- களப்பிரர்களை எதிர்த்துப் போராடி விரட்டிய பாண்டிய மன்னன் யார்? கடுங்கோன்
- களப்பிரர்களை எதிர்த்துப் போராடி விரட்டிய பல்லவ மன்னன் யார்? சிம்ம விஷ்ணு
- களப்பிரர் காலத்தைத் தொடர்ந்து வந்த பல்லவர்கள் எத்தனை நூற்றாண்டு ஆதிக்கம் செலுத்தினர்? மூன்று
- பல்லவர் காலம் என்பது - கி.பி. 6 முதல் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு
- பல்லவர்களை 'மரபுவழி துலங்கா மரபினர்' என்றவர் யார்? கே.கே,பிள்ளை
- பக்தி இலக்கிய காலம் காலம் என்பது - பல்லவர் காலம்
- பக்திப்பாவாக மலர்ச்சி அடைந்த பா எது? விருத்தப்பா
- சைவ வைணவ சமயங்களை ஆதரித்த மன்னர்கள் யாவர்? பல்லவர்கள், பாண்டியர்கள்
- சைவ சமயப் பெரியார்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்? நாயன்மார்
- வைணவ சமயப் பெரியார்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? ஆழ்வார்கள்
- சமண, பௌத்தர்கள் வலியுறுத்துவது? புலனடக்கம், உண்ணா நோன்பு, இன்ப வெறுப்பு
- ஆழ்வார்களும், நாயன்மார்களும் போற்றியது? பக்தி
- சைவ சமய வழிபடு கடவுள் யார்? சிவன்
- சிவம் என்பதன் பொருள் என்ன? செம்மை, நன்மை
- சிவனுக்கு 78 மாடக்கோவில் கட்டியவர் யார்? சோழன் கோச்செங்கணான்
- சிவனுக்குக் கோச்செங்கணான் கோயில் கட்டியதைத் தேவாரத்தில் குறிப்பிட்டவர் யார்? திருநாவுக்கரசர்
- சோழன் கோச்செங்கணான் 70 கோயில் கட்டியதைக் குறிப்பிட்ட வைணவர்? திருமங்கையழ்வார்
- முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் சமணத்திலிருந்து எம்மதத்திற்கு மாறினார்? சைவம்
- முதலாம் மகேந்திரவர்ம பல்லவனைச் சைவத்திற்கு மாற்றியவர் யார்? திருநாவுக்கரசர்
- தீவிர சமணராக இருந்து சைவம் தழுவிய சைவ அடியார்? திருநாவுக்கரசர்
- சைவ, சமண மக்களிடையே பூசல் ஏற்பட வித்திட்டவர்? மகேந்திரவர்மன்
- மகேந்திரவர்மன் எந்த இடத்தில் சமண பள்ளிகளை இடித்து கோயில் கட்டினான்? திருப்பாதிரிப் புலியூர்
- சைவசமய பக்திப் பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? பன்னிரு திருமுறை
- பன்னிரு திருமுறையை எத்தனைப் புலவர்கள் பாடினர்? 27
- இறைவனைப் பற்றி சைவ அடியார்கள் பாடிய பாடல்கள் - திருமுறைகள்
- பன்னிரு திருமுறைகளைத் தொகுத்தவர்? நம்பியாண்டார் நம்பி
- முதல் மூன்று திருமுறைகளை இயற்றியவர்? திருஞானசம்பந்தர்
- ஞானசம்பந்தரின் இயற்பெயர்? ஆளுடைய பிள்ளை
- சம்பந்தர் பிறந்த ஊர் எது? சீர்காழி
- சம்பந்தரின் பெற்றோர் யாவர்? சிவபாத இருதயர், பகவதியார்
- சம்பந்தரின் வேறு பெயர்கள் யாவை? ஆளுடையபிள்ளை, காழி வள்ளல், பரசமய கோளரி
- பரசமய கோளரி என்பதன் பொருள்? பர-பிற, கோளரி - சிங்கம் [பிற சமயத்தவருக்குச் சிங்கம் போன்றவர்]
- ஞான சம்பந்தரைத் திராவிட சிசு என்றவர் யார்? ஆதிசங்கரர்
- ஆதிசங்கர் ஞான சம்பந்தரைத் திராவிட சிசு என்று குறிப்பிடும் நூல்? சௌந்தரிய லஹரி
- மூன்று வயதில் உமாதேவியால் ஞானப்பால் ஊட்டப்பட்டவர்? சம்பந்தர்
- திருஞான சம்பந்தரின் முதல் பதிகம் எது? தோடுடைய செவியன்
- சம்பந்தரை 'நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்' என்றவர் யார்? சுந்தரர்[திருத்தொண்டர் தொகை]
- முதல் மூன்று நாயன்மார் இயற்றிய ஏழு திருமுறைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? தேவாரம்
- தேவாரத்தின் மற்றொரு பெயர் யாது? திருக்கடைக் காப்பு
- சம்பந்தர் பாடிய பாடல்கள் எத்தனை என நம்பப்படுகின்றது? 16000
- கிடைக்கின்ற ஞான சம்பந்தரின் பாடல்கள்? 4168
- தேவாரம் எத்தனைப் பதிகங்களைக் கொண்டமைகின்றது? 383
- சம்பந்தர் பாடிய புதுமையான இசை? யாழ்முரிப் பண்
- சம்பந்தரின் காலம் எது? கி.பி. ஏழாம் நூற்றாண்டு
- சம்பந்தர் எத்தனைத் தளங்களுக்குச் சென்று வழிபட்டார்? 22
- இறைவனிடமிருந்து முத்துச் சிவிகை பெற்றவர்? சம்பந்தர்
- சம்பந்தருடன் உடன் பயணித்தவர் யார்? திருநீலகண்ட யாழ்ப்பாணர்
- சம்பந்தர் எத்தனை பண்களில் பாடினார்? 23
- சம்பந்தர் இறையருளால் முத்துச்சிவிகை பெற்ற இடம்? திருவாயிலறத்துறை
- சம்பந்தர் இறையருளால் பொற்றாளம் பெற்ற இடம்? திருக்கோலக்கா
- சம்பந்தர் இறையருளால் முத்துப்பந்தர் பெற்ற இடம்? பட்டீஸ்வரம்
- சம்பந்தர் இறையருளால் பொற்கிழி பெற்ற இடம்? திருவாவடுதுறை
- சம்பந்தர் இறையருளால் படிக்காசு பெற்ற இடம்? திருவீழிமிழலை
- சம்பந்தர் திருமறைக்காட்டில் நிகழ்த்திய அற்புதம்? மூடிய கோவில் கதவுகளைப் பாடித் திறக்கச்செய்தார்
- சம்பந்தர் மழவன் மகளில் இளம்பிள்ளைவாதத்தை நீக்கிய இடம் எது? திருப்பாச்சிலாச்சிரமம்
- சம்பந்தர் பாம்பு விடத்தை நீக்கியவர் யார்? திருமருகல்
- ஆண் பனையைப் பெண் பனையாக்கியவர் யார்? திருவோத்தூர்
- சம்பந்தர் சமணரை அணல் வாதம், புனல் வாதத்தில் வென்றவர் யார்? மதுரை
- கூன்பாண்டியனை சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றியவர் - சம்பந்தர்
- கூன்பாண்டியர் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற அவர் பெயர் எவ்வாறு ஆனது? நின்றசீர் நெடுமாறன்
- சம்பந்தர் தன்னை வாதத்திற்கு அழைத்த யாரது தலையைக் கொய்தார்? புத்தநந்தி
- சம்பந்தர் சாம்பலில் இருந்து உயிர்த்தெழச்செய்த பெண் யார்? பூம்பாவை
- பூம்பாவைத் திருப்பதிகம் இறுதி அடி? 'காணாதே போதியோ பூம்பாவாய்'
- சம்பந்தர் பதிகங்ளில் இராவணன் கயிலை மலையை எடுத்துத் துன்புற்றதைச் சுட்டும் பாடல் எத்தனையாவது பாடல் ? 8
- சம்பந்தர் தம் எல்லாப் பதிகங்களில் மாலும் அயனும் காண இயலாத பெருமையை எந்தப்பாடலில் சுட்டுகிறார்? 9
- சம்பந்தர் தம் பதிகங்களில் எத்தனையாவது சமண, பௌத்த சமயம் தரும் துன்பத்தைப் பாடும் பாடல்? 10
- சம்பந்தர் எல்லா பதிக பதினோராவது பாடலில் குறிப்பிடும் கருத்து யாது? தன் பெயரையும், ஊரையும் குறிப்பிடுகிறார்
- இறுதிப்பாடல் காப்பாக அமைவதால் திருக்காப்பு எனப்படும் நூல்? தேவாரம்
- சம்பந்தர் இறைவனை எம்மார்க்கத்தில் வழிபட்டார்? சத்புத்திர மார்க்கம்
- சத்புத்திர மார்க்கம் என்பதன் பொருள் யாது? தந்தை மகன் உறவு
- சத்புத்திர செயலாக்க நெறி எவ்வாறு அழைக்கப்படுகிறது? கிரியை
- சம்பந்தர் எந்த வயதில் இறைவனுடன் கலந்தார்? 16
- சம்பந்தர் தன் மனைவியுடன் இறைவனுடன் கலந்த நாள்? வைகாசி மூல நாள் [பெருமணநல்லூர் - ஊர்]
- தேவாரத்தில் வரும் சொல்லணிகள் யாவை? யமகம், திரிபு, ஏகபாதம்
- துன்பம் நீங்க இறைவனை வேண்டிப் பாடும் சம்பந்தரின் பதிகமாக சைவர்கள் கொள்ளவது? கோளறு பதிகம்
- 4,5,6 திருமுறைகளைப் பாடியவர் யார்? திருநாவுக்கரசர்
- திருனாவுக்கரசர் திருமுறைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? திரு நேரிசை, திருக்குறுந்தொகை, திருத்தாண்டகம்
- திருநாவுக்கரசர் பிறந்த ஊர்? திருமுனைப்பாடி நாட்டு திருவாமூர்
- திருநாவுக்கரசரின் பெற்றோபெயர் யாது? புகழனார், மாதினியார்
- திருநாவுக்கரசரின் இயற்பெயர் யாது? மருள்நீக்கியார்
- பெற்றோரும், தமக்கைக் கணவர் இறந்ததாலும் நாவுக்கரசர் எம்மதத்திற்கு மாறினார்? சமணம்
- சமணத்தில் நாவுக்கரசரின் பெயர்? தருமசேனர்
- நாவுக்கரசர் சமணத்தில் இருந்து சைவம் மாறக்காரண்மாய் இருந்த நோய்? சூலை நோய்
- நாவுக்கரை சைவத்திற்கு மாற்றிய அவரது சகோதரி பெயர்? திலகவதியார்
- சூலை நீங்க நாவுக்கரசர் பாடிய முதல் பதிகம் 'கூற்றாயினவாறு விலக்கிலீர்'
- நாவுக்கரசர் முதல் பதிகத்தை எங்குப் பாடினார்? திருவதிகை வீரட்டானம்
- உழவாரப்படை கொண்டு கோவில் தோறும் உழப்பணி செய்தவர்? நாவுக்கரசர்
- நாவுக்கரசர் இறைவனை என்ன மார்கத்தில் வணங்கினார்? தாச மார்க்கம்
- தாசமார்க்கம் என்பது - தன்னை பணியாளாகவும் இறைவனை தலைவனாக எண்ணிப்பாடுவது.
- தாசமார்க்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? சரியை
- நாவுக்கரசரின் சிறப்புப்பெயர்கள் - வாகீசர், தாண்டக வேந்தன்
- நாவுக்கரசர் சம்பந்தாரால் எவ்வாறு அழைக்கப்பட்டார்?அப்பர்
- நாவுக்கரசர் பாடியதாக நம்பப்படும் பாடல்கள் எத்தனை? 49000
- கிடைக்ககூடிய நாவுக்கரசர் பாடல்கள் - 3099
- திருனாவுக்கரசர் பாடல்கள் எத்தனைப் பதிகங்களில் உள்ளன்? 313
- நாவுக்கரசரின் காலம் - கி. பி. ஏழாம் நூற்றாண்டு
- தேவார மூவரில் அதிக காலம் வாழ்ந்தவர் யார்? நாவுக்கரசர்[81 ஆண்டு]
- திருனாவுக்கர்சர் பாம்பு தீண்டி இறந்த யாருடைய மகனை உயிருட எழச்செய்தார்? அப்பூதியடிகள்
- நாவுக்கரசர் எந்த ஆற்றில் மூழ்கி எழுந்து கயிலையைக் கண்டார்? திருவையாறு
- நாவுக்கரசர் சமணத்தில் இருந்து சைவத்திற்கு மாறியதால் அவரைத் துன்புறுத்திய மன்னன் யார்? மகேந்திரவர்ம பல்லவன்
- சங்கம் என்ற சொல்லைத் தமிழில் முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்? நாவுக்கரசர்
- ஏழாம் திருமுறையைப் பாடியவர் யார்? சுந்தரர்
- சுந்தரரின் இயற்பெயர் யாது? ஆரூரர்
- சுந்தரரைத் தத்தெடுத்த குறுநில மன்னர் யார்? நரசிங்க முனையரையர்
- சுந்தரர் எங்கு பிறந்தார்? திருமுனைப்பாடி நாட்டு திருனாவலூர்
- சுந்தரரின் பெற்றோர் யார்? சடையனார், இசைஞானியார்
- சுந்தரர் யாருடைய மகளை மணக்கவிருக்கையில் தடுத்தாளப்பட்டார்? புத்தூர் சடங்கவி சிவாச்சாரியார்
- சுந்தரை இறைவனை எவ்வாறு ஏசினார்? பித்தனே
- இறைவனை வன்மையாகத் திட்டியதால் பெற்ற பெயர்? வன்தொண்டர்
- சுந்தரரின் வேறு பெயர்கள்? வன்தொண்டர், தம்பிரான் தோழர், சேரமான் தோழர், திருநாவலூரார்
- சுந்தரரின் முதல் பதிகம் எவ்வாறு தொடங்கும்? "பித்தா"
- சுந்தரர் பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? திருப்பாட்டு
- பெரிய புராணத்திற்கு முதல் நூலாகக் கொள்ளப்படும் சுந்தரரின் நூல்? திருத்தொண்டர் தொகை
- சுந்தரர் எத்தனைப் பாடல்கள் பாடியதாக நம்பப்படுகிறது? 38000
- சுந்தரர் பாடல்களில் இன்று கிடைக்கும் பாடல் எண்ணிக்கை? 1026
- சுந்தரர் பாடல்களில் இடம்பெற்றுள்ள பண்கள்? 18
- சுந்தரரின் காலம்? 7,8 ஆம் நூற்றாண்டு
- சுந்தரரின் மனைவியர்? பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார்
- சுந்தரர் வாழ்ந்த காலம் ? 18 ஆண்டுகள்
- சுந்தரர் இரு கண் பார்வை இழந்தவருக்குப் பார்வை வரச்செய்தது எங்கு? காஞ்சி, திருவாரூர்
- சுந்தரருக்காக இரண்டாகப் பிளந்து ஓடிய ஆறு எது? காவிரி
- சுந்தரரின் மார்க்கம் என்ன? சகமார்க்கம் [யோக நெறி அலல்து தோழமை]
- சுந்தரர் முதலை உண்ட சிறுவ்னை மீட்ட ஊர் எது? அவிநாசி
- சுந்தரர் எந்ததளத்தை மறந்ததால் சிவன் 'என்னை மறந்தனையோ?' எனக் கேட்டதாகக் கூறப்படுகிறது? மழப்பாடி
- சுந்தரர் வெள்ளை யானையில் ஏறி கயிலாயம் செல்கையில் உடன் சென்றவர் யார்? சேரமான் பெருமாள் நாயனார்.
- எட்டாம் திருமுறை யாருடைய பாடல்களை உள்ளடக்கியது? மாணிக்க வாசகர்
- எட்டாம் திருமுறையில் உள்ள பாடல்கள் யாவை? திருவாசகம், திருக்கோவையார்
- மாணிக்கவாசகரின் ஊர் எது? திருவாதவூர்
- மாணிக்கவாசகரின் காலம்? ஒன்பதாம் நூற்றாண்டு
- மாணிக்க வாசகர் எந்த மன்னனிடம் அமைச்சராக இருந்தார்? அரிமர்த்த பாண்டியன்
- அமைச்சராக மாணிக்கவாசகர் பெற்ற பட்டம்? தென்னவன் பிரம்மராயன்
- மாணிக்கவாசகரின் வேறு பெயர்? வாதவூரார்
- மாணிக்கவாசகருக்கு இறைவன் ஞானாசிரியனாக வந்து ஞானம் தந்த இடம்? திருப்பெருந்துறையின் குருந்த மரத்தடி
- இறைவன் நரியைப் பரியாக்கி, பரியை நரியாக்கி திருவிளையாடல் செய்தது யாருக்காக? மாணிக்கவாசகர்
- மாணிக்கவாசகர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்? 32
- திருவாசகத்தின் முதல் பகுதி - சிவபுராணம்
- திருவாசகத்தின் இறுதிப்பகுதி - ஆச்சோப்பதிகம்
- திருவாசகத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 659
- முதல் கோவை இலக்கியம் எது? திருக்கோவையார்
- திருக்கோவையாரில் எத்தனைப் பாடல்கள் உள்ளன? 400
- திருக்கோவையார் எந்தப் பாவால் ஆனது? கட்டளைக்கலித்துறை
- திருக்கோவையாருக்கு உரை எழுதியவர் யார்? பேராசிரியர்
- 'திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்' - என்றவர் யார்? ஜி.யு.போப்
- திருவாசகத்தை 'ஊண் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே' என்றவர்? வள்ளலார்
- 'மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிப்பு எய்தி' என திருவாசகத்தால் எழும் மெய்ப்பாட்டைப் புகழ்பவர் யார்? சிவப்பிரகாசர்
- மாணிக்க வாசகரின் மார்க்கம் என்ன? சன்மார்க்கம் [ஞான நெறி]
- சன்மார்க்கம் என்பது என்ன? ஆசிரியர் - மாணவர் உறவு
- ஒன்பதாம் திருமுறையைப் பாடியோர் - ஒன்பதின்மர் [திருமளிகைத்தேவர், கருவூர்த் தேவர், சேந்தனார், பூந்துருத்தி காடவ நம்பி, கண்டராதிதர், வேணாட்டடிகள், திருவாலி அமுதனார், புருடோத்தம நம்பி, சோதிராயர்]
- ஒன்பதாம் திருமுறையில் உள்ளவை? திருவிசைப்பா, திருப்பல்லாண்டு
- ஒன்பதாம் திருமுறையில் எத்தனைப் பதிகங்கள் உள்ளன? 29
- ஒன்பதாம் திருமுறையில் எத்தனைப் பாடல்கள் உள்ளன? 301
- ஒன்பதாம் திருமுறையில் அதிகம் சிறப்பிக்கப்படும் ஊர்? சிதம்பரம்
- ஒன்பதாம் திருமுறையின் காலம்? கி.பி. 10/11 நூற்றாண்டு
- திருமளிகைத்தேவர் எத்தனைப் பதிகங்கள் பாடி உள்ளார்? 4 [45 படல்]
- கருவூர்த்தேவர் எத்தனைப் பதிகங்கள் பாடினார்? 10 [105 பாடல்]
- சேந்தனார் பாடிய மொத்தப் பதிகங்கள் எத்தனை? 4 [47 பாடல்]
- பூந்துருத்தி காடவ நம்பி பாடிய பதிகங்கள் எத்தனை? 2 [12 பாடல்கள்]
- சாளரப்பண் என்ற புதிய பண்ணைப் பாடியவர் யார்? பூந்துருத்தி காடவ நம்பி
- கண்டராதித்தர் பாடிய பாடல்கள் - 10 [தில்லை பற்றியவை]
- வேணாட்டடிகள் பாடிய பாடல்கள் - 10 [சிதம்பரம் பற்றியவை]
- திருவாலி அமுதனார் எத்தனைப் பதிகங்கள் பாடினார்?4 [42 பாடல்கள்]
- புருடோத்தம நம்பி எத்தனைப் பதிகங்கள் பாடினார்? 2 [22 பாடல்கள்]
- சோதிராயர் எத்தனைப் பாடல்களைப் பாடினார்? 10
- பத்தாம் திருமுறையில் இடம் பெறுபவை? திருமந்திரம்
- திருமந்திரத்தை இயற்றியவர்? திருமூலர்
- திருமுறையில் உள்ள இயல்கள் எத்தனை? 9
- திருமுறையில் உள்ள அதிகாரங்கள் எத்தனை? 232
- திருமந்திரத்தில் உள்ள பாக்கள் எத்தனை? 3000
- 'அன்பே சிவம்' என்றவர் யார்? திருமூலர்
- 'ஒன்றே குலம் ஒருவனே தேவன் '- இது இடம்பெற்றுள்ள நூல்? திருமந்திரம்
- பதினோராம் திருமுறையை இயற்றியோர் - பன்னிருவர் [திருவாலவுடையார், காரைக்கால் அம்மையார், கல்லாட தேவ நாயனார், நக்கீர தேவ நாயனார், கபிலதேவ நாயனார், பரண தேவ நாயணார், அதிரா அடிகள், எம்பெருமான் அடிகள், ஐயடிகள் கடவர்கோன், பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி]
- பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ள நூல்கள் எத்தனை? 40
- பதினோராம் திருமுறை இயற்றியோரில் இறைவன் என நம்பப்படுபவர்? திருவாலவுடையார்
- பன்னிரெண்டாம் திருமுறையாக விளங்கும் நூல்? பெரிய புராணம்
- பெரிய புராண ஆசிரியர்? சேக்கிழார்
1. திருவாலவுடையார் யார்? மதுரை சொக்கநாத பெருமாள்
2. சொக்கலிங்கப் பெருமான் யாருக்கு உதவ பாடல் இயற்றினார்?
பாணபத்திரர்
3. திருவாலவுடையார் இயற்றியது - சேரமானுக்கு இயற்றிய திருமுக பாசுரம்
4. திருமுக பாசுர காலம் எது? கி. பி. ஆறாம் நூற்றாண்டு
5. காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் என்ன? புனிதவதியார்
6. காரைக்காலம்மையாரின் கணவர் பெயர்? பரமதத்தன்
7. காரைக்கலம்மையார் எங்கு முத்தி பெற்றார்? திருவாலங்காடு
8. காரைக்கால் அம்மையார் தலையாலே நடந்து சென்ற இடம் எது? கயிலை
9. காரைக்கால் அம்மையாரின் காலம் - ஆறாம் நூற்றாண்டு
10. 63 நாயன்மார்களில் அமர்ந்த கோலத்தில் இருக்கும் அடியவர் யார்?
காரைக்கலம்மையார்
11. சைவ சமய பக்திப் பாடல்களில் பழமையானவை யாருடைய பாடல்கள்?
காரைக்கலம்மையார் [திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள்,
திருவிரட்டை மணிமாலை, அற்புதத்திருவந்தாதி]
12. கல்லாடர் இயற்றிய நூல் ? திருக்கண்ணப்பர் திருமறம்
13. நக்கீர தேவநாயனார் காலம் எது? கி.பி. ஆறாம் நூற்றாண்டு
14. திருமுருகாற்றுப்படை நீங்கலாக நக்கீரர் இயற்றிய நூல்கள் - 9
15. நக்கீரதேவ நாயனாரும் சங்க கால நக்கீரரும் வேறு எனக் கூறியவர் -
உ.வே.சாமிநாத ஐயர்
16. கபிலதேவ நாயனார் காலம் - கி.பி. 11ஆம் நூற்றாண்டு
17. கபில தேவர் இயற்றிய நூல்கள் எத்தனை? 3 [மூத்தநாயனார் திருவிருட்டை
மணிமாலை, சிவ பெருமான் திருவந்தாதி, சிவபெருமான் திருவிரட்டை
மணிமாலை
18. மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை - யாரைப் பற்றியது? விநாயகர்
19. பரண தேவநாயனாரின் காலம் ? கி.பி 10 ஆம் நூற்.
20. பரண தேவர் நூல் எது? சிவபெருமான் திருவந்தாதி
21. அதிரா அடிகளின் காலம் என்ன? கி.பி. 7ஆம் நூற்
22. மூத்த பிள்ளையார் திருமும்மணிக் கோவையின் ஆசிரியர் யார்?
அதிரா அடிகள்
23. சிவபெருமான் மும்மணிக்கோவை பாடியவர் யார்?எம்பெருமானடிகள்
24. எம்பெருமானடிகளின் வேறு பெயர் என்ன? இளம்பெருமானடிகள்
25. ஐயடிகள் காடவர் கோன் எம்மரபைச் சேர்ந்தவர்? பல்லவர்
26. சேத்திர வெண்பா பாடியவர் யார்? ஐயடிகள்
27. சேரமான் பெருமாள் நாயனாரின் இயற்பெயர்? பெருமாக்கோதையார்
28. சேரமான் பெருமாள் நாயனார் பாடிய நூல்கள் எத்தனை? 3 [திருக்கைலாய
ஞான உலா, பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை
29. பட்டினத்தடிகளின் இயற்பெயர் யாது? திருவெண்காடர்
30. பட்டினத்தடிகளின் காலம் - 10 ஆம் நூற்.
31. பதினோரு திருமுறைகளைத் தொகுத்தளித்தவர் யார்?
நம்பியாண்டார் நம்பி
32. யாருடைய வேண்டுகோளை ஏற்று நம்பி திருமுறைகளைத் தொகுத்தார்?
இராஜராஜ சோழன்
33. தமிழ் வியாசர் எனப்படுபவர் யார்? நம்பியாண்டார் நம்பி
34. நம்பியாண்டார் நம்பியின் ஊர் எது? திருநாரையூர்
35. பதினோராம் திருமுறையில் நம்பியாண்டார் நம்பியின் எத்தனை நூல்கள்
இணைக்கப்பட்டு உள்ளன? 10
36. 63 நாயன்மாரின் வரலாற்றைத் தொகுத்து உருவாக்கப்பட்ட புராணம் எது?
பெரிய புராணம்
37. பெரிய புராணத்தின் ஆசிரியர் - சேக்கிழார்
38. சேக்கிழார் பெரிய புராணத்திற்கு இட்ட பெயர்? திருத்தொண்டர் புராணம்
39. சேக்கிழாரின் இயற்பெயர் என்ன? அருண்மொழித் தேவர்
40. சேக்கிழார் பெற்ற பட்டம் என்ன? உத்தமச்சோழ பல்லவன்
41. சேக்கிழாரின் காலம் 12 ஆம் நூற்றாண்டு ஆகும்.
42. சேக்கிழாரை கல்வெட்டு எவ்வாறு குறிக்கிறது? இராமத்தேவர்
43. தொண்டர் சீர் பரவுவார் எனப்பட்டவர் யார்? சேக்கிழார்
44. நாயன்மார் வாழ்வை அடிப்படையாக வைத்து சுந்தரர் பாடிய நூல்?
திருத்தொண்டர் தொகை [11 பாடல்கள் கொண்டது]
45. நம்பியாண்டார் நம்பி இயற்றிய சைவ அடியார் குறித்த நூல் எது?
திருத்தொண்டர் திருவந்தாதி [89 பாடல்கள்]
46. பெரிய புராணம் சார்பு நூல் என்றும், தொகை விரி என்றும்
குறிக்கப்படுகின்றது.
47. பெரிய புராணத்தை சேக்கிழார் மாக்கதை என்று குறிக்கின்றார்.
48. பெரிய புராணத்திற்கு 'உலகெலாம்' என அடியெடுத்துக் கொடுத்தவர் யார்?
இறைவன்
49. பெரிய புராணத்திற்கு காப்பியத்தலைவன் சுந்தரர் என்றவர் யார்? பெரிய
புராணத்திற்கு உரை எழுதிய சி. கே. சுப்பிரமணிய முதலியார்
50. பெரிய புராணம் 13 சருக்கங்களையும், 4286 விருத்தப்பாக்களையும்
கொண்டிருக்கும்.
51. பெரிய புராணம் 63 தனியடியாரையும், 7 தொகையடியாரையும் பாடும்
No comments:
Post a Comment