- பத்துப்பாட்டில் ஆற்றுப்படை நூல்கள் எத்தனை? 5
- பத்துப்பாட்டில் புறம் சார்ந்த நூல்கள் எத்தனை? 6
- பத்துப்பாட்டில் அகம் சார்ந்த நூல்கள் எத்தனை? 3
- பத்துப்பாட்டில் ஆற்றுப்படை அல்லாத புற நூல் எது? மதுரைக்காஞ்சி
- பத்துப்பாட்டில் அகமும் புறமும் கலந்த நூல் எது? நெடுநல்வாடை
- பத்துப்பாட்டு நூல்கள் எப்பாவால் ஆனவை? ஆசிரியப்பா
- பத்துப்பாட்டைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை? எட்டு
- பத்துப்பாட்டில் இரு பாடல்களைப் பாடிய புலவர்கள் யாவர்? நக்கீரர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்
- நக்கீரர் பாடிய பத்துப்பாட்டு நூல்கள் எவை? திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை
- கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் பத்துப்பாட்டு நூல்கள் எவை? பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை
- ஆற்றுப்படை நூல்களை நிரல்படுத்துக. திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, மலைபடுகடாம்
- பத்துப்பாட்டிற்கு முழுமையாக உரை செய்தவர்? நச்சினார்க்கினியர்
- மறைமலை அடிகள் ஆராய்ச்சி உரை எழுதிய பத்துப்பாட்டு நூல்கள் எவை? பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு
- பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே" - யார் கூற்று? மனோன்மணீயம் சுந்தரனார்
- "சான்றோர் உரைத்த தண்டமிழ்த் தெரியல்" என பத்துப்பாட்டு குறித்துக் கூறியவர் யார்? நச்சினார்க்கினியர்
- ஊரால் பெயர் பெற்ற பத்துப்பாடு நூல்கள் எவை? மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை
- பத்துப்பாட்டில் பாட்டு எனப் பெயரிடப்பட்ட நூல்கள் எத்தனை? 2 [முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு]
- பத்துப்பாட்டு முதலும், முதலுமாக இருப்பவை? ஆற்றுப்படை
- பத்துப்பாட்டில் மிக நீண்ட பாடல் எது? மதுரைக்காஞ்சி [782 அடிகள்]
- பத்துப்பாட்டில் சிறிய பாடல் எது? முல்லைப்பாட்டு [103 அடிகள்]
- வஞ்சிப்பா விரவிய பத்துப்பாட்டு நூல்கள் யாவை? பொருநராற்றுப்படை, மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை
- ஆற்றுப்படை இலக்கணம் கூறும் நூல் ? தொல்காப்பியம் [பு.திணையியல்]
- அற்றுப்படுத்துவோர் யார் யார்? கூத்தர், பாணர், பொருநர், விறலி
- ஆற்றுப்படையில் மிக நீண்ட நூல் எது? மலைபடுகடாம் [ 583]
- ஆற்றுப்படையில் சிறிய நூல் எது? பொருநராற்றுப்படை [248]
- ஆற்றுப்படையின் [பத்துப்பாட்டின்] கடவுள் வாழ்த்து? முருகாற்றுப்படை
- திருமுருகாற்றுப்படையின் ஆசிரியர் யார்? நக்கீரர்
- திருமுருகாற்றுப்படையின் அடிகள் எத்தனை? 317
- திருமுருகாற்றுப்படையின் வேறு பெயர்? முருகு, புலவராற்றுப்படை
- அற்றுப்படுத்தப்படும் தலைவனின் பெயரால் அமைந்த நூல் எது? திருமுருகாற்றுப்படை
- பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ள பத்துப்பாட்டு நூல் எது? திருமுருகாற்றுப்படை
- திருமுருகாற்றுப்படையின் தலைவன் யார்? முருகன்
- திருமுருகாற்றுப்படை உருவானது குறித்த செவிவழி செய்தி யாது? நக்கீரரைப் புடைத்துத் திண்ண கற்கிமுகி பூதம் சிறைவைக்க அதனிடமிருந்து காக்க முருகனிடம் வேண்டுவது.
- ஒருவரைப்போல வேடமிட்டுப் பாடும் கலைஞர் யார்? பொருநர்
- பொருநர்கள் எத்தனை வகைப்படுவர்? 2[ஏர்க்களம் பாடுபவர், போர்க்களம் பாடுபவர்]
- பரணி பாடும் கலைஞர் யார்? பொருநர்
- பொருநராற்றுப்படையில் குறிக்கப்படும் புலவர்கள் எவற்றைப் பாடுவர்? போர்க்களம் பாடும் பொருநர்
- பொருநராற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்? கரிகாற்பெருவளத்தான்
- பொருநராற்றுப்படையின் ஆசிரியர் யார்? முடத்தாமக்கண்ணியார்
- பொருநராற்றுப்படை எத்தனை அடிகளைக் கொண்டது? 248
- ஆசிரியப்பாவோடு வஞ்சியடிகளும் விரவப்பெற்ற ஆற்றுப்படை நூல் எது? பொருநராற்றுப்படை
- பொருநராற்ருப்படையில் எந்தப் போரின் வெற்றி குறிப்பிடப்பட்டுள்ளது? வெண்ணிப் போர்
- தாய்வயிற்றில் இருக்கும்போதே அரசு ஏறிய மன்னன் யார்? கரிகால் பெருவளத்தான்
- பொருநராற்றுப்படையில் பெண்ணின் பாதத்திற்கு வழங்கப்பட்டுள்ள உவமை யாது? ஓடிக்கலைத்த நாயின் நாக்கு
- சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்? ஓய்மானாட்டு நல்லியக்கோடன்
- சிறுபாணாற்றுப்படையின் ஆசிரியர் யார்? நல்லூர் நத்தத்தனார்
- சிறுபாணாற்றுப்படை எத்தனை அடிகளைக் கொண்டது? 269
- பண் பாடுவோ எவ்வாறு அழைக்கப்படுவர்? பாணர்
- பாணார் எத்தனை வகைப்படுவர்? 3 [இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர்]
- யாழ்ப்பாணர் எத்தனை வகைப்படுவர்? 2[பேரியாழ்ப் பாணர், சிறிய யாழ்ப்பாணர்]
- சிறுபாணாற்றுப்படையில் ஆற்றுப்படுத்தப்படும் பாணர்? சிறுபாண்ர்
- கடையெழு வள்ளல்களின் கொடைத்திறம் பாடும் ஆற்றுப்படை எது? சிறுபாணாற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படையில் இடம்பெரும் ஊர்கள்? வஞ்சி, உறையூர், மதுரை, ஆமூர், வேலூர், மாவிலங்கை
- இமயமலையில் வில் பொறித்த குட்டுவன் வரலாறு கூறும் நூல் எது? சிறுபாணாற்றுப்படை
- "தமிழ்னிலை பெற்ற தாங்கரும் மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை" - என மதுரையைப் போற்றும் நூல்? சிறுபாணாற்றுப்படை
- பெரும்பாணற்றுப்படையின் ஆசிரியர் யார்? கடியலூர் உருத்திரங்கண்ணனார்
- பெரும்பாணாற்றுப்படை பாட்டுடைத் தலைவன் யார்? இளந்திரையன்
- பெரும்பாணற்றுப்படை எத்தனை அடிகள் கொண்டது? 500
- ஐந்நில மக்களின் இயல்பு, விருந்தோம்பல் பேசும் நூல்? பெரும்பாணாறு
- கலங்கரை விளக்கம் குறித்து பேசும் ஆற்றுபடை நூல் யாது? பெரும்பாணாற்றுப்படை [ நீர்ப்பாயல் துறையில் அமைக்கப்பட்டுள்ளது]
- பெரும்பாணாற்றுப்படையில் சிறப்பிக்கப்படும் ஊர்? காஞ்சி
- மலைபடுகடாமின் ஆசிரியர் யார்? பெருங்குன்றூர் கௌசிகனார்
- மலைபடுகடாமின் பாட்டுடைத் தலைவன் யார்? நன்னன்
- மலைபடுகடாமின் பாடல் அடிகள் எத்தனை? 583
- மலைபடுகடாமில் ஆற்றுப்படுத்தப் படும் கலைஞர்? கூத்தர்
- மலைபடுகடாமின் வேறு பெயர்? கூத்தராற்றுப்படை
- மலைபடுகடாம் என பெயர் வரக்காரணம்? மலையில் எழும் ஓசைகளைப் பாடுவதால்
- மலைபடுகடாமில் மலையும், அருவியும் எதனால் உவமிக்கப்படுகிறது? மலை - யானை, அருவி - யானையின் மதநீர்
- கடாம் என்பதன் பொருள் என்ன? ஓசை
- மலைபடுகடாமில் எத்தனை வகையான ஓசைச் சுட்டப்படுகிறது? 20
- இசை மருத்துவம் பற்றிக் கூறும் ஆற்றுப்படை நூல் எது? மலைபடுகடாம்
- முல்லைப்பாட்டின் ஆசிரியர் யார்? நப்பூதனார்
- முல்லைப்பாட்டு எத்தனை அடிகளைக் கொண்டது? 103
- முல்லைப்பாட்டு ஆசிரியரின் ஊர் எது? காவிரிப்பூம்பட்டினம்
- முல்லைப்பாட்டு பெயர்க்காரணம் என்ன? முல்லைத் திணையைப் பாடுவது
- முல்லைப்பாட்டின் வேறு பெயர்? முல்லை
- நெஞ்சாற்றுப்படை எனப்படும் நூல் எது? முல்லைப்பாட்டு
- முல்லைப்பாட்டில் திருமாலின் எந்த அவதாரம் காட்டப்படும்? வாமனன்
- யானையைப் பயிற்றுவிக்கப் பயன்படுத்திய மொழியாக முல்லைப்பாட்டுக் கூறும் மொழி எது? வடமொழி
- தலைவன் உறங்கும் இடத்திற்குக் காவலாக பேச இயலாதவரை அமர்த்தியதைக் கூறும் நூல்? முல்லைப்பாட்டு
- பாசறையில் பெண்கள் பணி செய்தமையைக் கூறும் இலக்கியம்? முல்லைப்பாட்டு
- குறிஞ்சிப்பாட்டின் ஆசிரியர் யார்? கபிலர்
- குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள அடிகள் எத்தனை? 261
- குறிஞ்சிப்பாட்டு எழுந்ததன் நோக்கம் என்ன? ஆரிய மன்னன் பிரகதத்தனுக்குத் தமிழ் அறிவிக்க.
- குறிஞ்சிப்பாட்டு எழுந்த நோக்கம் குறித்துக் கூறும் உரையாசிரியர் யார்? நச்சினார்க்கினியர்
- குறிஞ்சிப்பாட்டின் மற்றொரு பெயர் யாது? பெருங்குறிஞ்சி
- குறிஞ்சிப்பாட்டை பெருங்குறிஞ்சி என்பவர் யார்? நச்சினார்க்கினியர்
- குறிஞ்சிப்பாட்டில் குறிக்கப்படும் மலர்கள் எத்தனை? 99
- குறிஞ்சிப்பாட்டு 99 மலர்களை எத்தனை அடிகளில் கூறுகிறது? 34
- 'கபிலர் இயற்கையை வர்ணிப்பதில் உலகிலேயே சிறந்தவர் ஆகின்றார்' எனக் கூறியவர் யார்? தனிநாயக அடிகள்
- குறிஞ்சிப்பாட்டிற்கு ஆய்வுரை செய்தோர் யாவர்? எஸ்.ஆர்.மார்க்க பந்து சர்மா, தமிழண்ணல்
- குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள புணர்ச்சி வகைகள்? களிறுதரு புணர்ச்சி, புனல்தரு புணர்ச்சி
- கோவை இலக்கியம் தோன்ற வித்தாக அமைந்த நூல்? குறிஞ்சிப்பாட்டு
- பட்டினப்பாலையை இயற்றியவர் யார்? கடியலூர் உருத்திரங்கண்ணனார்
- பட்டினப்பாலை எத்தனை அடிகளைக் கொண்டது? 301
- பட்டினப்பாலையில் ஆசிரியப்பாவால் ஆன அடிகள் எத்தனை? 138
- பட்டினப்பாலையில் வஞ்சிப்பாவால் ஆன அடிகள் எத்தனை? 163
- பட்டினப்பாலையின் வேறு பெயர் என்ன? வஞ்சி நெடும்பாட்டு
- பட்டினப்பாலையை வஞ்சிப்பா எனக்குறிப்பவர் யார்? இளம்பூரணர்
- பட்டினப்பாலையில் சிறப்பிக்கப்படும் மன்னன் யார்? கரிகாற்சோழன்
- பட்டினப்பாலையில் அகப்பொருள் கூறும் அடிகள் எத்தனை? 6
- பழந்தமிழர் வணிக அறம், கடல் வாணிகம், துறைமுகச் செயல்பாடு குறித்துக்கூறும் நூல் எது? பட்டினப்பாலை
- பட்டினப்பாலைக்கு சிறந்த ஆய்வுரை எழுதியோர் யாவர்? மறைமலையடிகள், இராகவையங்கார [சாமி சிதம்பரனார் உரையுள்ளது]
- பட்டினப்பாலையைப் பாடியதற்காக உருத்திரங்கண்ணனுக்கு, கரிகாற் பெருவளத்தான் அளித்த பரிசு என்ன? பதினாறு நூறாயிரம் பொற்காசு
- மதுரைக்காஞ்சியின் ஆசிரியர் யார்? மாங்குடி மருதனார்
- மாங்குடி மருதன் எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறார்? மதுரைக்காஞ்சிப் புலவர், காஞ்சிப் புலவனார்
- மதுரைக்காஞ்சியின் பாட்டுடைத் தலைவன் யார்? பாண்டியன் நெடுஞ்செழியன்
- மதுரைக்காஞ்சியின் பாடல் அடிகள் எத்தனை? 782
- மதுரைக்காஞ்சியின் மையப்பொருள் என்ன? நிலையாமை
- மதுரைக்காஞ்சி சிறப்புப் பெயர் என்ன? காஞ்சிப்பாட்டு[காஞ்சித்திணை], கூடற்றமிழ்
- மதுரையின் வணிக செயல்பாடுகளைக் கூறுவது? மதுரைக்காஞ்சி
- மதுரைக்காஞ்சியில் நிலையாமை குறித்துப் பேசும் பாடலடிகள் எத்தனை? 428
- தொல்காப்பிய காஞ்சி விளக்கப்பட்டு எனக் குறிக்கப்படுவது எது? மதுரைக்காஞ்சி
- 'ஆறு கிடந்தன்ன அகன் நெடுந்தெரு' என மதுரை நகரத் தெரு குறித்துக் கூறும் நூல் எது? மதுரைக்காஞ்சி
- மதுரை அல்லங்காடியில் எழும் ஓசைகளுக்கு உவமையாகக் கூறப்படுவது எது? கடற் பறவைகளின் ஓசை
- நெடுநல்வாடையின் ஆசிரியர் யார்? நக்கீரர்
- நெடுநல் வாடையின் பாட்டுடைத் தலைவனாகக் குறிக்கப்படுபவர் யார்? பாண்டிய நெடுஞ்செழியன்[இது முடிந்த முடிவு அல்ல. இதனைப் புற நூல் என்போர் கருத்து. ஆனால் பலர் இதனை அக நூல் என்றே கூறுகின்றனர். அதனாலே இது அகப்புற நூல் எனப்படுகிறது]
- நெடுநல்வாடை எத்தனை அடிகளைக் கொண்டது? 188
- நெடுநல் வாடையை 'சிற்பப்பாட்டு' எனச்சிறப்பித்தவர்? தமிழண்ணல்
- 'நெடுநல்வாடை ஒரு பெருஞ்சுரங்கம். நக்கீரர் கண்ட சுரங்கம். தமிழ்ச்சுரங்கம்' என நெடுநல் வாடையைப் போற்றியவர்? திரு.வி.க.
- நெடுநல்வாடைக்குக் கோதண்ட பாணி இயற்றிய உரையின் பெயர் யாது? புனையா ஓவியம்
- நெடுநல் வாடைக்கு உரை செய்தோர்? கோதண்டபாணி, செ. வெங்கடாச்சலச் செட்டியார்
Wednesday, May 5, 2021
சங்க இலக்கியம்: பத்துப்பாட்டு - வினாவங்கி
Subscribe to:
Post Comments (Atom)
பக்தி இலக்கியம் - வைணவம்
பொய்கையாழ்வார் பிறந்த ஊர் எது? காஞ்சியில் உள்ள திருவெஃகாவில் பிறந்தார். பொய்கையாழ்வார் பெயர் காரணம் யாது? தாமரைப் பொய்கையில் பிறந்ததால் ப...
-
நற்றிணை: "நீரின்று அமையா உலகம் போல்த் தம்மின்று அமையா நம்நயந்து அருளி" - கபிலர் [1 : குறிஞ்சி: தலைவி ] ...
-
1. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார் ? இளங்கோவடிகள் 2. சிலப்பதிகாரத்தின் காலம் எது ? கி . பி . 2 ஆம் நூற்றாண்டு 3. ...
-
பொய்கையாழ்வார் பிறந்த ஊர் எது? காஞ்சியில் உள்ள திருவெஃகாவில் பிறந்தார். பொய்கையாழ்வார் பெயர் காரணம் யாது? தாமரைப் பொய்கையில் பிறந்ததால் ப...
No comments:
Post a Comment