Friday, June 18, 2021

தமிழ்க்காப்பியங்கள்

 1.     சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார்இளங்கோவடிகள்

2.     சிலப்பதிகாரத்தின் காலம் எதுகி.பி. 2 ஆம் நூற்றாண்டு

3.     சிலப்பதிகாரத்தின் பா யாதுநிலைமண்டில ஆசிரியப்பா

4.     சிலப்பதிகாரத்தின் சமயம் யாதுசமணம்

5.     சிலப்பதிகாரத்தின் காண்டங்கள் எத்தனை? 3 [புகார்க்காண்டம்மதுரைக்காண்டம்வஞ்சிக்காண்டம்]

6.     சிலப்பதிகாரத்தின் காதைகள் எத்தனை? 30 [புகார்க்காண்டம் - 10 காதைகள்மதுரைக்காண்டம் - 13, வஞ்சிக்காண்டம் - 7காதைகள்]

7.     சிலப்பதிகாரம் கூறும் மூன்று உண்மைகள் யாவைஅரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்]

8.     சிலப்பதிகாரத்தில் பதிகத்தை அடுத்து இடம்பெற்றுள்ள பகுதி யாதுஉரைபெறு கட்டுரை [வெற்றிவேற் செழியன்கொங்கிளங்கோசர்கயவாகு மன்னன்சோழன் பெருங்கிள்ளி ஆகியோர் குறித்தக் கருத்துக்கள் இடம்பெற்று உள்ளன.]

9.     உரைபெறு கட்டுரை உரைநடையால் ஆனதுஇதனால் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று பெயராயிற்று.

10. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் வடமொழியில்  எவ்வாறு அழைக்கப்படும்சம்பு காவியம்

11. சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள இசைசார் பகுதிகள்மங்கல வாழ்த்துஅரங்கேற்று காதைகானல்வரிவேனிற்காதைவேட்டுவவரிஆய்ச்சியர் குரவைவாழ்த்துக் காதை

12. அரங்கேற்றுக் காதையில் மாதவி ஆடிய நடனங்கள் எத்தனை? 11

13. சிலப்பதிகாரத்தில் போற்றப்படுபவை யாவைதிங்கள்ஞாயிறுமாமழைபூம்புகார்

14. அரங்கேற்றுக்காதையில் திரை எவ்வாறு அழைக்கப்படும்எழினி

15. அரங்கேற்று காதையில் இடம்பெறும் திரை வகைகள் யாவைஒருமுக எழினிபொருமுக எழினிகரந்து வரல் எழினி

16. ஒருமுக எழினி என்றால் என்னஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்திற்குச் செல்லும் திரை

17.   பொருமுக எழினி என்றால் என்னஇரு ஓரங்களில் இருந்தும் மேடையின் நடுவில் வந்து பொருந்தும் எழினி

18. கரந்து வரல் எழினி என்றால் என்னமேலே இருந்து கீழே இறங்கி வரும் எழினி

19. சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் சதகர்ணிகள் என்போர் யாவர்மகத நாட்டு நூற்றுவர் கன்னர்

20. சிலப்பதிகாரம் வடமொழியில் எவ்வாறு அழைக்கப்படும்நூபுர காவியம்நூபுர கதா

21. கண்ணகி பாண்டியனிடம் வழக்குரைத்த நாள்ஆடி மாத வெள்ளிக்கிழமை [எனவே பெண்கள் ஆடி வெள்ளியைக் கொண்டாடுவதாக முவரதராசனார்]

22. சிலப்பதிகாரம் என அழைக்கப்பட காரணம் யாதுஊழ்வினை சிலம்பு காரணமாக நாட்டுதும் யானோர் பாட்டுடைச் செய்யுள் என இளங்கோவடிகள் கூறுகிறார்.

23. சிலப்பதிகாரத்தின் சிறப்புப் பெயர்கள் யாவைமுதல் காப்பியம்உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்முத்தமிழ்க் காப்பியம்முதன்மைக் காப்பியம்பத்தினிக் காப்பியம்நாடகக்காப்பியம்குடிமக்கள் காப்பியம்புதுமைக் காப்பியம்பொதுமைக் காப்பியம்ஒற்றுமைக் காப்பியம்தம்ழ்த்தேசியக் காப்பியம்மூவேந்த காப்பியம்வரலாற்றுக் காப்பியம்போராட்ட காப்பியம்புரட்சிக் காப்பியம்   

24. முத்தமிழ்க் காப்பியம் என்றால் என்ன?  இயல் இசை நாடகம் அமைந்தமையால்

25. சிலப்பதிகாரத்தைக் குடிமக்கள் காப்பியம் என்றவர் யார்தெபொமீ

26. சிலப்பதிகாரத்தில் ஐந்திணைக் கூறுகள் - குறிஞ்சி - குன்றக்குரவைமுல்லை - ஆய்ச்சியர் குரவைமருதம் - நாடிகாண் காதைநெய்தல் - கானல் வரிபாலை - வேட்டுவவரி

27. சிலப்பதிகாரக் காலம் கி.பி. 8 ஆம் நூற் என்றவர் - வையாபுரிபிள்ளை

28. சிலம்பின் காலம் 2 ஆம் நூற்றாண்டு என்பதற்குக் காரணம்கண்ணகி கோவிலுக்கு இலங்கை மன்னன் வந்தமை [அவனது காலம் கி.பி. 2 என மகாவம்சம் குறிக்கிறது.

29. மணி மேகலையின் ஆசிரியர்மதுரை கூல வணிகன் சீத்தலை சாத்தனார்

30. மணிமேகலை பாடல் அடிகள் - 4286

31. மணிமேகலை காதை - 30

32. மணிமேகலையின் வேறு பெயர்மணிமேகலைத் துறவு

33. மணிமேகலை குறித்து மது.விமலானந்தம் உரைப்பவைதிருவள்ளுவரைப் பெய்யில் புலவன் என்றும்திருக்குறளை பொருளுர என்றும் போற்றும் முதல் பனுவம்

34. மணிமேகலை குறித்தி துறைமங்கலம் கூறுவது யாதுகொந்தார் குழல் மணிமேகலை நூல்நுட்பம் கொள்வது எங்ஙன்

35. காப்பியங்களைத் தமிழ் அன்னையின் ஆபரணங்களாகக் காட்டியவர் யார்சுத்தானந்த பாரதியார்

36. மணிமேகலை எத்தகுப் பாவகையால் இயற்றப்பட்டதுநிலைமண்டில ஆசிரியப்பா

37. முதல் சமயக்காப்பியம் யாதுமணிமேகலை

38. மணிமேகலையை .வே.சாஎவ்வாறு குறிக்கிறார்சமயக் கலைச்சொல் காப்பியம்

39. மணிமேகலை கதைக்களஞ்சியக் காப்பியம் என அழைக்கப்படக் காரணம் யாது?  மிகுதியான கிளைக்கதைகள் உள்ளதால்

40. "மாதவி பெற்ற மணிமேகலை நம்மை வாழ்விப்பதேஎன்று குறிப்பிடும் இலக்கியம்அம்பிகாபதிக் கோவை

41. "திருநாகரும்தரும பாலரும் கண்ட தருக்க நெறியின் மொழிபெயர்ப்புகள் மணிமேகலையின் இடைச்செருகல்என்றவர்தெபொ.மீ

42. "வள்ளுவரைப் பொய்யில் புலவன் என்றும் திருக்குறளைப் பொருளுரை என்றும் முதன் முதல் காப்பியத்தில் வைத்துப் போற்றும் முதல் பனுவல் என மணிமேகலையைக் குறிப்பவர்மது.விமலானந்தம்

43. சிலப்பதிகாரம்மணிமேகலையில் ஒத்தமையும் செய்யுள்கள்?        "பசியும் பிணியும் பகையும் நீங்கி / வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி"  "வச்சிரக் கோட்டத்து மண்ங்கெழு முரசம்கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்ற"

44. சிலப்பதிகாரத்தில் சீவகன் பின்பற்றும் நெறி யாதுசாவக நோன்பி

45. சிலப்பதிகாரம் காட்டும் வைதீக நெறியினர் யார்மாடலமறையோன் 

46. சிலப்பதிகாரம் காட்டும் சமணத்துறவி யார்கவுந்தி அடிகள்

47. சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி மணிமேகலை என்பதைக் குறிப்பது யாது? "மணிமேகலை மேல் உரைப்பொருள் முற்றிய சிலப்பதிகாரம்என்னும் சிலம்பின் இறுதியில் வரும் தொடர் மூலம் அறியலாம்

48. மணிமேகலையில் பௌத்த நெறி உரைக்கும் காதைகள் யாவைசமயக்கணக்கர் தம் திறம் கேட்டக் காதைதவத்திறம் பூண்டு தருமம் கேட்டக்காதைபவத்திறம் அறுகென பாவ நோற்ற காதை

49. மணிமேகலையை 'சமுதாய சீர்திருத்தங்களின் களஞ்சியம்எனப்பாராட்டியவர் யார்சுபமாணிக்கம்

50. சீத்தலை சாத்தனாரை இளங்கோவடிகள் எவ்வாறு குறிக்கிறார்தண்டமிழாசான் சாத்தனார்

51. மணிமேகலையின் முதல் காதை யாதுவிழாவறைக் காதை

52. விழாவறைக்காதை சுட்டும் விழா யாதுஇந்திரவிழா [28 நாள் நடக்கும்]

53. மணிமேகலையின் இறுதிக் காதை  யாதுபவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை

54. மாதவியின் தாய் யார்சித்திராபதி

55. மணிமேகலையின் தோழி யார்சுதமதி

56. மணிமேகைலை மலர்ப்பறிக்கச் சென்ற வனம் யாதுஉவவனம்

57. உவவனத்தில் உதயனனிடம் இருந்து தப்ப மணிமேகலை எங்கு ஒளிந்தாள்?  பளிக்கறை

58. மணிமேகலையை மணிமேகலா தெய்வம் எங்கு தூக்கிச்சென்றதுமணிபல்லவத்தீவு

59. மணிபல்லவத்தீவில் மணிமேகலைக்குப் பழம் பிறப்பு உணர்த்தியது யாதுபுத்தபீடிகை

60. மணிமேகலைக்கு அமுத சுரபி கிடைக்கும் வகை கூறியது யார்தீவதிலகை

61. மணிமேகலை அமுத சுரபியில் முதன்முதலில் உணவு பெற்ற பத்தினி யார்ஆதிரை

62. மணிமேகலையால் யானைத்தீ[பசி]  நோய் நீங்கியவள் யார்காயசண்டிகை

63. உதயகுமரனைக் கொன்ற காயசண்டிகையின் கணவன் பெயர் யாதுவிஞ்சையன்

64. மணிமேகலையை சிறையிலிட்ட உதயகுமரனின் தாய் யார்சோழமாதேவி

65. மணிமேகலை பவத்திறம் அறுகென பாவை நோற்ற இடம் யாதுகாஞ்சி

66. சீவக சிந்தாமணியின் ஆசிரியர் யார்திருத்தக்கத் தேவர்

67. திருத்தக்கத் தேவர் எச்சங்கத்தச் சேர்ந்தவர்மதுரைத் திரமிள சங்கம்

68. சீவக சிந்தாமணியின் காலம் யாத்கி.பி 5ஆம் நூற்றாண்டு

69. சீவக சிந்தாமணி எச்சமயக் காப்பியம்சமணம்

70. சீவக சிந்தாமணி எப்பாவால் ஆனதுவிருத்தப்பா

71. சீவக சிந்தாமணியின் பாடல்கள் எத்தனை? 3147

72. சீவக சிந்தாமணி எத்தனை இலம்பகங்களைக் கொண்டது? 13

73. சீவக சிந்தாமணியின் வேறு பெயர் யாதுமணநூல்

74. சீவக சிந்தாமணியின் ஆசிரியர் யார்திருத்தக்கத்தேவர்

75. திருத்தக்கத்தேவர் சிந்தாமணிக்கு இட்ட பெயர்சிந்தாமணி [சிந்தாமணி சரிதம் சிதர்ந்தேன்]

76. திருத்தக்கத்தேவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்திருத்தகு மாமுனிகள்திருத்தகு மகா முனிவர்திருத்தகு முனிவர்திருத்தக்க மகாமுனிகள்

77. சீவகன் பிறந்த போது அவனது தாய்/ அசரிரி எவ்வாறு வாழ்த்தினாள்சீவ

78. சீவகன் எத்தனை மணங்கள் புரிந்தான்? 8

79. சீவகன் யாழிசையில் வென்று மணம் செய்ததுகாந்தருவதத்தை

80. சீவகன் மத யானையை அடக்கி மணம் செய்தது யாரைகுணமாலை

81. சீவகன் பாம்பு நஞ்சை நீக்கி மணம் செய்தது யாரைபதுமை

82. சீவகன் காதல் கொண்டு திருமணம் செய்தது யாரைகேமசரிவிமலை

83. சீவகன் வில்வித்தைக் கற்பித்து மணந்தது யாரைகனகமாலை

84. சீவகன் கிழவன் வேடம் பூண்டு காதலித்து மணந்தது யாரைசுரமஞ்சரி

85. சீவகன் மணந்த மாமன் மகள் யார்இலக்கணை

86. சீவகன் கோவிந்தனுக்கு யாரை மணம் செய்து வைத்தான்கோவிந்தை

87. திருத்தக்கத்தேவரின் ஆசிரியர் யார்?  அச்சணந்தி

88. திருத்தக்கத்தேவர் சீவகசிந்தாமணிக்கு முன் பாடிய இலக்கியம் யாதுநரிவிருத்தம்

89. சீவகனின் தந்தைப் பெயர் யாதுசச்சந்தன்

90.  சச்சந்தன் எந்த நாட்டு மன்னன்ஏமாங்கத நாடு

91. சீவகனின் தாய் பெயர் என்னவிசையை

92. சச்சந்தனுக்கு எதிராக சூழ்ச்சி செய்த அமைச்சர் யார்கட்டியங்காரன்

93. சீவகனின் வளர்ப்புத் தந்தை யார்கந்துக்கடன்

94. சீவகன் யாரிடம் கல்வி பயின்றார்அச்சணந்தி

95. விருத்தப்பாவால் ஆன முதல் காப்பியம் யாதுசீவகசிந்தாமணி

96. சிலப்பதிகாரத்தின் எப்பகுதி விருத்தப்பாவால் ஆனதுகானல் வரி

97. சீவகன் கதைத்தழுவி இயற்றப்பட்ட வடமொழி நூல்கள் யாவைஷத்திர சூடாமணிஶ்ரீ புராணாம்கத்ய சிந்தாமணி

98. "சிந்தாமணியில் ஓர் அகப்பை முகந்துகொண்டேன் என்றவர் யார்கம்பன்

99. சிந்தாமணியில் கண்டி என்னும் புலவர் தம் பாடல்களை இடைச்செருகலாகச் சேர்த்தார் எனக்கூறுபவர் யார்?  நச்சினார்க்கினியர்

100.                    "தமிழ் மொழிக்கு இலியட்டும் இதுவே ஒடிசியும் இதுவேஎனப்புகழ்ந்தவர் யார்ஜி.யு.போப்

101.                    திருத்தக்கத்தேவர் குறித்தக் குறிப்புக் காணப்படும் கல்வெட்டு யாதுமைசூர் அருகில் 'சிரவண பெலகோலாக் கல்வெட்டு'

102.                    வளையாபதியின் காலம் யாது? 9ஆம் நூற்றாண்டு

103.                    வளாயாபதி சீவகசிந்தாமணிக்கு முற்பட்டது எனக் கூறும் அறிஞர் யார்தெ.பொ.மீ

104.                    வளையாபதியில் கிடைத்துள்ள பாடல்கள் எத்தனை? 73

105.                    வளையாபதி செய்யுட்கள் எங்கிருந்து திரட்டப்பட்டு உள்ளனபுறத்திரட்டுயாப்பெருங்கல விருத்தியுரைசிலப்பதிகார உரைதொல்காப்பிய உரை

106.                    'கவியழகு வேண்டிவளையாபதியை நினைத்தவர் யார்ஒட்டக்கூத்தர்

107.                    வளையாபதி கதை காணப்படும்  வடமொழி இலக்கியம் யாதுவைசிய புராணத்தின் 35 ஆம் அத்தியாயம்

108.                    குண்டலகேசியின் ஆசிரியர் யார்நாதகுத்தனார்

109.                    குண்டலகேசியின் காலம் யாது? 8 ஆம் நூற்றாண்டு

110.                    குண்டலகேசி பாடல்களில் இன்று கிடைப்பவை? 19 பாடல்கள்

111.                    குண்டலகேசியின் சமயம் யாதுபௌத்தம்

112.                    குண்டலகேசியின் கதைத் தலைவியின் பெயர்பத்திரை

113.                    குண்டலகேசியின் பெயர்க்காரணம் யார்சுருண்ட கூந்தலை உடையவள்

114.                    பத்திரையின் கணவன் பெயர் யாதுகாளன் 

115.                    குண்டலகேசியை தருக்க நூல் எனக்குறிப்பிடும் இலக்கணம் யாதுயாப்பருங்கல விருத்தி

116.                    ஐஞ்சிறு காப்பியங்கள் யாவைநீலகேசிசூளாமணி,    யசோதரகாவியம்உதயண குமார காவியம்நாககுமார காவியம்

117.                    நீலகேசியின் காலம் யாதுகி.பி. 5/6

118.                    நீலகேசியின் சருக்கங்கள் எத்தனை? 10

119.                    நீலகேசியின் பாடல்கள் யாவை? 894

120.                    நீலகேசி என்பதன் பொருள் யாது?                                                              கரிய கூந்தலை உடையவள்

121.                    நீலகேசியின் வேறு பெயர்கள் யாவைநீலகேசி தெருட்டு,                                                 நீலகேசி திரட்டு

122.                    நீலகேசியின் உரை நூல் யாதுசமய திவாகர வாமன முனிவரால் செய்யப்பட்ட சமய திவாகரம்

123.                    காளிக்கு உயிர்பலி தருவதைத் தடுத்த முனிவர் யார்முனிச்சந்திரர் என்னும் சமண முனிவர்

124.                    முனிச்சந்திரரின் தவத்தைக் கெடுக்க காளி யாரை காம                 லோகையாக அனுப்புகிறதுபழையனூர் நீலி

125.                    நீலகேசியால் சமய வாதத்தால் வெல்லப்பட்டவர்கள் யாவர்?  குண்டலகேசிஅர்த்த சுந்தரர்ஆசீவகர்சாங்கியர்

126.                    கேசி என்னும் பெயரால் ஆன சமய வாத நூல்கள் யாவைகுண்டலகேசிஅஞ்சனகேசிகாலகேசிநீலகேசி

127.                      நீலகேசியை நீலம் என அழைக்கும் நூல் யாதுயாப்பருங்கல விருத்தியுரை

128.                    நீலகேசி எந்த நூலுக்கு மறுப்பாக எழுந்ததுகுண்டலகேசி

129.                    நீலகேசி உரையாசிரியர் வாமன முனிவரின் வேறு பெயர்கள் யாவைவாமனாச்சாரியார்மல்லிசேனாசாரியார்

130.                    சூளாமணியின் ஆசிரியர் யார்தோலாமொழித்தேவர்

131.                    சூளாமணியின் காலம் யாதுகி.பி 7 - 10 ஆம் நூற்றாண்டு

132.                    சூளாமணியின் சருக்கங்கள் யாவை? 12 

133.                    சூளாமணி பாடல்களின் எண்ணிக்கை? 2131/ 2330

134.                    சூளாமணியின் கதைத்தலைவன் யார்திவிட்டன்

135.                     சூளாமணி எதைத் தழுவி இயற்றப்பட்டதுஶ்ரீ புராணம்ஆருகத புராணம்

136.                    விருத்தப்பாவைக் கையாள்வதில் சூளாமணி ஆசிரியர் சிந்தாமணி ஆசிரியரை மிஞ்சிவிட்டார் என்றவர் யார்?  மு..

137.                    பாகவதம் சூளாமணியோடு கதைப்போக்கில் ஒத்துள்ளன எனக் குறிப்பிடுபவர் யார்தமிழண்ணல்

138.                    சிந்தாமணியை விடச் செப்பமான நடையை உடையது சூளாமணி என்றவர் யார்கி.வாஜகன்னாதன்

139.                    சிந்தாமணியிலும்கூட இத்தகைய ஓட்டமும் இனிமையும் இல்லை என்றவர் யார்தெபொமீ

140.                    விசயனும்திவிட்டனும் எவர்களைப் போல சித்திரிக்கப்பட்டுள்ளனர்கண்ணன்பலராமன்

141.                   
யசோதர காவியத்தின் ஆசிரியர் யார்வெண்ணாவலூர் உடையார் வேள்

142.                    யசோதர காவியத்தின் காலம் யாதுகி.பி. 13 ஆம் நூற்றாண்டு

143.                    யசோதர காவியத்தின் பாடல்களின் அளவு? 320 [5 சருக்கங்கள்]

144.                    யசோதர காவியம் காட்டும் உதய நாட்டு மன்னர் யார்மாரிதத்தன்

145.                    மாரிதத்தன் பலிகொடுக்க அழைத்து வந்த இரட்டையர்கள் யாவர்அபயருசிஅபயமதி

146. அவந்தி நாட்டு மன்னன் மாரிதத்தனின்  மகன் யார்? யசோதரன்

147. யசோதரனின் மனைவி பெயர் என்ன? அமிர்தமதி

148. அமிர்தமதி மயங்கிய இசை யாது? மாளவப்பஞ்சமம் 

149. அமிர்தமதி யாரை நஞ்சிட்டுக் கொன்றாள்? கணவன் யசோதரன், மாமியார் சந்திரமதி

150. யசோதரனும், சந்திரமதியும் மறுபிறவியில்  யாராகப் பிறந்தனர்? அபயருசி, அபயமதி 

151. யசோதர காவியத்தின் கதை இடம்பெற்றுள்ள வடமொழி நூல் யாது? குணபத்திரர் எழுதிய உத்தரபுராணம்

152. யசோதர காவியம் எதைத் தழுவி இயற்றப்பட்டது?  புட்பதந்தர் எழுதிய யசோதர சரிதம்

153. யசோதரக்காவியம் எத்தகு உத்தியில் இயற்றப்பட்டது?  பின்னோக்கு உத்தி

154. உதயண குமாரத்தின் ஆசிரியர் யார்? கந்தியார் [பெண் துறவி]

155. உதயண குமாரத்தின் காலம் ? கி.பி. 15 நூற்றாண்டு

156. உதயண குமார காவித்தின் காலம் 15 ஆம் நூற்றாண்டு எனக் குறிப்பவர் யார்? மது. ச. விமலானந்தம்

157. வத்தவ நாட்டு மன்னன் பெயர் யாது? உதயணன்

158. உதயண குமார காவியத்தின் காண்டங்கள் எத்தனை? 6

159.  உதயண குமார காவியத்தின் பாடல்கள் எத்தனை? 369

160. உதயண குமார காவியத்திற்கு உரை எழுதியவர் யார்? பொ.வே. சோமசுந்தரனார்

161. நாக குமார காவியத்தின் காலம் யாது? கி. பி. 16ஆம் நூற்றாண்டு

162. நாககுமார காவியத்தின் பாடல்கள் எத்தனை? 170

163. நாககுமார காவியத்தின் சருக்கங்கள் எத்தனை? 5

164. மகத நாட்டு மன்னன் யார்? சிரோணிகன்

165. சிரோணிகனின் மனைவி யார்? சாலினி

166. சிரோணிகனுக்கு நாகபஞ்சமி பற்றி  உரைத்தவர் யார்? வரவீரநாத முனிவர்

167. நாககுமாரனின் இயற்பெயர் யாது? பிரதாபந்தன்

168. நாககுமார காவியத்தின் மூலத்தைத் தந்தவர் யார்? வட ஆர்க்காடு மாவட்ட சமண அறிஞர் ஜெ. சின்னசாமி நயினார்

169. நாக குமார காவியம் எதில் வெளியானது? தமிழாய்வு

170. நாக குமார காவியத்தைப் பதிப்பித்தவர் யார்? மு. சண்முகம் பிள்ளை

171. நாககுமார காவியம் வெளியிடப்பட்ட ஆண்டு யாது? 1973

172. காப்பியம் எனது எதன் திரிபு? காவ்யா என்ற வட சொல்லின் இயல்பு

173. காப்பிய இலக்கணம் கூறும் நூல் யாது? தண்டியலங்காரம்

174. ஐம்பெரும் காப்பியங்கள் என்ற பெயரை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்? மயிலைநாதர் [நன்னூல் உரை]

175. ஐம்பெருங்காப்பியங்களின் நூற்பெயரைக் குறிப்பிடுபவர் யார்? கந்தப்ப தேசிகர்

176. ஐஞ்சிறு காப்பியங்கள் எப்பாவால் ஆனவை? விருத்தப்பா

177. ஐஞ்சிறு காப்பியங்கள் எச்சமயம் சார்ந்தவை? சமணம்

178. இளங்கோவடிகள் துறவு பூண்டு அமர்ந்த இடம் எது? குணவாயில் கோட்டம்

179.  சிலப்பதிகாரம் காட்டும் மதுரையின் காவல் தெய்வம் யார்? மதுராபுரி தெய்வம்

180. கண்ணகி மதுரையை எரித்ததாக நம்பப்படும் காலம்  யாது? ஆடி மாதம், கிருஷ்ண பட்சம் எட்டாம் நாள், கார்த்திகையும் வெள்ளியும் சேர்ந்திருந்த வெள்ளிக்கிழமை



காப்பிய பகுப்புகளும் பாடல் எண்ணிக்கையும்

 

  1. சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் எத்தனை? 3
  2. சிலப்பதிகாரக் காதைகள் 30
  3. மணிமேகையின் காதைகள் எத்தனை? 30
  4. சீவகசிந்தாமணியில் உள்ள இலம்பகங்கள் ? 13
  5. சீவகசிந்தாமணியில் உள்ள பாடல்கள் 3145
  6. வளையாபதியின் பாடல்கள் 72
  7. சூளாமணியின் சருக்கங்கள் 12
  8. சூளாமணியின் பாடல்கள் 2131
  9. நீலகேசியின் சருக்கங்கள் 10
  10. நீலகேசியின் பாடல்கள் 94
  11. கம்பராமாயண படலங்கள் 113 [118 என்பாரும் உளர்]
  12. கம்ப ராமாயண பாடல்கள் 10484
  13. பெருந்தேவனார் பாரதத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் 1180
  14. பெரியபுராண சருக்கங்கள் 13
  15. பெரியபுராண பாடல்கள் 4286
  16. உத்தர ராமாயண படலங்கள் 17
  17. உத்தர ராமாயண பாடல்கள் 1528
  18. நளவெண்பாவின் காண்டங்கள் 3
  19. நளவெண்பாவின் பாடல்கள் 424
  20. வில்லிபாரத பருவங்கள் 10
  21. வில்லிபாரத பாடல்கள் 4351
  22. கந்தபுராண காண்டங்கள் 6
  23. கந்தபுராண பாடல்கள் 10345
  24. உதயண குமார காவிய காண்டங்கள் 6
  25. உதயண குமார காவிய பாடல்கள் 369
  26. நாககுமார காவிய சருக்கங்கள் 5
  27. நாககுமார காவிய பாடல்கள் 170
  28. திருவிளையாடற் புராண பெரும்பிரிவு 3
  29. திருவிளையாடற் புராண உட்பிரிவு 64
  30. திருவிளையாடற் புராண பாடல்கள் 3363
  31. சீறாபுராண காண்டங்கள் 3
  32. சீறாபுராண படலங்கள் 92 
  33. சீறாபுராண பாடல்கள் 5027
  34. தேம்பாவணியின் காண்டங்கள் 3
  35. தேம்பாவணியின் படலங்கள் 36
  36. தேம்பாவணியின் பாடல்கள் 3615
  37. இரட்சணிய யாத்திரிகத்தின் காண்டங்கள் 4
  38. இரட்சணிய யாத்திரிகத்தின் படலங்கள் 47
  39. இரட்சணிய யாத்திரிகத்தின் பாடல்கள் 3800
  40. இரகுவம்ச காண்டங்கள் 3
  41. இரகுவம்ச படலங்கள் 27
  42. இரகுவம்ச பாடல்கள் 2444

காப்பிய & புராண ஆசிரியர்கள்

 1. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார்?    இளங்கோவடிகள்

2. மணிமேகலையின் ஆசிரியர் யார்?    சீத்தலைச் சாத்தனார்

3. சீவகசிந்தாமணியின் ஆசிரியர் யார்?    திருத்தக்கத்தேவர்

4. சூளாமணியின் ஆசிரியர் யார்?    தோலாமொழித்தேவர்

5. குண்டலகேசியின் ஆசிரியர் யார்? நாதகுத்தனார்

6. பாரதவெண்பாவின் ஆசிரியர் யார்? பெருந்தேவனார்

7. வில்லி பாரதத்தின் ஆசிரியர் யார்?    வில்லிபுத்தூரார்

8. பெரியபுராணத்தின் ஆசிரியர் யார்?    சேக்கிழார்

9. உத்தரராமாயணத்தின் ஆசிரியர் யார்?    ஒட்டக்கூத்தர்

10. நளவெண்பாவின் ஆசிரியர் யார்?    புகழேந்தி

11. யசோதரகாவியத்தின் ஆசிரியர் யார்?    வெண்ணாவலூர் உடையார் வேள்

12. பெருங்கதையின் ஆசிரியர் யார்?    கொங்குவேளிர் 

13. நைடதத்தின் ஆசிரியர் யார்?    அதிவீரராம பாண்டியன்

14. காசிக்காண்டத்தின் ஆசிரியர் யார்?    அதிவீரராம பாண்டியன்

15. கூர்ம புராணத்தின் ஆசிரியர் யார்?    அதிவீரராம பாண்டியன்

16. லிங்கபுராணத்தின்  ஆசிரியர் யார்?    அதிவீரராம பாண்டியன்

17. வசு சரித்திரத்தின் ஆசிரியர் யார்?    அம்பலத்தாடும் ஐயன்

18. திருவிளையாடற் புராணாத்தின் ஆசிரியர் யார்?    பரஞ்சோதியார்

19. மேருபுராணத்தின் ஆசிரியர் யார்? வாமன்முனிவர்

20. கோயிற் புராணத்தின் ஆசிரியர் யார்?     உமாபதிசிவாச்சாரியார்

21. கந்தபுராண ஆசிரியர் யார்?     கச்சியப்பச் சிவாச்சாரியார்

22. உபதேச காண்ட ஆசிரியர் யார்?     கோனேரியப்ப நாவலர்

23. உபதேச காண்ட ஆசிரியர் யார்?      ஞானவரோதயர்

24. திருவாதவூரார் புராணத்தின் ஆசிரியர் யார்?     கடவுள் மாமுனி

25. காதம்பரியின் ஆசிரியர் யார்?     ஆதிவராக கவி

26. அரிச்சந்திர புராண ஆசிரியர் யார்? வீரை ஆசுகவிராயர்

27. புரூரவ சரிதையின் ஆசிரியர் யார்?     ஐம்பெருமாள்

28. பாகவதத்தின் ஆசிரியர் யார்?     செவ்வைசூடுவார்

29. பாகவதத்தின் ஆசிரியர் யார்?     அருளாளதாசர் 

30. கந்தபுராணச்  சுருக்கத்தின் ஆசிரியர் யார்?     சம்மந்த சரணாலயர்

31. பிரபோதசந்திரதோயத்தின் ஆசிரியர் யார்?     மாதை, திருவேங்கட நாதர்

32. சீறாப்புராணத்தின் ஆசிரியர் யார்?     உமறுப்புலவர்

33. விநாயகபுராணம் ஆசிரியர் யார்? கச்சியப்ப முனிவர்  

34. வேதாந்த சூளாமணியின் ஆசிரியர் யார்? துறைமங்கலம் சிவப்பிரகாசர்

35. பிரபுலிங்கலீலை ஆசிரியர் யார்?  துறைமங்கலம் சிவபிரகாசர்

36. தேம்பாவணியின் ஆசிரியர் யார்? வீரமாமுனிவர்

37. மகாபாரதத்தின் ஆசிரியர் யார்?  நல்லாப்பிள்ளை

38. காஞ்சிப்புராணத்தின் ஆசிரியர் யார்?    சிவஞானமுனிவர்

39. திருக்குற்றாலத் தலபுராண ஆசிரியர் யார்?    திரிகூடராசப்பக்கவிராயர்

40. மகாபாரதத்தின் ஆசிரியர் யார்?    அரங்கநாத கவிராயர்

41. சீறாவென்கிற புராணம் [சின்னச்சீறா] ஆசிரியர் யார்? 
                                                        பனிஅகமது மரைக்காயர்

42. இரட்சணிய யாத்திரிகத்தின் ஆசிரியர் யார்?    ஹச். ஏ. கிருஷ்ணப்பிள்ளை

43. கிறிஸ்தியாணம் [கிறிஸ்தாயாணம்] ஆசிரியர் யார்?    ஜான்பால்மர்

44. குசேலோபாக்கியானத்தின் ஆசிரியர் யார்?    தேவராசபிள்ளை

45. சூத சங்கிதையின் ஆசிரியர் யார்?    மீனாட்சி சுந்தரம் பிள்ளை

46. அமிர்தராமாயணத்தின் ஆசிரியர் யார்?    ஆ. தருமலிங்க முதலியார்

57. அரிச்சந்திர வெண்பாவின் ஆசிரியர் யார்?            "

58. இரகுவம்சத்தின் ஆசிரியர் யார்?    அரசகேசரி

59. இராமாயண சூடாமணியின் ஆசிரியர் யார்?    விஷ்ணு பாத சேகரர்

60. இராமாயண வெண்பாவின் ஆசிரியர் யார்?    சுப்பிரமணிய ஐயர்

61. குசேல வெண்பாவின் ஆசிரியர் யார்?     நா. சேதுராமய்யர்                           "

62. சங்கிரக இராமாயண ஆசிரியர் யார்?    நாராயணசாமி ஐயர்

63. சுவிசேஷ புராணத்தின் ஆசிரியர் யார்?    சுகாத்தியர்

64. திருவாக்குப் புராண ஆசிரியர் யார்?    மெக்காதர் ஐயர்

65. ஸ்ரீமத் பாகவத புராண ஆசிரியர் யார்?    ஆரியப் புலவர்

66. சேதுப்புராண ஆசிரியர் யார்?    நிரம்பவழகிய தேசிகர்

67. தணிகை புராண ஆசிரியர் யார்?    கச்சியப்ப முனிவர்

68. உறையூர்ப் புராண ஆசிரியர் யார்? மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை

69. ஆற்றூர்ப் புராண ஆசிரியர் யார்?                "

70. திருக்குருந்தைப் புராண ஆசிரியர் யார்?            "

71. திருப்பெருந்துறைப் புராண ஆசிரியர் யார்?    "

72. விளத்தொட்டிப் புராண ஆசிரியர் யார்?                "

73. அஷ்டப்பிரபந்த ஆசிரியர் யார்?    பிள்ளை பெருமாள் ஐயங்கார்

74. உமறுபாஷாவின் புத்த சரித்திரம் & நாகூர்ப் புராண ஆசிரியர் யார்?                                                                                குலாம் காதிறு புலவர்

75. மிதிறு சாநா காப்பியத்தின் ஆசிரியர் யார்?    மதாறு சாகிபு புலவர்
இராஜ நாயகத்தின் ஆசிரியர் யார்?    வண்ணக்களஞ்சியப்புலவர்

77. குத்பு நாயகம் [முகியிதீன் புராணம்] ஆசிரியர் யார்?    "

78. தீன் விளக்கத்தின் ஆசிரியர் யார்?    "

79.  குத்பு நாயகத்தின் ஆசிரியர் யார்?  சேகனாப் புலவர்
                                  செய்கு    அப்துல்    காதிர்    நயினார்    லெப்பை

80. திருக்கு அரணப்புராண ஆசிரியர் யார்?    சேகுநாப்புலவர்

81. திருமணி மாலையின் ஆசிரியர் யார்?            "

22. புதுக்குச்சம் என்கிற புராணத்தின் ஆசிரியர் யார்?    "

83. முகைத்தீன் புராண ஆசிரியர் யார்?    பதுருத்தின் புலவர்

84. அறிபு நாயகத்தின் ஆசிரியர் யார்?                    "

85. பூங்காவனப் பிரளயத்தின் ஆசிரியர் யார்?   சாமுவேல் வேதநாயகம் தாமஸ்


Wednesday, June 16, 2021

அற இலக்கியம்/ பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

  1. பதினெண் கீழ்க்கணக்கு- இதில் உள்ள கணக்கு என்பதன் பொருள் யாது? நூல்

2. கீழ் என்பதன் பொருள் யாது? குறைந்த அடி அளவு கொண்டவை

3. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை 'அடிநிமிர்பில்லாச் செய்யுள்' தொகுதி எனக் குறிப்பது? பன்னிரு பாட்டியல்

4. அடி குறைந்த கெழ்கணக்கு நூல்கள் அம்மை என்னும் அழகு பெற்றுவரும் எனக் கூறும் நூல்? தொல்காப்பியம்

5. பதினெண் கீழ்க்கணக்கு என்னும் வழக்கை முன்வைத்தவர்கள்? பேராசிரியர்இ மயிலைநாதர்

6. அறம் பேசும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எத்தனை? 11

7. புறம் பேசும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எத்தனை ? 1

8. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் எத்தனை? 6 

9. கருத்துக்கள் எண்ணிக்கை அடிப்படையில் பெயர் பெற்ற நூல்கள் எத்தனை? 4 - நாண்மணிக்கடிகை, திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்சமூலம்

10. பாடல் எண்ணிக்கையால் பெயர் பெற்ற நூல்கள் எத்தனை? 8 - பழமொழியைப் பழமொழி நானூறு எனக் கொண்டால் 9 

11. நாலடியாரின் வேறு பெயர் என்ன? நாலடி நானூறுஇ வேளாண் வேதம்

12. நாலடியாரில் எத்தனைப்பாடல்கள் உள்ளன? 400

13. நாலடியாரைத் தொகுத்தவர் யார்? பதுமனார்

14. நாலடியாரின் கடவுள் வாழ்த்தைப் பாடியவர் யார்? பதுமனார்

15. நாலடியார் எத்தனைப் பால்களாகப் பகுக்கப்பட்டுள்ளது? அறம், பொருள், இன்பம் / 12இயல்கள்

16. நாளடியாரில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன? 40

17. நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்? ஜி.யு.போப்

18. நாலடியாரின் காலம் எது? கி.பி 7ஆம் நூற்றாண்டு

19. நாலடியாரின் காலத்தைக் கணிக்க உதவுவது எது? பெருமுத்திரையர்கள் பற்றிய குறிப்பு

20. எத்தனை சமண முனிவர்களில் தப்பியவை நாலடியார் என நம்பப்படுகிறது? 8000 சமண முனிவர்கள்

21. நாலடியாரை மேற்கோளாகக் கையாண்ட உரையாசிரியர்கள் யாவர்? பரிமேலழகர், நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார்

22. சமண முனிவர் நக்கீரரால் நாலடியார் இயற்றப்படதாகக் கூறும் நூல் எது? யாப்பருங்கல உரை . ஆனால் இதற்கு சான்று இல்லை. யாரும் இக்கருத்தை ஏற்கவில்லைஸ


23. நாலடியார் எத்தனைப் பால்களைக் கொண்டது? 3


24. அறத்துப்பால் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது? 13


25. பொருட்பாலில் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது? 24/26


26. காமத்துப்பாலில் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது? 3/1


27. நாலடியாரின் வேறு பெயர்கள் யாவை? நாலடி, நாலடி நானூறு, வேளாண் வேதம்


28. நாலடியாருக்கு பழைய உரைகள் எத்தனை உள்ளன? 3 பதுமனார், தருமர், பெயர் தெரியாத உரை


29. நாலடியாருக்கு முதலில் உரை எழுதி அதிகாரங்கள் வகுத்தவர் யார்? பதுமனார்


30. மூவர் உரையையும் தொகுத்து பதிப்பித்தவர்கள் ? சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்



31. 1812 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட நாலடியார் உரைகளை எழுதியவர்கள் யாவர்? புதுவை நயனப்ப முதலியார், புதுவை அ.வேதகிரி முதலியார்


32. திருமயிலை முருகேச முதலியார் நாலடியாரை உரை எழுதி வெளியிட்ட காலம் யாது? 1874


33. கோமளபுரம் இராசகோபால் பிள்ளை உரை வெளியான ஆண்டு யாது? 1904


34. [களத்தூர்] வேதகிரி முதலியார் நாலடியாருக்கு உரை எழுதிய காலம் யாது? 1908/1913


36. வை.மு. சடகோப இராமாநுசாச்சாரியார் நாலடியாருக்கு உரை எழுதிய ஆண்டு யாது? 1921


37. வே. நாராயண ஐயர் நாலடியாருக்கு உரை எழுதிய காலம் யாது? 1924


38. திருக்குறளுக்கு இணையாகக் கொள்ளப்படும் அறநூல் எது? நாலடியார்


39. திருக்குறளையும், நாலடியாரையும் இணைத்துப் பேசும் சொலவடைகள் யாவை?

             “ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி”, “பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்”, “நாலும் இரண்டும் கற்றவனிடம் வாயடியும், கையடியும் செல்லாதடி”


40. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஆர் விகுதி பெற்ற இலக்கியம் யாது? நாலடியார்


41. நாலடியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்? ஜி.யு. போப்


42. பெருமுத்திரையர்கள் குறித்தக் குறிப்பு உள்ள இலக்கியம் யாது? நாலடியார்


43. பெருமுத்தரையர்களின் காலம் யாது? கி.பி. 7ஆம் நூற்றாண்டு 


44. பெருமுத்தரையர்கள் யாருடைய காலத்தில் சிற்றரசர்களாக இருந்தார்கள்? பரமேசுர வர்ம பல்லவன்


45. முத்தரையர்கள் எந்நாட்டைச் சேர்ந்தவர்கள்? பாண்டி நாடு - சிற்றரசர்கள்


46. நாலடியாரை வேளாண் வேதம் என்பதைச் சுட்டுவது யாது? தனிப்பாடல்


47. நான்மணிக்கடிகையை இயற்றியவர் யார்? விளம்பிநாகனார்


48. கடிகை என்பதன் பொருள் யாது? கட்டுவடம், ஆபரணம், துண்டு


49. நான்மணிக்கடிகையில் கடவுள் வாழ்த்து யாரைப் பற்றியவை? திருமால் பற்றிய இரு பாடல்கள்


50. நாண்மணிக்கடிகையில் பாடல் தோறும் எத்தனைக் கருத்துக்கள் எடுத்தாளப்படும்? 4


51. இன்னாநாற்பதில் எத்தனை இன்னாதவைப் பேசப்படுகின்றன? 164


52. இனியவைநாற்பது எக்கடவுளுக்கு வாழ்த்துப் பாடுகிறது? சிவன், திருமால்


53. திரிகடுகம் இதில் உள்ள கடுகம் என்பது யாது? காரம்


54. ஒவ்வொரு பாடலிலும் மூன்றாமடியில் இம்மூன்றும், இம்மூவர் எனக் குறிக்கப்படும் இலக்கியம் யாது? திரிகடுகம்


55. ஆசாரக்கோவையில் பயின்றுள்ள பாவகைகள் யாவை? குறள் வெண்பா, குறள் சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா


56. ஆசாரக்கோவையில் எந்தெந்த வடநூற்களின் கருத்துக்கள் உள்ளன? சக்ர ஸ்மிருதி, கௌதம சூத்திரம், போதாயன தர்ம சூத்திரம் 


57. ஆசாரக்கோவையை சார்புநூலுக்குச் சான்றாகச் சுட்டும் ஆசிரியர் யார்? இலக்கணவிளக்கப் பாட்டியல்


58. பழமொழியின் வேறு பெயர் யாது? பழமொழி நானூறு


59. பழமொழியில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன? 34


60. தொல்காப்பியர் பழமொழியை எவ்வாறு சுட்டுகிறார்? முதுசொல்


61. நீதிநூல்களில் அதிகமான வரலாற்றுச் செய்திகளைக் கொண்ட இலக்கியம் யாது? பழமொழி 


62. பழமொழி நானூறில் காட்டப்படும் மன்னர்கள் யாவர்? கரிகாற் சோழன், பொற்கைப் பாண்டியன், பாரி, பேகன், மனுநீதிச் சோழன்


63. முன்றுறை அரையனாரில் உள்ள அரையன் குறிப்பது? அரசன்


64. முன்றுரை அரையனார் பெயாpல் உள்ள முன்றுரை என்பது? முன்துறை என்னும் ஊர்ப் பெயர்


65. முன்துறை பாண்டிய நாட்டில் உள்ள ஊர் எனக் குறிப்பவர் யார்? செல்வ கேசவராய முதலியார்


66. பழமொழியை முதன் முதலில் பதிப்பித்தவர் யார்? செல்வ கேசவ முதலியார்


67. காரியாசானின் ஆசிhpயர் யாரென பாயிரம் சுட்டுகிறது? மாக்காயன்


68. காரியாசானின் ஒருசாலை மாணாக்கர் யார்? கணிமேதாவியார்


69. சிறுபஞ்சமூலம் காட்டும் வழுதுணை என்பது யாது? கத்திரிக்காய்


70. பெரும்பஞ்சமூலம் பற்றிக் குறிக்கும் நூல் யாது? பதார்த்தகுண சிந்தாமணி, பொருள் தொகை நிகண்டு 


71. முதுமொழிக்காஞ்சியின் பா யாது? குறள் தாழிசை


72. முதுமொழிக் காஞ்சியில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன? 10


73. முதுமொழிக்காஞ்சியின் ஒவ்வொரு பத்தும் எவ்வாறு தொடங்கும்? “ஆர்கலி உலகத்து…”


74. ஓவ்வொரு பாடலிலும் “ஆர்கலி உலகத்து” என்னும் தொடரைக் கொண்டுகூட்டிப் பொருள் கொள்ளும் நூல் எது?  முதுமொழிக் காஞ்சி


75. ஆத்திச்சூடிக்கு முன்னோடி யாது? சிறுபஞ்சமூலம்


76. ஓன்பதைத் தொண்டு எனக் குறிக்கும் பதினெண்கீழ்க்கணக்கு நூல் யாது? ஏலாதி


77. உடலின் அடிப்படையான தொழில்கள் என்று ஏலாதி சுட்டுவன எத்தனை? 6


78. தூக்கணாங் குருவி, பட்டுப்புழு, எறும்பு தேனீக்களின் கூட்டை எந்த அறிஞராலும் உருவாக்க முடியாது எனக் குறிக்கும் நூல் யாது? சிறுபஞ்சமூலம் 


79. சூல், சூல்கொண்ட பெண்கள் குறித்துக் கூறும் நூல் யாது? சிறுபஞ்மூலம்



80. நான்மணிக்கடிகையின் காலம் யாது? கி.பி. 4 ஆம் நூற்றாண்டு


81. நான்மணிக்கடிகையின் ஆசிரியர் யார்? விளம்பிநாகனார்


82. நான்மணிக்கடிகையின் பாடல்களின் எண்ணிக்கை யாது? 104 + 2


83. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் மருந்துப் பொருள் பெயரினால் ஆன நூல்கள் எத்தனை? 3


84. ஏலாதியின் பாடல் எண்ணிக்கை யாது? 80 + 2


85. ஐந்திணை அறுபது எனப்படும் நூல் எது? கைந்நிலை


86. ஐந்திணை எழுபதின் ஆசிரியர் யார்? மூவாதியார்


87. 5 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூல்கள் எத்தனை? 11


88. சிறுபஞ்சமூலத்தில் உள்ள வழுதுணை என்பது யாது? கத்திரிக்காய்


89. திரிகடுகத்தில் உள்ள கடுகம் என்பதன் பொருள் யாது? காரம்


90. ஏலாதியில் உள்ள மருந்துப் பொருட்கள் யாவை? ஏலம், இலவங்கம், நாககேசரம்


91. நாலடியாரில் உள்ள பால்கள் எத்தனை? 400


92. நாலடியாரின் காலம் யாது? 7ஆம் நூற்


93. சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் பெயர் யாது? காhpயாசான்


94. ஏலாதி ஆசிரியர் யார்? கணிமேதாவியார்


95. ஐந்திணை எழுபதின் ஆசிரியர் யார்? மூவாதியார்


96. ஐந்திணை அறுபதின் ஆசிரியர் யார்? புல்லங்காடனார்


97. கார்நாற்பதின் ஆசிரியர் யார்? மதுரை கண்ணங்கூத்தனார்


98. களத்து என முடியும் பாடல்களைக் கொண்ட இலக்கியம் யாது? களவழிநாற்பது


99. ஆசாரக்கோவையில் எத்தனைப் பாடல்கள் உள்ளன? பெருவாயின் முள்ளியார்


100. திரிகடுகத்தின் காலம் யாது? கி.பி. 5 நூற்றாண்டு


101. திரிகடுகத்தின் ஆசிரியர் யார்? நல்லாதனார்


102. திரிகடுகத்தின் பாடல்களின் எண்ணிக்கை யாது? 100 ñ 1


103. பழமொழியின் காலம் யாது? கி.பி. 5 ஆம் நூற்றாண்டு


104. பழமொழியின் ஆசிரியர் யார்? முன்றுரையரையனார்


105. ஆசாரக்கோவை காலம் யாது? கி.பி. 5 ஆம் நூற்றாண்டு



106. ஆசாரக்கோவை பாடல்களின் எண்ணிக்கை யாது? 100


107. முதுமொழிகாஞ்சியின் காலம் யாது? கி.பி. 5 ஆம் நூற்றாண்டு


108. முதுமொழிகாஞ்சியின் ஆசிரியர் யார்? கூடலூர் கிழார்


109. முதுமொழிகாஞ்சியின் பாடல்களின் எண்ணிக்கை யாது? கி.பி. 5 ஆம் நூற்றாண்டு


110. ஐந்திணை எழுபதின் ஆசிரியர் யார்? மூவாதியார்


111. ஐந்திணை ஐம்பதின் ஆசிரியர் யார்? மாறன்பொறையனார்


112. கழுமலம் என்னும் இடத்தில் நடைபெற்ற போர் குறித்த நூல் எது? களவழி நாற்பது


113. தூக்கணாங்குருவி கூடு குறித்த செய்தி இடம்பெறும் நூல் எது? சிறுபஞ்சமூலம்


114. கபிலரும், கபில தேவரும் வேறாவர்கள் என்றவர் யார்? பண்டாரத்தார்


115. “ஊனைத்தின்று ஊனைப் பெருக்காமை” குறித்துப் பேசும் இலக்கியம் யாது? இனியவை நாற்பது


116. வெல்வது வேண்டின் வெகுளி விடல் - இவ்வரி இடம்பெறும் பாடல் யாது? நான்மணிக்கடிகை


117. நீராடல், நீரருந்தல், உண்ணல் போன்ற சிறு சிறு செயல்களுக்கான ஒழுக்கங்களைக் கூறும் இலக்கியம் யாது? ஆசாரக்கோவை


118. அந்தணர் வீட்டில் நாய், கோழி நுழையக் கூடாது எனக் கூறும் நூல்? இன்னாநாற்பது


119. கணவன், மனைவி வாழ வேண்டிய நெறிகளை 35 பாடல்களில் எடுத்துரைக்கும் இலக்கியம்? திரிகடுகம் 


120. “நூற்கியைந்த சொல்லின் வனப்பே வனப்பு” - என்ற வரி இடம்பெற்ற நூல் யாது? சிறுபஞ்சமூலம்


121. மன்னுதல் வேண்டின் இசைநடுக - என்னும் இடம் யாது? நான்மணிக்கடிகை


122. மனைக்கு விளக்கம் மடவாள் - எனக் கூறும் இலக்கியம் யாது? நான்மணிக்கடிகை


123. வானூர் மதியம் போல் வைகலும் தேயும் - சிறியார் நட்பு எனக் கூறும் நூல் எது? நாலடியார்


124. “வேளாண் என்பான் விருந்திருக்க உண்ணாதான்” - எனக் கூறும் நூல் யாது?  திரிகடுகம்


125. பிறருக்கு உணவிடுதலின் சிறப்பை அதிகப் பாடல்களில் குறிக்கும் நூல் யாது? ஏலாதி


126. முப்பெரும் கடவுளருக்கு கடவுள் வணக்கம் கூறும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் யாவை? இனியவை நாற்பது 


127. "குலவிச்சைக் கல்லாமல் பாகம்படும்” -இத்தொடர் இடம்பெற்றுள்ள இலக்கியம் யாது? பழமொழி


128. முப்பெரும் அறநூல்கள் யாவை?  திருக்குறள், நாலடியார், பழமொழி


129. வச்சிரநந்தியின் சங்கம் அமைந்திருந்த இடம் யாது? மதுரை


130. பழமொழியைத் தொல்காப்பியர் எவ்வாறு சுட்டுகிறார்? முதுசொல்


131. கரிகாற்சோழன் நரை வேடமிட்டு நீதியளித்ததைச் சுட்டும் நூல் யாது? பழமொழி


132. ஆத்திச்சூடிக்கு முன்னோடியாக விளங்கும் நூல் யாது? முதுமொழிக்காஞ்சி


133. உடலின் அடிப்படைத் தொழில்கள் ஆறு என சுட்டும் இலக்கியம் யாது? ஏலாதி

பக்தி இலக்கியம் - வைணவம்

   பொய்கையாழ்வார் பிறந்த ஊர் எது? காஞ்சியில் உள்ள திருவெஃகாவில் பிறந்தார். பொய்கையாழ்வார் பெயர் காரணம் யாது? தாமரைப் பொய்கையில் பிறந்ததால் ப...