பு - 2, 8, 12, 18,.... [80]
- அகநானூறு முல்லை வைப்பு - 4, 14, 24 [40]
- அகநானூறு மருதம் வைப்பு - 6, 16, 26 [40]
- அகநானூறு நெய்தல் வைப்பு - 10, 20, 30 [40]
- அகநானூற்றின் செம்பாதி எத்திணைப் பாடல்கள் அதிகம்? பாலை
- அகநானூற்றில் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள்? கீரனார், ஊட்டியார்
- தமிழரி திருமண முறையைக் காட்டம் பாடல்? அகம் - 86
- சங்க காலத்தில் குடவோலை தேர்தல் முறை இருந்ததைக் காட்டும் பாடல்? அகம் - 77
- பெண்கள் உப்பிற்கு விலையாக நெல்லை வழங்கியமைக் காட்டும் பாடல்? 140
- குறிஞ்சிப்பண் பாடலைக் கேட்ட யானை திணையை உண்ண மறந்து தூங்குதல்
- அகநானூற்றில் இடம் பெற்ற புலவர்களின் எண்ணிக்கை? 10 [அஃதை, அகுதை, அதியமான் நெடுமான் அஞ்சி, அத்தி, ஆதிமந்தி, எவ்வி, எழினி, உதியஞ்சேரலாதன், கரிகால் வளவன், தலயாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
- அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால்
- நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் என வௌவால் கனவு காணும் அறிவியல் உண்மையைச் சுட்டும் இலக்கியம் நற்றிணை
- வௌவாலை நற்றிணை எவ்வாறு சுட்டுகிறது? வாவல்
- நெடும்பல்லியத்தை என்னும் பெண்பாற் புலவரின் பெயர் உணர்த்துவது? நீண்ட, பல, இசைக்கருவிகள் இசைப்பவள்
- வினை முடித்துத் திரும்பும் தலைவனை ஓரேர் உழவனுடன் ஒப்பிடும் இலக்கியம்- குறுந்தொகை
- பகைவர் தோல்வியைக் குறிக்க புல் மேய்வது போல குப்புற விழச் செய்வதைப் 'பகைவர் புல் ஆர்க' என்னும் அடி இடம்பெற்றுள்ள இலக்கியம் ஐங்குறுநூறு
- பண்டையத்தமிழர் திருமண முறைகள் குறித்த அகநானூற்றின் பாடலைப் பாடியவர் - நல்லாவூர்கிழார்
- திணை உண்ண வந்த யானை குறத்தியின் பாடல் இனிமையில் மயங்கி உறங்கியதாகக் கூறும் இலக்கியம் - அகநானூறு
- அகநானூறு குறிக்கும் தேர்தல் முறை - குடவோலை முறை
- செல்வக்கடுங்கோ வாழியாதன் தன்னை புரோசு மயக்கி எனத் தன்னை அழைத்துக் கொள்வதில் பெருமை கொண்டான்
- ஓகத்தூர் என்பதன் பொருள்- ஓத்திர நெல் மிகுதியாக விளையும் ஊர்
- ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பொருள் ஆட்டத்தில் சிறந்தவன், கவர்ந்து செல்லப்பட்ட வருடை ஆடுகளை மீட்டுக் கொணர்ந்தமையால்
- பதிற்றுப்பத்தில் பாடல் முடிவில் துறை, வண்ணம், தூக்கு, பாடல் பெயர் குறிக்கப்பட்டுள்ளன.
- அந்தாதியின் முன்னோடி இலக்கியங்கள் - ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து
- பதிற்றுப்பத்தை பிற்காலத்து நூல் என்றவர்? கே. என்.சிவராசப்பிள்ளை
- பதிற்றுப்பத்தின் ஒவ்வொரு பத்துப் பாடலின் இறுதியில் அமைந்திருப்பது? பதிகம்
- பதிற்றுப்பத்துப் பதிகங்களின் போக்கு மெய்க்கீர்த்திகளின் போக்கை ஒத்துள்ளதாகக் கூறியவர்? தமிழண்ணல்
- பதிற்றுப்பத்தின் சிறப்புப் பெயர் என்ன? இரும்புக் கடலை
- கைம்பெண்ணை புறநானூறு எவ்வாறு அழைக்கிறது? பருத்திப் பெண்டீர் [ பருத்தி நூற்கும் பெண்]
- பரிபாடலில் குறிக்கப்படும் எண் பெயர்கள் 0 - பாழ்,1/2 - பாகு, 9 - தொண்டு ["பாழ் என கால் என பாகு என ஒன்று என .....தொண்டு என"]
- உன்ன மரம் தழைத்தால் போரில் வெற்றிகிட்டும் எனக் கூறும் இலக்கியம்? பதிற்றுப்பத்து
- ஏறுதழுவல் குறித்துப் பேசும் இலக்கியம்? கலித்தொகை [முல்லைக்கலி]
- "என்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த தேர் அன்னோன்" யார்? அதியமான் நெடுமானஞ்சி [ஔவை]
- "ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவதன்று உலகத்து இயற்கை" என்றவர் - இடைக்குன்றூர் கிழார்
- "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்றவர் கனியன் பூங்குன்றனார்
- "பாலொடு வந்து கூழொடு பெயரும் /ஆடுடை இடைமகன்" என பண்டமாற்று முறை குறித்துக்கூறும் பாடல் - குறுந்தொகை
- நண்டின் கண் வேம்பின் அரும்புபோல இருக்கும் எனக் கூறும் நூல் -ஐங்குறுநூறு
- தன் பார்ப்பைத் தானே திண்ணும் விலங்காக ஐங்குறு நூறில் குறிக்கப்படும் விலங்கு - முதலை
- ஐங்குறுநூறில் அந்தாதித்தொடையில் அமைந்த பத்து- தொண்டிப்பத்து
- இமயம், குமரிக்கு இடைப்பட்ட இடத்தை ஆட்சி செய்தவன் - இமயவரம்பன்
Wednesday, May 5, 2021
சங்க இலக்கியம்: எட்டுத்தொகை நூல்கள் - வினாவங்கி
Subscribe to:
Post Comments (Atom)
பக்தி இலக்கியம் - வைணவம்
பொய்கையாழ்வார் பிறந்த ஊர் எது? காஞ்சியில் உள்ள திருவெஃகாவில் பிறந்தார். பொய்கையாழ்வார் பெயர் காரணம் யாது? தாமரைப் பொய்கையில் பிறந்ததால் ப...
-
நற்றிணை: "நீரின்று அமையா உலகம் போல்த் தம்மின்று அமையா நம்நயந்து அருளி" - கபிலர் [1 : குறிஞ்சி: தலைவி ] ...
-
1. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார் ? இளங்கோவடிகள் 2. சிலப்பதிகாரத்தின் காலம் எது ? கி . பி . 2 ஆம் நூற்றாண்டு 3. ...
-
பொய்கையாழ்வார் பிறந்த ஊர் எது? காஞ்சியில் உள்ள திருவெஃகாவில் பிறந்தார். பொய்கையாழ்வார் பெயர் காரணம் யாது? தாமரைப் பொய்கையில் பிறந்ததால் ப...
No comments:
Post a Comment