- பத்துப்பாட்டில் ஆற்றுப்படை நூல்கள் எத்தனை? 5
- பத்துப்பாட்டில் புறம் சார்ந்த நூல்கள் எத்தனை? 6
- பத்துப்பாட்டில் அகம் சார்ந்த நூல்கள் எத்தனை? 3
- பத்துப்பாட்டில் ஆற்றுப்படை அல்லாத புற நூல் எது? மதுரைக்காஞ்சி
- பத்துப்பாட்டில் அகமும் புறமும் கலந்த நூல் எது? நெடுநல்வாடை
- பத்துப்பாட்டு நூல்கள் எப்பாவால் ஆனவை? ஆசிரியப்பா
- பத்துப்பாட்டைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை? எட்டு
- பத்துப்பாட்டில் இரு பாடல்களைப் பாடிய புலவர்கள் யாவர்? நக்கீரர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்
- நக்கீரர் பாடிய பத்துப்பாட்டு நூல்கள் எவை? திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை
- கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் பத்துப்பாட்டு நூல்கள் எவை? பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை
- ஆற்றுப்படை நூல்களை நிரல்படுத்துக. திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, மலைபடுகடாம்
- பத்துப்பாட்டிற்கு முழுமையாக உரை செய்தவர்? நச்சினார்க்கினியர்
- மறைமலை அடிகள் ஆராய்ச்சி உரை எழுதிய பத்துப்பாட்டு நூல்கள் எவை? பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு
- பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே" - யார் கூற்று? மனோன்மணீயம் சுந்தரனார்
- "சான்றோர் உரைத்த தண்டமிழ்த் தெரியல்" என பத்துப்பாட்டு குறித்துக் கூறியவர் யார்? நச்சினார்க்கினியர்
- ஊரால் பெயர் பெற்ற பத்துப்பாடு நூல்கள் எவை? மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை
- பத்துப்பாட்டில் பாட்டு எனப் பெயரிடப்பட்ட நூல்கள் எத்தனை? 2 [முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு]
- பத்துப்பாட்டு முதலும், முதலுமாக இருப்பவை? ஆற்றுப்படை
- பத்துப்பாட்டில் மிக நீண்ட பாடல் எது? மதுரைக்காஞ்சி [782 அடிகள்]
- பத்துப்பாட்டில் சிறிய பாடல் எது? முல்லைப்பாட்டு [103 அடிகள்]
- வஞ்சிப்பா விரவிய பத்துப்பாட்டு நூல்கள் யாவை? பொருநராற்றுப்படை, மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை
- ஆற்றுப்படை இலக்கணம் கூறும் நூல் ? தொல்காப்பியம் [பு.திணையியல்]
- அற்றுப்படுத்துவோர் யார் யார்? கூத்தர், பாணர், பொருநர், விறலி
- ஆற்றுப்படையில் மிக நீண்ட நூல் எது? மலைபடுகடாம் [ 583]
- ஆற்றுப்படையில் சிறிய நூல் எது? பொருநராற்றுப்படை [248]
- ஆற்றுப்படையின் [பத்துப்பாட்டின்] கடவுள் வாழ்த்து? முருகாற்றுப்படை
- திருமுருகாற்றுப்படையின் ஆசிரியர் யார்? நக்கீரர்
- திருமுருகாற்றுப்படையின் அடிகள் எத்தனை? 317
- திருமுருகாற்றுப்படையின் வேறு பெயர்? முருகு, புலவராற்றுப்படை
- அற்றுப்படுத்தப்படும் தலைவனின் பெயரால் அமைந்த நூல் எது? திருமுருகாற்றுப்படை
- பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ள பத்துப்பாட்டு நூல் எது? திருமுருகாற்றுப்படை
- திருமுருகாற்றுப்படையின் தலைவன் யார்? முருகன்
- திருமுருகாற்றுப்படை உருவானது குறித்த செவிவழி செய்தி யாது? நக்கீரரைப் புடைத்துத் திண்ண கற்கிமுகி பூதம் சிறைவைக்க அதனிடமிருந்து காக்க முருகனிடம் வேண்டுவது.
- ஒருவரைப்போல வேடமிட்டுப் பாடும் கலைஞர் யார்? பொருநர்
- பொருநர்கள் எத்தனை வகைப்படுவர்? 2[ஏர்க்களம் பாடுபவர், போர்க்களம் பாடுபவர்]
- பரணி பாடும் கலைஞர் யார்? பொருநர்
- பொருநராற்றுப்படையில் குறிக்கப்படும் புலவர்கள் எவற்றைப் பாடுவர்? போர்க்களம் பாடும் பொருநர்
- பொருநராற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்? கரிகாற்பெருவளத்தான்
- பொருநராற்றுப்படையின் ஆசிரியர் யார்? முடத்தாமக்கண்ணியார்
- பொருநராற்றுப்படை எத்தனை அடிகளைக் கொண்டது? 248
- ஆசிரியப்பாவோடு வஞ்சியடிகளும் விரவப்பெற்ற ஆற்றுப்படை நூல் எது? பொருநராற்றுப்படை
- பொருநராற்ருப்படையில் எந்தப் போரின் வெற்றி குறிப்பிடப்பட்டுள்ளது? வெண்ணிப் போர்
- தாய்வயிற்றில் இருக்கும்போதே அரசு ஏறிய மன்னன் யார்? கரிகால் பெருவளத்தான்
- பொருநராற்றுப்படையில் பெண்ணின் பாதத்திற்கு வழங்கப்பட்டுள்ள உவமை யாது? ஓடிக்கலைத்த நாயின் நாக்கு
- சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்? ஓய்மானாட்டு நல்லியக்கோடன்
- சிறுபாணாற்றுப்படையின் ஆசிரியர் யார்? நல்லூர் நத்தத்தனார்
- சிறுபாணாற்றுப்படை எத்தனை அடிகளைக் கொண்டது? 269
- பண் பாடுவோ எவ்வாறு அழைக்கப்படுவர்? பாணர்
- பாணார் எத்தனை வகைப்படுவர்? 3 [இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர்]
- யாழ்ப்பாணர் எத்தனை வகைப்படுவர்? 2[பேரியாழ்ப் பாணர், சிறிய யாழ்ப்பாணர்]
- சிறுபாணாற்றுப்படையில் ஆற்றுப்படுத்தப்படும் பாணர்? சிறுபாண்ர்
- கடையெழு வள்ளல்களின் கொடைத்திறம் பாடும் ஆற்றுப்படை எது? சிறுபாணாற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படையில் இடம்பெரும் ஊர்கள்? வஞ்சி, உறையூர், மதுரை, ஆமூர், வேலூர், மாவிலங்கை
- இமயமலையில் வில் பொறித்த குட்டுவன் வரலாறு கூறும் நூல் எது? சிறுபாணாற்றுப்படை
- "தமிழ்னிலை பெற்ற தாங்கரும் மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை" - என மதுரையைப் போற்றும் நூல்? சிறுபாணாற்றுப்படை
- பெரும்பாணற்றுப்படையின் ஆசிரியர் யார்? கடியலூர் உருத்திரங்கண்ணனார்
- பெரும்பாணாற்றுப்படை பாட்டுடைத் தலைவன் யார்? இளந்திரையன்
- பெரும்பாணற்றுப்படை எத்தனை அடிகள் கொண்டது? 500
- ஐந்நில மக்களின் இயல்பு, விருந்தோம்பல் பேசும் நூல்? பெரும்பாணாறு
- கலங்கரை விளக்கம் குறித்து பேசும் ஆற்றுபடை நூல் யாது? பெரும்பாணாற்றுப்படை [ நீர்ப்பாயல் துறையில் அமைக்கப்பட்டுள்ளது]
- பெரும்பாணாற்றுப்படையில் சிறப்பிக்கப்படும் ஊர்? காஞ்சி
- மலைபடுகடாமின் ஆசிரியர் யார்? பெருங்குன்றூர் கௌசிகனார்
- மலைபடுகடாமின் பாட்டுடைத் தலைவன் யார்? நன்னன்
- மலைபடுகடாமின் பாடல் அடிகள் எத்தனை? 583
- மலைபடுகடாமில் ஆற்றுப்படுத்தப் படும் கலைஞர்? கூத்தர்
- மலைபடுகடாமின் வேறு பெயர்? கூத்தராற்றுப்படை
- மலைபடுகடாம் என பெயர் வரக்காரணம்? மலையில் எழும் ஓசைகளைப் பாடுவதால்
- மலைபடுகடாமில் மலையும், அருவியும் எதனால் உவமிக்கப்படுகிறது? மலை - யானை, அருவி - யானையின் மதநீர்
- கடாம் என்பதன் பொருள் என்ன? ஓசை
- மலைபடுகடாமில் எத்தனை வகையான ஓசைச் சுட்டப்படுகிறது? 20
- இசை மருத்துவம் பற்றிக் கூறும் ஆற்றுப்படை நூல் எது? மலைபடுகடாம்
- முல்லைப்பாட்டின் ஆசிரியர் யார்? நப்பூதனார்
- முல்லைப்பாட்டு எத்தனை அடிகளைக் கொண்டது? 103
- முல்லைப்பாட்டு ஆசிரியரின் ஊர் எது? காவிரிப்பூம்பட்டினம்
- முல்லைப்பாட்டு பெயர்க்காரணம் என்ன? முல்லைத் திணையைப் பாடுவது
- முல்லைப்பாட்டின் வேறு பெயர்? முல்லை
- நெஞ்சாற்றுப்படை எனப்படும் நூல் எது? முல்லைப்பாட்டு
- முல்லைப்பாட்டில் திருமாலின் எந்த அவதாரம் காட்டப்படும்? வாமனன்
- யானையைப் பயிற்றுவிக்கப் பயன்படுத்திய மொழியாக முல்லைப்பாட்டுக் கூறும் மொழி எது? வடமொழி
- தலைவன் உறங்கும் இடத்திற்குக் காவலாக பேச இயலாதவரை அமர்த்தியதைக் கூறும் நூல்? முல்லைப்பாட்டு
- பாசறையில் பெண்கள் பணி செய்தமையைக் கூறும் இலக்கியம்? முல்லைப்பாட்டு
- குறிஞ்சிப்பாட்டின் ஆசிரியர் யார்? கபிலர்
- குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள அடிகள் எத்தனை? 261
- குறிஞ்சிப்பாட்டு எழுந்ததன் நோக்கம் என்ன? ஆரிய மன்னன் பிரகதத்தனுக்குத் தமிழ் அறிவிக்க.
- குறிஞ்சிப்பாட்டு எழுந்த நோக்கம் குறித்துக் கூறும் உரையாசிரியர் யார்? நச்சினார்க்கினியர்
- குறிஞ்சிப்பாட்டின் மற்றொரு பெயர் யாது? பெருங்குறிஞ்சி
- குறிஞ்சிப்பாட்டை பெருங்குறிஞ்சி என்பவர் யார்? நச்சினார்க்கினியர்
- குறிஞ்சிப்பாட்டில் குறிக்கப்படும் மலர்கள் எத்தனை? 99
- குறிஞ்சிப்பாட்டு 99 மலர்களை எத்தனை அடிகளில் கூறுகிறது? 34
- 'கபிலர் இயற்கையை வர்ணிப்பதில் உலகிலேயே சிறந்தவர் ஆகின்றார்' எனக் கூறியவர் யார்? தனிநாயக அடிகள்
- குறிஞ்சிப்பாட்டிற்கு ஆய்வுரை செய்தோர் யாவர்? எஸ்.ஆர்.மார்க்க பந்து சர்மா, தமிழண்ணல்
- குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள புணர்ச்சி வகைகள்? களிறுதரு புணர்ச்சி, புனல்தரு புணர்ச்சி
- கோவை இலக்கியம் தோன்ற வித்தாக அமைந்த நூல்? குறிஞ்சிப்பாட்டு
- பட்டினப்பாலையை இயற்றியவர் யார்? கடியலூர் உருத்திரங்கண்ணனார்
- பட்டினப்பாலை எத்தனை அடிகளைக் கொண்டது? 301
- பட்டினப்பாலையில் ஆசிரியப்பாவால் ஆன அடிகள் எத்தனை? 138
- பட்டினப்பாலையில் வஞ்சிப்பாவால் ஆன அடிகள் எத்தனை? 163
- பட்டினப்பாலையின் வேறு பெயர் என்ன? வஞ்சி நெடும்பாட்டு
- பட்டினப்பாலையை வஞ்சிப்பா எனக்குறிப்பவர் யார்? இளம்பூரணர்
- பட்டினப்பாலையில் சிறப்பிக்கப்படும் மன்னன் யார்? கரிகாற்சோழன்
- பட்டினப்பாலையில் அகப்பொருள் கூறும் அடிகள் எத்தனை? 6
- பழந்தமிழர் வணிக அறம், கடல் வாணிகம், துறைமுகச் செயல்பாடு குறித்துக்கூறும் நூல் எது? பட்டினப்பாலை
- பட்டினப்பாலைக்கு சிறந்த ஆய்வுரை எழுதியோர் யாவர்? மறைமலையடிகள், இராகவையங்கார [சாமி சிதம்பரனார் உரையுள்ளது]
- பட்டினப்பாலையைப் பாடியதற்காக உருத்திரங்கண்ணனுக்கு, கரிகாற் பெருவளத்தான் அளித்த பரிசு என்ன? பதினாறு நூறாயிரம் பொற்காசு
- மதுரைக்காஞ்சியின் ஆசிரியர் யார்? மாங்குடி மருதனார்
- மாங்குடி மருதன் எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறார்? மதுரைக்காஞ்சிப் புலவர், காஞ்சிப் புலவனார்
- மதுரைக்காஞ்சியின் பாட்டுடைத் தலைவன் யார்? பாண்டியன் நெடுஞ்செழியன்
- மதுரைக்காஞ்சியின் பாடல் அடிகள் எத்தனை? 782
- மதுரைக்காஞ்சியின் மையப்பொருள் என்ன? நிலையாமை
- மதுரைக்காஞ்சி சிறப்புப் பெயர் என்ன? காஞ்சிப்பாட்டு[காஞ்சித்திணை], கூடற்றமிழ்
- மதுரையின் வணிக செயல்பாடுகளைக் கூறுவது? மதுரைக்காஞ்சி
- மதுரைக்காஞ்சியில் நிலையாமை குறித்துப் பேசும் பாடலடிகள் எத்தனை? 428
- தொல்காப்பிய காஞ்சி விளக்கப்பட்டு எனக் குறிக்கப்படுவது எது? மதுரைக்காஞ்சி
- 'ஆறு கிடந்தன்ன அகன் நெடுந்தெரு' என மதுரை நகரத் தெரு குறித்துக் கூறும் நூல் எது? மதுரைக்காஞ்சி
- மதுரை அல்லங்காடியில் எழும் ஓசைகளுக்கு உவமையாகக் கூறப்படுவது எது? கடற் பறவைகளின் ஓசை
- நெடுநல்வாடையின் ஆசிரியர் யார்? நக்கீரர்
- நெடுநல் வாடையின் பாட்டுடைத் தலைவனாகக் குறிக்கப்படுபவர் யார்? பாண்டிய நெடுஞ்செழியன்[இது முடிந்த முடிவு அல்ல. இதனைப் புற நூல் என்போர் கருத்து. ஆனால் பலர் இதனை அக நூல் என்றே கூறுகின்றனர். அதனாலே இது அகப்புற நூல் எனப்படுகிறது]
- நெடுநல்வாடை எத்தனை அடிகளைக் கொண்டது? 188
- நெடுநல் வாடையை 'சிற்பப்பாட்டு' எனச்சிறப்பித்தவர்? தமிழண்ணல்
- 'நெடுநல்வாடை ஒரு பெருஞ்சுரங்கம். நக்கீரர் கண்ட சுரங்கம். தமிழ்ச்சுரங்கம்' என நெடுநல் வாடையைப் போற்றியவர்? திரு.வி.க.
- நெடுநல்வாடைக்குக் கோதண்ட பாணி இயற்றிய உரையின் பெயர் யாது? புனையா ஓவியம்
- நெடுநல் வாடைக்கு உரை செய்தோர்? கோதண்டபாணி, செ. வெங்கடாச்சலச் செட்டியார்
Wednesday, May 5, 2021
சங்க இலக்கியம்: பத்துப்பாட்டு - வினாவங்கி
சங்க இலக்கியம்: எட்டுத்தொகை நூல்கள் - வினாவங்கி
- எட்டுத்தொகை நூல்களின் மற்றொரு பெயர் என்ன? எண்பெருந்தொகை
- எட்டுத்தொகை நூல்களில் உள்ள செய்யுள்களின் எண்ணிக்கை? 2352
- எட்டுத்தொகை நூல்களில் கடவுள் வாழ்த்து உட்பட பாடல்களின் எண்ணிக்கை? 2358
- எட்டுத்தொகை நூல்களில் அகப்பொருள் பற்றியன எத்தனை? 5 [நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு]
- எட்டுத்தொகையில் புறம் பற்றிய நூல்கள் எத்தனை? 2[புறனானூறு, பதிற்றுப்பத்து]
- அகமும், புறமும் கலந்த எட்டுத்தொகை நூல் எது? பரிபாடல்
- நானூறு பாடல்கள் கொண்ட எட்டுத்தொகை நூல்கள் எத்தனை? 4 [நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு]
- பதிக முன்னோடியாக அமைந்த எட்டுத்தொகை நூல்கள் யாவை? ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து
- பாவால் பெயர் பெற்ற நூல்கள் எத்தனை? கலித்தொகை, பரிபாடல்
- எண்ணிகையால் பெயர் பெற்ற எட்டுத்தொகை நூல்கள் எத்தனை? 2
- ஆசிரியப்பாவால் அமைந்த எட்டுத்தொகை நூல்கள்? 6
- முழுமையாகக் கிடைக்கும் எட்டுத்தொகை நூல்கள் எத்தனை? 4 [நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை, அகநானூறு]
- நானூறு பாடல்கள் அடங்கிய எட்டுத்தொகை நூல்கள் யாவை? 4 [நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு]
- முதற்பகுதியும், இறுதியும் கிடைக்காத எட்டுத்தொகை நூல்கள் யாவை? 2 [பதிற்றுப்பத்து, பரிபாடல்]
- நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்? பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
- நற்றிணையைத் தொகுத்தவர் யார்? தெரியவில்லை
- குறைவான அடிகளோ அதிக அடிகளோ இல்லாமல் இடைநிகரவான அடிகளைக் கொண்டு இருப்பதால் நற்றிணை எனப்பட்டிருக்கலாம் என்றவர் யார்? டாக்டர் ந. சஞ்சீவி
- நற்றிணை பாடல் எண்ணிக்கை எத்தனை? 400+1 [401]
- நற்றிணை பாடிய புலவர்களின் எண்ணிக்கை யாது? 187
- நற்றிணை அடிவரையறை - 9 - 12
- நற்றிணையில் எத்தனை மன்னர்கள் குறிக்கப்படுகின்றனர்? 10
- நற்றிணையில் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் எத்தனைபேர்? 5 [கொட்டம்பலவனார், தும்பிசேர்கீரனார், விழிக்கண்பேதைப் பெருங்க் கண்ணனார், தேய்புரிப் பழங்கயிற்றனார், தனிமகனார்]
- நற்றிணையில் பாடிய பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை? 9
- குறுந்தொகை எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறது? நல்ல குறுந்தொகை, குறுந்தொகை நானூறு
- குறுந்தொகை பாடல்களின் எண்ணிக்கை? 400+1 [401]
- குறுந்தொகை அடியெல்லை - 4 - 8
- குறுந்தொகையில் 9 அடி உள்ள பாடல் எது? 307
- குறுந்தொகையில் பாடல் இயற்றிய புலவர்கள் எத்தனை பேர்? 203
- குறுந்தொகையைத் தொகுத்தவர் யார்? பூரிக்கோ
- குறுந்தொகையைத் தொகுப்பித்தவர் யார்? தெரியவில்லை
- முதலில் தொகுக்கப்பட்ட நூல் எது? குறுந்தொகை
- குறுந்தொகையில் வரலாற்றுப் பதிவுகள் உள்ள பாடல்கள் பாடிய புலவர் யார்? பரணர்
- குறுந்தொகையில் உரையாசிரியர்களால் மேற்கோளாக எடுத்தாளப்பட்ட பாடல்களின் எண்ணிக்கை? 236
- திருவிளையாடற் புராணத்தில் தருமி வரலாற்றை அறிய உதவும் பாடல்? குறுந்தொகை - கொங்குதேர் வாழ்க்கை
- குறுந்தொகையில் அதிகப் பாடல் பாடிய பெண்பாற் புலவர்கள்? நன்னாகையார், வெள்ளிவீதியார்
- குறுதொகையில் பாடல் இயற்றிய புலவர்களில் ஊர் பெயரோடு பெயர் பெற்றப் புலவர்கள் ? 4 [அள்ளூர் நன்முல்லையார், அரிசில் கிழார், கூடலூர் கிழார், மதுரை நல்வெள்ளியார்]
- குறுந்தொகையில் தொழிலால் பெயர் பெற்றப் புலவர்கள் எத்தனை பேர்? 3 [ ஆசிரியன் பெருங்கண்ணனார், கொல்லன் அழிசி, வள்ளுவன் பெருஞ்சாத்தனார்]
- குறுந்தொகையில் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் எத்தனை பேர்? 18 [அணிலாடு முன்றிலார், குப்பைக் கோழியார், வில்லக விரலினார், விட்ட குதிரையார், மீனெறி தூண்டிலார், நெடுவெண்ணிலவினார்]
- குறுந்தொகையில் வடமொழி பெயர்கொண்ட புலவர்கள்? 6 [உருத்திரன், சண்டிலியன், உலோச்சன், மாதிரத்தன், பவுத்திரன், பிரமந்தன்]
- தொடரால் பெயர் பெற்றவர்கள் மிகுதியும் உள்ள நூல் எது? குறுந்தொகை
- ஐங்குறுநூறைத் தொகுப்பித்தவர் யார்? யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் பெருவழுதி
- ஐங்குறுநூறைத் தொகுத்தவர் யார்? கூடலூர் கிழார்
- ஐங்குறுநூறு பாடல்களின் எண்ணிக்கை? 500+1 [501]
- ஐங்குறுநூறு அடிவரையறை? 3 - 5
- ஐங்குறுநூற்றைப் பாடிய புலவர்கள்? 5 புலவர்கள்
- ஐங்குறுனூறு பதிகம், சதகத்திற்கு முன்னோடி
- திணைக்கு ஒரு புலவர் பாடியுள்ளனர்
- ஐங்குறுநூற்றில் மருதம் பாடிய புலவர் யார்? ஓரம்போகியார்
- ஐங்குறுநூற்றில் நெய்தல் பாடிய புலவர் யார்? அம்மூவனார்
- ஐங்குறுநூற்றில் குறிஞ்சி பாடிய புலவர் யார்? கபிலன்
- ஐங்குறுநூற்றில் பாலை பாடிய புலவர் யார்? ஓதலாந்தையார்
- ஐங்குறுநூற்றில் முல்லை பாடிய புலவர் யார்? பேயனார்
- ஐங்குறுநூற்றில் அந்தாதித் தொடையில் அமைந்த பத்து எது? தொண்டிப் பத்து
- ஐங்குறுநூற்றில் முதல் பத்து எது? வேட்கைப் பத்து
- பத்துப்பாடல்களிலும் முதல் அடியும் மூறாவது அடியும் ஒன்றாக இருக்கும் பத்து எது? வேட்கைப்பத்து
- தோற்றவர் புல் மேயச் செய்த வரலாற்றைக் காட்டும் நூல்? ஐங்குறுநூறு ["வாழி ஆதன் வாழி அவினி/ பகைவர் புல்ஆர்க: பார்ப்பார் ஓதுக"]
- ஐங்குறுநூற்றில் தொடரால் பெயர் பெற்றவர் யாரும் இல்லை
- ஐங்குறுநூற்றில் அதிகம் குறிக்கப்படு ஆதன் என அழைக்கப்பட்டோர் யார்? ஆவியர் குடியினைச் சேர்ந்தவர்கள்
- கலித்தொகையைத் தொகுத்தவர் யார்? நல்லந்துவனார்
- கலித்தொகையைச் சிறப்பிக்கும் வரிகள் : 'கற்றறிந்தார் ஏத்தும் கலி, கல்விம்வலார் கண்ட கலி, நனிஆர்வம் பொங்கும் கலி
- கலித்தொகைப் பாடல் எண்ணிக்கை? 149+ 1 [150]
- கலித்தொகையைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை? 5
- கலித்தொகை அடிவரையறை? 11 - 80
- கலித்தொகையில் பாலையைப் பாடியவர்? பெருங்ககுங்கோ
- கலித்தொகையில் குறிஞ்சித் திணை பாடலைப் பாடியவர் யார்? கபிலன்
- கலித்தொகையில் மருதம் பாடியவர் யார்? மருதன் இளநாகனார்
- கலித்தொகையில் முல்லைத் திணை பாடியவர் யார்? நல்லுருத்திரன்
- கலித்தொகையில் நெய்தல் பாடியவர் யார்? நல்லந்துவனார்
- ஓரங்க நாடகம் போன்ற அமைப்பினைக் கொண்ட சங்க இலக்கியம்? கலித்தொகை
- அகநானூறைத் தொகுத்தவர் யார்? உருத்திர சன்மனார்
- அகநானூற்றைத் தொகுப்பித்தவர் யார்? பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
- அகநானூற்றின் பாகுபாடுகள் யாவை? 3 [களிற்றியானைநிரை, மணிமிடை பவளம், நித்திலக்கோவை
- அகநானூறு சிறப்புப் பெயர்கள் யாவை? நெடுந்தொகை, அருந்தொகை நானூறு, அகப்பாட்டு
- அகநானூற்றுப் பாடல் எண்ணிக்கை? 400+1
- அகநானூற்றுப் பாடல் பாடிய புலவர்களின் எண்ணிக்கை? 158
- அகநானூற்று அடியெல்லை யாது? 13 - 31
- சங்கப் பாடல்களை இயற்றிய புலவர்களின் எண்ணிக்கை? 473 [30 பெண்பாற் புலவர்கள்]
களிற்றியானைநிரைப் பாடல்களின் எண்ணிக்கை? 1 - 120- மணிமிடைப் பவளம் பாடல்களின் எண்ணிக்கை? 121 - 300
- நித்திலக்கோவை பாடல்களின் எண்ணிக்கை? 301 - 400
- அகநானூற்றுப் பாலைத்திணை வைப்பு - 1,3,5 [ஒற்றைப்படை]- 200
- அக. நா- குறிஞ்சித் திணை வைப்பு - 2, 8, 12, 18,.... [80]
- அகநானூறு முல்லை வைப்பு - 4, 14, 24 [40]
- அகநானூறு மருதம் வைப்பு - 6, 16, 26 [40]
- அகநானூறு நெய்தல் வைப்பு - 10, 20, 30 [40]
- அகநானூற்றின் செம்பாதி எத்திணைப் பாடல்கள் அதிகம்? பாலை
- அகநானூற்றில் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள்? கீரனார், ஊட்டியார்
- தமிழரி திருமண முறையைக் காட்டம் பாடல்? அகம் - 86
- சங்க காலத்தில் குடவோலை தேர்தல் முறை இருந்ததைக் காட்டும் பாடல்? அகம் - 77
- பெண்கள் உப்பிற்கு விலையாக நெல்லை வழங்கியமைக் காட்டும் பாடல்? 140
- குறிஞ்சிப்பண் பாடலைக் கேட்ட யானை திணையை உண்ண மறந்து தூங்குதல்
- அகநானூற்றில் இடம் பெற்ற புலவர்களின் எண்ணிக்கை? 10 [அஃதை, அகுதை, அதியமான் நெடுமான் அஞ்சி, அத்தி, ஆதிமந்தி, எவ்வி, எழினி, உதியஞ்சேரலாதன், கரிகால் வளவன், தலயாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
- அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால்
- நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் என வௌவால் கனவு காணும் அறிவியல் உண்மையைச் சுட்டும் இலக்கியம் நற்றிணை
- வௌவாலை நற்றிணை எவ்வாறு சுட்டுகிறது? வாவல்
- நெடும்பல்லியத்தை என்னும் பெண்பாற் புலவரின் பெயர் உணர்த்துவது? நீண்ட, பல, இசைக்கருவிகள் இசைப்பவள்
- வினை முடித்துத் திரும்பும் தலைவனை ஓரேர் உழவனுடன் ஒப்பிடும் இலக்கியம்- குறுந்தொகை
- பகைவர் தோல்வியைக் குறிக்க புல் மேய்வது போல குப்புற விழச் செய்வதைப் 'பகைவர் புல் ஆர்க' என்னும் அடி இடம்பெற்றுள்ள இலக்கியம் ஐங்குறுநூறு
- பண்டையத்தமிழர் திருமண முறைகள் குறித்த அகநானூற்றின் பாடலைப் பாடியவர் - நல்லாவூர்கிழார்
- திணை உண்ண வந்த யானை குறத்தியின் பாடல் இனிமையில் மயங்கி உறங்கியதாகக் கூறும் இலக்கியம் - அகநானூறு
- அகநானூறு குறிக்கும் தேர்தல் முறை - குடவோலை முறை
- செல்வக்கடுங்கோ வாழியாதன் தன்னை புரோசு மயக்கி எனத் தன்னை அழைத்துக் கொள்வதில் பெருமை கொண்டான்
- ஓகத்தூர் என்பதன் பொருள்- ஓத்திர நெல் மிகுதியாக விளையும் ஊர்
- ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பொருள் ஆட்டத்தில் சிறந்தவன், கவர்ந்து செல்லப்பட்ட வருடை ஆடுகளை மீட்டுக் கொணர்ந்தமையால்
- பதிற்றுப்பத்தில் பாடல் முடிவில் துறை, வண்ணம், தூக்கு, பாடல் பெயர் குறிக்கப்பட்டுள்ளன.
- அந்தாதியின் முன்னோடி இலக்கியங்கள் - ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து
- பதிற்றுப்பத்தை பிற்காலத்து நூல் என்றவர்? கே. என்.சிவராசப்பிள்ளை
- பதிற்றுப்பத்தின் ஒவ்வொரு பத்துப் பாடலின் இறுதியில் அமைந்திருப்பது? பதிகம்
- பதிற்றுப்பத்துப் பதிகங்களின் போக்கு மெய்க்கீர்த்திகளின் போக்கை ஒத்துள்ளதாகக் கூறியவர்? தமிழண்ணல்
- பதிற்றுப்பத்தின் சிறப்புப் பெயர் என்ன? இரும்புக் கடலை
- கைம்பெண்ணை புறநானூறு எவ்வாறு அழைக்கிறது? பருத்திப் பெண்டீர் [ பருத்தி நூற்கும் பெண்]
- பரிபாடலில் குறிக்கப்படும் எண் பெயர்கள் 0 - பாழ்,1/2 - பாகு, 9 - தொண்டு ["பாழ் என கால் என பாகு என ஒன்று என .....தொண்டு என"]
- உன்ன மரம் தழைத்தால் போரில் வெற்றிகிட்டும் எனக் கூறும் இலக்கியம்? பதிற்றுப்பத்து
- ஏறுதழுவல் குறித்துப் பேசும் இலக்கியம்? கலித்தொகை [முல்லைக்கலி]
- "என்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த தேர் அன்னோன்" யார்? அதியமான் நெடுமானஞ்சி [ஔவை]
- "ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவதன்று உலகத்து இயற்கை" என்றவர் - இடைக்குன்றூர் கிழார்
- "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்றவர் கனியன் பூங்குன்றனார்
- "பாலொடு வந்து கூழொடு பெயரும் /ஆடுடை இடைமகன்" என பண்டமாற்று முறை குறித்துக்கூறும் பாடல் - குறுந்தொகை
- நண்டின் கண் வேம்பின் அரும்புபோல இருக்கும் எனக் கூறும் நூல் -ஐங்குறுநூறு
- தன் பார்ப்பைத் தானே திண்ணும் விலங்காக ஐங்குறு நூறில் குறிக்கப்படும் விலங்கு - முதலை
- ஐங்குறுநூறில் அந்தாதித்தொடையில் அமைந்த பத்து- தொண்டிப்பத்து
- இமயம், குமரிக்கு இடைப்பட்ட இடத்தை ஆட்சி செய்தவன் - இமயவரம்பன்
சங்ககாலம் - வினாவங்கி
- முச்சங்கங்கள் குறித்து விரிவாக பேசும் நூல் எது? இறையனார் அகப்பொருள்
- இறையனார் அகப்பொருள் தற்போது எவ்வாறு வழங்கப்படுகிறது? இறையனார் களவியல்
- இறையனார் களவியல் உரையை இயற்றியவர் யார்? நக்கீரர்
- நக்கீரரின் இறையனார் களவியல் உரைக்கு எழுத்து வடிவம் தந்தவர் யார்? முசிறியைச் சேர்ந்த நீலகண்டர்
- இறையனார் களவியல் உரை எழுத்து வடிவம் பெற்ற காலம்? 8ஆம் நூற்
- இறையனார் களவியல் உரையின் காலம் 8ஆம் நூற் எனக் கூறக் காரணம்? பாண்டிக்கோவையிலிருந்து மேற்கோள் எடுத்தாளப்பட்டுள்ளது.
- இறையனார் களவியலில் எத்தனை நூற்பாக்கள் உள்ளன? 60
- முச்சங்கங்கள் குறித்து பேசும் சில்கப்பதிகார உரையாசிரியர் யார்? அடியார்க்கு நல்லார்
- ஏட்டுச்சுவடியில் முச்சங்கங்கள் குறித்து கூறியவர் யார்? செவ்வூர் சிற்றம்பலக் கவிராயர்
- முதல் சங்கம் இருந்ததாக நம்பப்படும் இடம்? தென்மதுரை
- முதல் சங்கம் இருந்ததாகக் கூறப்படும் காலம்? 4440
- முதல் சங்கத்தில் வீற்றிருந்த புலவர்களின் எண்ணிக்கை? 549
- முதல் சங்கத்தில் பாடிய புலவர்கள்? 4449
- முதல் சங்கத்தைப் புரந்த அரசர்களின் எண்ணிக்கை? 89 [காய்சினவழுதி முதல் கடுங்கோன் ஈறாக]
- குறிப்பிடற்குரிய முதற்சங்க நூல்கள் யாவை? முதுநாரை, முதுகுருகு, பரிபாடல், களரியாவிரை
- இடைச் சங்கம் இருந்ததாக நம்பப்படும் இடம்? கபாடபுரம்
- இடைச்சங்கம் இருந்ததாகக் கூறப்படும் காலம்? 3700
- இடைச்சங்கத்தில் வீற்றிருந்த புலவர்களின் எண்ணிக்கை? 59
- இடைச்சங்கத்தில் பாடிய புலவர்கள்? 3700
- இடைச்சங்கத்தைப் புரந்த அரசர்களின் எண்ணிக்கை? 59 [வெண்டேர்ச் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக]
- குறிப்பிடற்குரிய இடைச்சங்க நூல்கள் யாவை? அகத்தியம், மாபுராணம், பூதபுராணம், பெருங்கலி, வெண்டாலி, அகவல், குருகு, வியாழமாலைக்
- கடைச் சங்கம் இருந்ததாக நம்பப்படும் இடம்? மதுரை
- கடைச்சங்கம் இருந்ததாகக் கூறப்படும் காலம்? 1850
- கடைச்சங்கத்தில் வீற்றிருந்த புலவர்களின் எண்ணிக்கை?49
- கடைச்சங்கத்தில் பாடிய புலவர்கள்?449
- கடைச்சங்கத்தைப் புரந்த அரசர்களின் எண்ணிக்கை? 49 [முடத்திரு மாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி ஈறாக]
- குறிப்பிடற்குரிய கடைச்சங்க நூல்கள் யாவை? பத்துப்பாட்டு, எட்டுத்தொகை [தொல்காப்பியம், அகத்தியம்- இலக்கண நூல்கள்]
- "சங்கமுகத்தமிழே, சங்கமலித் தமிழ்" எனக் குறிப்பவர் யார்? திருமங்கையாழ்வார்
- "நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நற்கனகக்கிழி தருமிக்கருளி னோன்காண்" -யாருடைய கூற்று? திரு நாவுக்கரசர்
- சங்கத்தமிழ் மாலை முப்பதும் எனக் குறிப்பிடுபவர் யார்? ஆண்டாள்
- "தலைச்சங்கப் புலவனார் தம்முன்" - யார் கூற்று? சேக்கிழார்
- "சங்கத்தமிழ் மூன்றும் தா -எனக் குறிப்பவர் யார்? ஔவையார்
- "தமிழ்ச் சங்கம் சேர்கிற் பீரேல்" - யார் கூற்று? கம்பர்
- "மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்" எனக்குறிக்கும் செப்பேடு எது? சின்னமனூர்ச் செப்பேடு
- சின்னமனூர்ச் செப்பேட்டின் காலம் எது? கி.பி. 10ஆம் நூற்றாண்டு
- சங்கம் இருந்தமையைக் குறிக்கும் மேலைனாட்டார் குறிப்புகள் எவை? தாலமி, பிளைனி, பெரிப்ளுஸ் குறிப்புகள்
- சங்கம் இருப்பதைக் குறிக்கும் இலங்கை வரலாற்று நூல்கள் யாவை? மகாவம்சம், இராசாவளி, இராசரத்னாகிரி
- சங்கங்கள் இல்லை என்பவர்கள் யாவர்? கே, என். சிவராசப்பிள்ளை, பி.டி. சீனிவாச அய்யங்கார், எஸ். வையாபுரிப்பிள்ளை, நமச்சிவாய முதலியார்
- சங்கம் இல்லை எனக் கூறுவோர் வைக்கும் காரணங்கள் யாவை? சகரம் மொழி முதலில் வராது, கடவுளர் சங்கங்களில் தமிழ் ஆய்ந்ததாகக் கூறுதல், முதல் இரண்டாம் சங்க புலவர் கால அளவு, புலவர் எண்ணிக்கை கர்பனை போன்ற தோற்றம், சங்க இலக்கியத்தில் சங்கம் இல்லாமை
- முதல், இரண்டாம் சங்கங்கள் பொய் கடைச்சங்கம் உண்மை என்றவர் யார்? கே. ஏ. நீலகண்ட சாஸ்திர்யார், சேஷகிரி சாஸ்திரியார், இராமச்சந்திர தீட்சிதர்
- முச்சங்கங்களும் இருந்தது உண்மை என்றவர்கள் யாவர்? உ.வே.சாமிநாத ஐயர், கா. அப்பாதுரையார், தேவநேயப்பாவணர், கா. சுப்பிரமணிய பிள்ளை
- தாலமி, பிளைனி ஆகியோர் குறிப்புக்களில் சங்கம் பற்றிய குறிப்பு உள்ளது, பெரிபுளூஸ் என்னும் நூலில் சங்கம் பற்றியக் குறிப்பு உள்ளது.
Subscribe to:
Posts (Atom)
பக்தி இலக்கியம் - வைணவம்
பொய்கையாழ்வார் பிறந்த ஊர் எது? காஞ்சியில் உள்ள திருவெஃகாவில் பிறந்தார். பொய்கையாழ்வார் பெயர் காரணம் யாது? தாமரைப் பொய்கையில் பிறந்ததால் ப...
-
நற்றிணை: "நீரின்று அமையா உலகம் போல்த் தம்மின்று அமையா நம்நயந்து அருளி" - கபிலர் [1 : குறிஞ்சி: தலைவி ] ...
-
1. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார் ? இளங்கோவடிகள் 2. சிலப்பதிகாரத்தின் காலம் எது ? கி . பி . 2 ஆம் நூற்றாண்டு 3. ...
-
பொய்கையாழ்வார் பிறந்த ஊர் எது? காஞ்சியில் உள்ள திருவெஃகாவில் பிறந்தார். பொய்கையாழ்வார் பெயர் காரணம் யாது? தாமரைப் பொய்கையில் பிறந்ததால் ப...